Friday 22 April 2016

வற்றல் மண்டி/இட்லி மண்டி






தேவையான பொருட்கள்
தட்டப்பயறு – 1 கை பிடி
.கிழங்கு – 1
அவரைவற்றல் – 1 கை
கத்தரிவற்றல் – 1 கை
கூழுவற்றல் – 1கை
மாவற்றல் - 7
புளி – எலுமிச்சை
உப்பு - ருசிக்கு
பச்சைமிளகாய் – 3 அ 5
சின்ன வெங்காயம் – 15 அ 18
பூண்டு – 10
அரிசி கழுவிய நீர் – 2 கோப்பை

தாளிக்க வேண்டியவை
எண்ணெய்  – 3 மே.க
வரமிளகாய் – 1 அ 2
கடுகு – ½ தே.க
உ.பருப்பு – ¾ தே.க
க.பருப்பு – ¾ தே.க
சீரகம் – ½ தே.க
கருவேப்பிலை – சிறிது

செய்முறை
எல்லா வற்றல்களையும் ஒரு அலசு அலசி விட்டு சிறிது தண்ணீர் சேர்த்து ஊறவிடவும்.

தட்டப் பயற்றை முதல் நாளே ஊறப்போட்டு விட்டு, இப்போது உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.



                                       
                                            தாளிக்கவும்.











பச்சைமிளகாயை வாசம் வர வதக்கவும்.










வெங்காயம் பூண்டை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்









வேக வைத்த தட்டைப் பயிற்றையும்,












வற்றல்களையும் சேர்த்து விட்டு 
புளிக்கரைசலைவிடவும். 








அரிசி கழுவிய மேல் நீரை வேண்டுமளவு ஊற்றவும். 





வற்றல்களில் உப்பு உள்ளதால் பார்த்து சேர்க்கவும். அதே போல் மாவற்றலிலும் புளிப்பு இருப்பதால் புளியின் அளவையும் பார்த்துக் கொள்ளவும்.

ஒருவிசில் விட்டு இறக்கவும். பின் கெட்டியாக இருக்கும் அரிசி கழுவிய அடி நீரை சேர்த்து ஒரு கொதி வரவும் இறக்கவும்.



 
செட்டி நாட்டு கல்யாண வீடுகளில் இட்லிக்கு தொட்டுக் கொள்ளவென்று இந்த 

இட்லி மண்டி வைப்பார்கள்







21 comments:

  1. ஆஹா படமே அருமையாக இருக்கின்றதே பெருமூச்சு மட்டுமே விட முடியும்
    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. வரும் போது அம்மாவிடம் சொல்லி சாப்பிட்டு விடலாம் சகோ நன்றி

      Delete
  2. இட்லி மண்டியா
    நான் இப்பதான் இது பத்தி
    தெரிந்து கொள்கிறேன்...
    எங்கள் வீட்டில் இட்லி
    என்றால் சாம்பார்,சட்னிதான்
    இல்லை என்றால் மூக்குப்பொடிதான்...

    இடலி மண்டி அருமையா இருக்கும் போலையே...!!
    சமைத்து பார்க்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. எங்கள் வீட்டில் இட்லி
      என்றால் சாம்பார்,சட்னிதான்
      இல்லை என்றால் மூக்குப்பொடிதான்..//

      மூக்குப்பொடி.....போட்டு சாப்பிடாம சமாளித்து விடுவீர்களோ....:))


      நன்றி சகோ

      Delete
  3. அருமையான இட்லி மண்டி. நான் தேவகோட்டை செட்டிநாடு கல்யாண வீடுகளில் சாப்பிட்டு இருக்கிறேன். செட்டி நாடு குடும்ப நண்பர் வீடுகளில் சாப்பிட்டு இருக்கிறேன்.
    செய்முறை விளக்கம் அருமை.

    ReplyDelete
  4. இட்லி மண்டி என்பதை இப்போதுதான் அறிந்தேன்.

    ReplyDelete
  5. இட்லிக்கு
    சாம்பார், ஷட்னி என்றாலும்
    இட்லிக்கு மண்டி என்றும்
    ஒன்றுண்டு என நன்றே
    செய்முறையோடு வழிகாட்டினீர்கள்!

    ReplyDelete
  6. ஆமாம்.. செட்டிய வீட்டு விஷேசங்களில் சாப்பிட்டிருக்கிறேன்...
    அருமையாக இருக்கும்.

    ReplyDelete
  7. தட்டைப் பயறு.. காரமணிப் பயறு என்பதுவும் இதுதானே!..

    நல்லதொரு குறிப்பு.. வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. இரண்டும் ஒன்றுதான் ஐயா...

      Delete
    2. கீதா சொல்லி விட்டார்கள்...ஆம்..ஒன்று தான்

      நன்றி ஐயா

      Delete
  8. ரசம் சாம்பாஇல் பருப்புடன் மிச்சமாதைத ரசமண்டி சாம்பார் மண்டி என்று கூரக்கேட்டிருக்கிறேன் இட்லி மண்டியும் அதுபோல் ஏதாவது மிச்சமானதைச் சேர்த்து செய்வது என்று நினைத்தேன் செட்டிநாட்டு மண்டி கேள்விப்படாதது

    ReplyDelete
  9. ஹப்பா புதிய சமையல் குறிப்பு!! ஹிஹிஹி (இல்ல எப்பவும் நான் ஏதாவது இதே அதே இது அது என்று டிப்ஸ் என்று கொடுப்பேனா அதான்.....)குறித்துக் கொண்டுவிட்டேன்...பகிர்வுக்கு மிக்க நன்றி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு...எல்லா குறிப்புகளும் அத்துபடி சகோ. அப்பாடா....தெரியாத ஒன்னு சொல்லிட்டேன்:) நன்றி கீதா

      Delete
  10. வெல்ல மண்டி ,வெங்காய மண்டி இருப்பது தெரியும் ,இட்லி மண்டி இருப்பது இப்போதான் தெரிகிறது :)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா....4 மண்டி ...வந்து விட்டது மேலே...ஐயா 2, நீங்க இப்போ 2 .....நான் ஒன்னு...5 ஆச்சு..:)

      Delete
  11. வித்தியாசமான பதிவு சகோ.

    ReplyDelete
  12. புதுமையான பேர் இட்லிமண்டி.செய்து பார்க்கின்றேன்))

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ.....செய்து பார்த்து ருசியுங்கள்...நன்றி

      Delete