Wednesday 31 August 2016

மாங்காய் துவையல்




தேவையான பொருட்கள்

மூக்கு மாங்காய் - 1/2
தேங்காய் - 5 மே.க
வரமிளகாய் - 4
உப்பு - ருசிக்கு
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 1 தே.க

தாளிக்க  வேண்டியவை

எண்ணெய் - 1 மே.க
கடுகு - 1/4 தே.க
உ.பருப்பு - 1/2 தே.க
சீரகம் - 1/4 தே.க



தாளித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்





1 தே.க எண்ணெய் விட்டு மிளகாயை
போட்டு வாசம் வரும் வரை கருகாமல் வறுக்கவும்.





வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்




மாங்காய்+ தேங்காய்+கொத்தமல்லி சேர்த்து 2 வதக்கு வதக்கி அடுப்பை அணைக்கவும்.







ஆறிய  பின்   உப்பு சேர்த்து, அரைக்கவும். சிறித்து தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து தாளித்ததை போட்டு கலக்கவும்.


                                        சூப்பர் சுவையான மாங்காய் துவையல் தயார்....



குறிப்பு

பச்சை மிளகாயையும் சேர்த்துக் கொள்ளலாம்.
மாங்காய் புளிப்பே போதுமானது. ஆகையால் புளி தேவையில்லை.


7 comments:

  1. தோசைக் கூட தேவையில்லை ,இதை அப்படியா சாப்பிடலாம் போலிருக்கே :)

    ReplyDelete
  2. மாங்காய் துவையல் வேறு .... மாங்காய் தொக்கு வேறா ?

    ஏதோவொரு தலைப்புக்கொடுக்க உங்களுக்கு மிகவும் தொக்காப் போச்சு ! :)

    ReplyDelete
  3. துவையல் என்றதும் சாதத்தில் கலந்து சாப்பிடுவது என்று நினைத்தேன். இதுவரை செய்ததில்லை. ஒருமுறை செய்து பார்த்துவிட வேண்டும்.

    ReplyDelete
  4. அருமையான சமையல் சகோ!
    த ம +1

    ReplyDelete
  5. மாங்காய் துவையல் எனக்கு புதிது! நன்றி!

    ReplyDelete
  6. மாங்காய் துவையல், அதுவும் வெங்காயம் சேர்த்து சாப்பிட்டதில்லை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete