Tuesday 23 August 2016

கனா கண்டேன்....





அருவிகள் அனைத்தும் எழுந்திடவே
ஆறுகள் வீரநடை போட்டிடவே
குளங்கள் தளதள ஆடிடவே
குட்டைகள் மளமள பாடிடவே

ஏரிக்கள் ஏலேலோ போட்டிடவே
அணைகள் ஆனந்தக் கூத்தாடிடவே
கால்வாய்க்கள் காலார நடந்திடவே
கம்மாய்க்கள் சலசல இசைத்திடவே

நீர்வளம் நிறைந்திட்ட எங்கள் செல்வ நாடே 
நீவீர் வாழிய வாழியவே
நீவீர் என்றும் வாழிய வாழியவே
நீவீர் வாழிய வாழியவே.




படம் கூகுள் நன்றி



15 comments:

  1. கனவுதான் சகோ/தோழி. நீர்வளம் நிறைந்திட்ட எங்கள் செல்வ நாடே என்று மிக அழகாகச் சொல்லிவிட்டீர்கள் ஆனால் அந்த நீர்தான் இப்போது பிரச்சனையாக இருக்கிறது. ஏரிகள் குளங்கள்ம் அருவிகள் எல்லாம் மாசுபட்டு...என்ன சொல்ல..

    உங்கள் கனவு நனவாகட்டும். உங்கள் கனவு மட்டுமல்ல நல் எல்லோரது கனவும் அதுதானே! இல்லையா..

    ReplyDelete
  2. >>> நீர்வளம் நிறைந்திட்ட எங்கள் செல்வ நாடே
    நீவீர் வாழிய வாழியவே!.. <<<

    அவ்வண்ணமே வாழ்த்துவோம்!..

    ReplyDelete
  3. பிரார்த்தனை அல்லது வாழ்த்து பலிக்கட்டும்.

    ReplyDelete
  4. அழகிய கனவு கண்டுள்ள நீங்களும் ’வாழிய வாழியவே’.

    தங்கள் கனவு விரைவில் நனவாக வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. நல்ல புனைவு பாராட்டுகள்

    ReplyDelete
  6. நதிகளை இணைப்போம் என்று சொல்லி, மத்தியில் ஆட்சிக்கு வந்தவர்களுக்கு உங்களின் கவிதையை காணிக்கை ஆக்குங்கள் !கனவு நனவாகிறதா என்று பார்ப்போம் :)

    ReplyDelete
  7. கனவு காணும் படி ஆனது வலி!
    உங்கள் கனவு கவிதை சுகமே !

    ReplyDelete
  8. உயிர் வாழ உதவுவதும்
    வீட்டில் உண்டு உறங்கவும்
    நாட்டின் பெருண்மிய வளமாகவும்
    இருப்பது நீர்வளமே!

    ReplyDelete
  9. வணக்கம்
    நல்ல கனவு எழுதிய விதம் நன்று வாழ்த்துக்கள் அம்மா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. நல்ல கனவு. பலித்தால் அனைவருக்கும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  11. நல்ல கனவுதான் அப்படியே பலிக்கட்டும்.
    த ம 6

    ReplyDelete
  12. வணக்கம் சகோதரி

    அருமையான கனா கண்டீர்கள்! இந்த நல்ல கனவு பலித்தால் அனைவருக்கும் சுகமே! கனவு நனவாக வாழ்த்துக்கள்!

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  13. ஆனந்த கனவு! பலிக்கட்டும்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete