Monday 20 June 2016

தாயற்ற வீடு




தாயற்ற வீடு
தவம் செய்கிறது நான் வர
சில மணி நேரங்கள்
மெளன பாஷை பரிமாற்றங்கள்

மனம் மலர்ந்திருக்க
மலர் முகம் தானே விரிந்திருக்க
பயம் ஏனோ கரைந்து போக
பலம் ஏனோ அரியாசனம் ஏற

பெற்றோருடன் வசித்தது போலுணர்வு
உயிரற்ற வீடு என யார் சொன்னது
உள்ளுணர்வு உறவாடிய மறையுயிர்
உலாவும் அதை மனக் கண்ணேயறியும்


15 comments:

  1. //உயிரற்ற வீடு என யார் சொன்னது//

    அதானே...

    அருமை. சமீபத்தில் தஞ்சை / மதுரை சென்றபோது நாங்கள் குடியிருந்த வீட்டைப் பார்த்து வந்தோம்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்ந்த வீட்டை பார்க்கையில் அது நம் வசந்தத்தை நினைவு படுத்துகிறது இல்லையா...

      Delete
  2. குடிகொண்டிருக்கும் வீடுகள் மனிதர்களைச்சுமந்தும், குடி கொண்டிருந்த வீடுகள் அவர் நினைவு சுமந்துமாய் உயிருடனேயே இருக்கிறது,

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோ முற்றிலும் உண்மை

      Delete
  3. அருமை.... பாராட்டுகள்.

    ReplyDelete
  4. உயிரற்ற வீடு என யார் சொன்னது
    உள்ளுணர்வு உறவாடிய மறையுயிர்மர்மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் ந ல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. குடிகொண்டிருக்கும் வீடுகள் மனிதர்களைச்சுமந்தும், குடி கொண்டிருந்த வீடுகள் அவர் நினைவு சுமந்துமாய் உயிருடனேயே இருக்கிறது,//


    விமலன் கருத்தை வழி மொழிகிறேன்.
    கவிதை அருமை உமையாள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. உணர்வுபூர்வமான கவிதை...

    மனம் நெகிழ்கின்றது... வாழ்க நலம்!..

    ReplyDelete
  7. அருமை சகோ உயிரோட்டமான வரிகள்
    தமிழ் மணம் 5

    ஆஹா தேவகோட்டை வீடு இந்த முத்தத்தில்தானே திருமணம் நடக்கும் இன்று எல்லோரும் மஹாலை நாடி விட்டார்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆம்..
      சிலர் இப்போதும் வீட்டிலேயே திருமணத்தை நடத்துகிறார்கள்
      சிலர் மண்டபத்திற்கு செல்கிறார்கள்...
      நன்றி சகோ

      Delete
  8. உணர்ச்சியுடன் கூடிய அருமையான எண்ணங்கள் பிரதிபலிக்கும் வீடு உங்கள் கவி வடிவில்..

    ReplyDelete