Monday 18 April 2016

பரிவார முழக்கம் எங்கே...?






ஆனந்தமாய்...!
குஞ்சு பொரிக்க விடவில்லை...
அவசரமாய்...!
இயந்திரத்தில் பொரிக்கிறார்கள்...


தாய்யரியாக் குஞ்சு !
குஞ்சறியா தாய் !
முட்டையிடும் பணி தாய்க்கு 
அவ்வளவே...

வாழ்வின் தொடக்கம்
வியாபரச் சந்தையிலே...



தாய் கோழிகள் குஞ்சுகளை

தன் வழி நடத்திச் சென்று

தன் இடமாம் குப்பை மேட்டை
கலக்கி உண்டு விளையாடி...
கும்மாளமிட்ட தெல்லாம்...?
வெறிச்சோடி போயினவே...

கழுகரசன் நிழல் கண்டு
தன் இறக்கையில்
குஞ்சணைத்து -
பகைவர்கள் உண்டென
கற்ப்பிக்கும் வித்தையென்ன...!




பெருமை நடை போடும்
தாயின் பின்
குட்டிகளின் சிறுநடையும் 
கொக்...கொக்...என 
பரிவார முழக்கம் எங்கே...?






15.12.2010 இல் எழுதிய கவிதை இது.


21 comments:

  1. பரிவாரம் எல்லாம் பக்குவம் தவறாமல்
    பிரியாணியாக குருமாவாக கொல்லைப்புற
    அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கின்றதே!..

    (பாவம்... கோழிக்கும் குடும்பம் உண்டு தானே!)

    ReplyDelete
    Replies
    1. பரிவாரம் எல்லாம் பக்குவம் தவறாமல்
      பிரியாணியாக குருமாவாக கொல்லைப்புற
      அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கின்றதே!//

      அமாம் ஆமாம்....

      (பாவம்... கோழிக்கும் குடும்பம் உண்டு தானே!)//

      அதானே....

      Delete
  2. வெளியுலகம் பார்க்காமலே மனித வயிறுக்குள் அடக்கமாகி விடுகின்றன பிராய்லர் கோழிகள் ,பாவம்தான் !இதற்குத்தான் கோழி குருடாயிருந்தாலும் குழம்பு ருசியா இருக்கணும்னு சொல்றது :)

    ReplyDelete
    Replies
    1. வெளியுலகம் பார்க்காமலே மனித வயிறுக்குள் அடக்கமாகி விடுகின்றன பிராய்லர் கோழிகள் ,பாவம்தான்//

      பிராய்லர் கோழிகள் பாயில் ஆகிவிடுகின்றன....

      Delete
    2. வெளியுலகம் பார்க்காமலே மனித வயிறுக்குள் அடக்கமாகி விடுகின்றன பிராய்லர் கோழிகள் ,பாவம்தான்//

      பிராய்லர் கோழிகள் பாயில் ஆகிவிடுகின்றன....

      Delete
  3. மறுபதிப்பு என்றாலும் மனம் கவர்ந்த கவிதை!

    ReplyDelete
    Replies
    1. மறுபதிப்பு இல்லை ஐயா

      முன்பு எழுதியது இப்போது பதிவிட்டு இருக்கிறேன் ஐயா

      Delete
  4. மனிதன் அவசரம் அவசரமாய்
    இயற்கையில் செயற்கை
    செய்கிறான் அதனால்தான் என்னமோ
    சீக்கிரமாய் இயற்கை எய்கிறான் போல....

    ReplyDelete
    Replies
    1. வாஸ்தவம் தான் அஜய்

      Delete
  5. கழுகரசன் நிழல் கண்டு
    தன் இறக்கையில்
    குஞ்சணைத்து -
    பகைவர்கள் உண்டென
    கற்ப்பிக்கும் வித்தையென்ன...//


    அருமையான கவிதை.

    காலம் மாறி போச்சு.
    கிராமங்களில் சில இடங்களில் பரிவாரமுழக்கம் பார்க்க முடிகிறது.
    அதிகமாய் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. கிராமங்களில் சில இடங்களில் பரிவாரமுழக்கம் பார்க்க முடிகிறது.//

      நாம் பார்த்தோம்...ஆனால் வருங்காலப் பிள்ளைகள் பார்க்க முடியாது என ஏக்கம் எனக்குண்டு

      Delete
  6. பாவம்.... இதுதான் இயந்திர வாழ்வு!

    ReplyDelete
  7. //தாய்யரியாக் குஞ்சு !
    குஞ்சறியா தாய் !
    முட்டையிடும் பணி தாய்க்கு
    அவ்வளவே...

    வாழ்வின் தொடக்கம்
    வியாபரச் சந்தையிலே...//

    சூப்பரான இந்த வரிகள் .... என் மனதைக்கலங்க வைக்கின்றன.

    மிகவும் அழகான சிந்தனை. அற்புதமான ஆக்கம். பொருத்தமான படங்கள். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா

      Delete
  8. //ஆனந்தமாய் !
    குஞ்சு பொரிக்க விடவில்லை
    அவசரமாய் ! //
    இயந்திரத்தில் பொரிக்கிறார்கள்

    முதல் வரியே அருமை சகோ முழுக்க முழுக்க வேதனையைத் தந்த வரிகள் கவிதை நன்றாகத்தானே எழுதுகின்றீர்கள் அதுவும் 2010 தில் எழுதியது வாழ்த்துகள் சகோ தொடருங்கள் எனக்கும்கூட கவிதை எழுதும் ஆசைகள் பிறக்கின்றது 100 வகைகளாய்....
    த.ம.வ.போ

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் தான் அசத்தி தள்ளுகிறீர்களே சகோ...நிறைய எழுதுங்கள்....

      Delete
  9. அருமையான வரிகள் சகோ/உமையாள்...ஆம் பரிவார முழக்கம் எங்கே??!!! எல்லாம் கூண்டுக்குள்ளே!!

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் கூண்டுக்குள்ளே!!//

      ஆமாம்...சகோ

      Delete
  10. வணக்கம்
    அம்மா.

    மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் இரசித்தேன் வாழ்த்துக்கள் த.ம9
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ரூபன் நன்றி

      Delete