Tuesday 30 August 2016

நெல்லிக்காய் ஊறுகாய் / Gooseberry Pickle




தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் - 1/2 கிலோ
நல்லெண்ணெய் - 200  மி.லி
கடுகு - 3/4 தே.க
உப்பு -   4 1/2 - 5 தே.க
மிளகாய் பொடி -  3 - 4 தே.க
மஞ்சள் தூள் - 1/4 தே.க
கடுகு தூள் - 1/4 தே.க
வெந்தயப் பொடி - 1/2 தே.க





 எண்ணெய் காயவும் கடுகை தாளிக்கவும்.


துண்டுகளாக வகுந்த நெல்லிக்காயை சேர்க்கவும்.


நெல்லிக்காய்   வேக வேண்டும்





வெந்த பின் பொடிகளைப் போட்டு
கிளறி சார விட வேண்டும்


நெல்லிக்காய் சுருண்டு எண்ணெய் கக்கி வரவும் அடுப்பை அணைத்து விட்டு நன்கு ஆறிய பிறகு சுத்தமான நன்கு உலர்ந்த  பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

                                                   நெல்லிக்காய் ஊறுகாய் தயார்.




குறிப்பு

நிறைய நாட்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் ஊறுகாயில் எண்ணெய்   மேலே நிற்க வேண்டும். நெல்லிக்காயும்    நன்கு சுருண்டு வேக வேண்டும்.  கடைசியில்  ஊற்றிய  எண்ணெய் போதவில்லை என்றால் தனியாக எண்ணெய்யை சூடு பண்ணி நெல்லிக்காயில் சேர்த்துக் கொள்ளலாம் ( கண்ணாடி பாட்டிலில் ஊறுகாயை போட்ட பின் சூடான எண்ணெய்யை அதில்   நேரடியாக   ஊற்றக் கூடாது.  ஊறுகாயை பாத்திரத்தில் மாற்றிய பிறகு     அதிலே ஊற்றி கலந்து ஆறிய பின்    கண்ணாடியோ, ரப்பர் பாட்டிலிலோ  போட வேண்டும்- புதியவர்களுக்கு).



சில நாட்களுக்கு என்றால் குறைவான எண்ணையே போதும். நெல்லிக்காய்   பதமாக வெந்தாலும் போதும். குளிர் சாதனப்  பெட்டியில்    வைத்துக் கொள்ளலாம்.


உப்பு, காரம் அதிகம் வேண்டுபவர்கள் இன்னும் சேர்த்துக் கொள்ளலாம்.
       
அன்றாட தேவைக்கு சிறிய அளவில் தனியாக வைத்துக் கொள்ளவும். வாரம் ஒருமுறை பெரிய அளவில் உள்ள ஊறுகாயை கிளறி விடவும்.

ஈரம் இல்லாத  ஸ்பூனை உபயோகிக்கவும்.


இங்கு படத்தில் காட்டியுள்ளது குறைவான அளவு.


14 comments:

  1. இந்த Gooseberry Pickleம் ஜுஸ்பெர்ரி பிஸ்கட் போல் நிச்சயம் ருசியாய் இருக்கும் :)

    ReplyDelete
  2. நல்லதொரு குறிப்பு. எனக்குப் பிடித்த ஊறுகாய்....

    ReplyDelete
  3. இதுவரை நெல்லிக்காயில் ஊறுகாய் சாப்பிட்டதில்லை. வீட்டுக்காரம்மாகிட்ட சொல்லி செய்ய சொல்லுறேன்.

    தீபாவளி படங்களுக்கு: Happy Diwali Images

    ReplyDelete
  4. இங்கே நெல்லிக்காய் கிடைக்கின்றது.. முதலில் வேக வைத்து எடுத்துக் கொண்டு - பிறகு தாளித்து மசாலா சேர்ப்பது வழக்கம்..

    இனிய குறிப்பு.. வாழ்க நலம்..

    ReplyDelete
  5. நெல்லிக்காயில்தான் எத்தனை உபயோகம்? அருமை.

    ReplyDelete
  6. //இங்கு படத்தில் காட்டியுள்ளது குறைவான அளவு.//

    சின்ன நெல்லிக்காய் போன்ற குறைவான அளவாகினும் நிறைவான பதிவு. பாராட்டுகள்.

    http://gopu1949.blogspot.in/2015/01/blog-post_30.html இந்த என் பதிவினில் நான் காட்டியுள்ள நெல்லிக்காய்களையும், நெல்லிக்காய்த் தொக்கினையும், அதற்கு தாங்கள் கொடுத்துள்ள ஏராளமான பின்னூட்டங்களையும், அவற்றிற்கு நான் கொடுத்துள்ள பதில்களையும், திரு. சீனா ஐயா அவர்கள் நம் இருவரையும் பாராட்டி எழுதியுள்ளதையும் இன்று மீண்டும் ஒருமுறை படித்து மகிழ்ந்தேன். எனக்குள் நானே சிரித்துக் கொண்டேன்.

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரி

    அருமையான முறையில் சுவையான நெல்லிக்காய் ஊறுகாய் செய்து காண்பித்து இருக்கிறீர்கள். நானும் முன்பெல்லாம் இதே மாதிரி செய்துள்ளேன். இப்போதெல்லாம் காரம் அதிகம் சேர்ப்பதில்லையாததால், ஊறுகாய்கள் அதிகம் போடுவதில்லை. தங்கள் பதிவை பார்த்ததும், பழைய நினைவுகள் வந்தது. பகிர்ந்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. நாங்கள் செய்வதுதான் ஆயினும்
    சீக்கிரம் கெடாமல் வைத்திருக்க முடியவில்லை
    அதற்கான தங்கள் குறிப்பு நிச்சயம
    எங்களுக்குத் தேவையானது
    பயனுள்ள அருமையான பதிவு
    படங்களுடன் சொல்லிப்போனவிதம் அருமை
    வாழ்த்துக்களுடன்....

    ReplyDelete
  9. 'நெல்லிக்காய் ஊறுகாய் ரொம்ப அட்டகாசமாக இருக்கும். எனக்கு ரொம்பப் பிடித்தது. இதுல வெந்தயப் பொடி சேர்க்கும்போது (மாங்காய் ஊறுகாயைப்போல் இதில் சேர்க்கவேண்டாம் என்று நினைக்கிறேன். மாங்காய் சூடு. அதனால் வெந்தயம். நெல்லிக்காய் குளிர்ச்சி) கசப்பு வந்துவிடும் என்று நினைக்கிறேன். நான் மாங்காய் ஊறுகாய்க்கு கடையில் வாங்கின வெந்தயப் பொடியைப் போட்டேன். கசப்பு வந்துவிட்டது.

    ReplyDelete
  10. அருமையான செய்முறை
    வழிகாட்டல்
    பாராட்டுகள்

    ReplyDelete
  11. 'நீங்கள் சொல்லியபடி 'நெல்லிக்காய் ஊறுகாய் செய்தேன். அருமையாக வந்தது. பாராட்டுக்கள். என் அம்மாவிற்கும், ஹஸ்பண்டுக்கும் தனித் தனியாக ஒரு டப்பா அனுப்பினேன்.

    ReplyDelete
  12. Amla is very healthy fruit that has less fat and high carbohydrates. I have been looking for the Amla pickle for few days, the making process of this pickle is so delicious thank you for that. I have ordered the pickle from Sitara foods which tastes superb.

    ReplyDelete
  13. Wow Thats a traditional recipe and my all time favorite.I can live full day on it looks mouthwatering. nice post.
    Lemon Pickle
    Pure Honey
    Almond Oil
    Coconut Oil
    Kudratkart

    ReplyDelete