Friday 3 June 2016

பாசிப்பருப்பு சாம்பார் / Pasipparuppu Sambar






தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - 2 தே.க
மஞ்சள் - தூள் சிறிது
சின்ன வெங்காயம் - 7 அ 8
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1 அ 2
சின்ன  உருளைக்கிழங்கு - 1
கருவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது

தாளிக்க வேண்டியவை

எண்ணெய் - 1 1/2 தே.க
கடுகு - 1/4 தே.க
உ.பருப்பு - 1/4 தே.க
சீரகம் - 1/4 தே.க
வரமிளகாய் - 1
பெருங்காயம் - சிறிது


பாசிப்பருப்பை மஞ்சள் தூள் + 2 சொட்டு எண்ணெய் விட்டு வேகவைத்துக் கொள்ளவும்.







                                             தாளிக்கவும்.




வெங்காயம் + கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.




உ.கிழங்கு + தக்காளி சேர்த்து வதக்கவும்.

வதக்கியவற்றை பருப்புடன் சேர்த்து + உப்பு சேர்த்து 1 விசில் விட்டு இறக்கவும். கொத்தமல்லி சேர்க்கவும்.



 பாசிப்பருப்பு சாம்பாரை இட்லி, தேசை,இடியப்பத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.







13 comments:

  1. பாசிப்பருப்பு அபுதாபிவரை மணக்கின்றதே...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...சந்தோஷம் சகோ நன்றி

      Delete
  2. செய்திருக்கிறோம்.

    :))

    ReplyDelete
  3. நல்ல அருமையான ரெசிபி...பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. சுலபமான செய்முறை. நன்றி.

    ReplyDelete
  5. அருமை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  6. இதே செய்திருக்கிறேன்

    கம கம

    கீதா

    ReplyDelete
  7. இதில் கத்திரிக்காயும் போட்டு செய்வோம் . அதை பச்சடி என்போம்பா :)

    ReplyDelete
  8. #பாசிப்பருப்பு சாம்பாரை இட்லி, தேசை,இடியப்பத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்#
    ஏன் ,சாப்பாத்தியுடன் தொட்டுச் சாப்பிட்டால் நாக்கு வேண்டாம் என்றா சொல்லிவிடப் போகிறது :)

    ReplyDelete
  9. உங்கள் தளத்தை கண்டத்தில் மகிழ்ச்சி ... தனியாக சமத்து சாப்பிடுகிறேன் இனி கொஞ்சம் தப்பித்தேன்

    ReplyDelete