Thursday 14 August 2014

கிருஷ்ண கானம்

 பாடல் - 17                 
                            ஜெய் கிருஷ்ணா...!!!





கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
ஜெய கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா              கிருஷ்ணா

நந்த முராரி ராதா கிருஷ்ணா
நாளும் நீயே வாராய் கிருஷ்ணா                     கிருஷ்ணா




மீரா போல பாட ஆசை
மீண்டும் கீதம் இசைக்க ஆசை                       கிருஷ்ணா

பூவில் மாலை உனக்கு  சாற்ற
பூமாலை எடுத்து கானம் இசைக்க                    கிருஷ்ணா

கோகுல கண்ணன் ஆட வந்தான்
கோபியர் எல்லாம் வாங்க இங்கே                    கிருஷ்ணா

கனவில் வந்தான் குட்டிக்கண்ணன்
கைபிடித்துக் கூட்டிப்போனான்எங்கோ                 கிருஷ்ணா

சப்பளக் கட்டை ஜதிகள் போட
சலங்கைப் பாதம் ஆட்டம் போட                      கிருஷ்ணா
   
வெட்கம் தவிர்த்து பாட எழுந்தேன்
வேட்கை கொண்டு ஆடதுணிந்தேன்                   கிருஷ்ணா
   
ஜெகமெல்லாம் கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
ஜெய கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா               கிருஷ்ணா
     


என்னுள் இருந்து மீண்டும் கானம் இசைத்தமைக்கு நன்றி கண்ணா.

படம் - கூகுளுக்கு நன்றி. 


5 comments:

  1. வணக்கம்

    அருமையான பாடல் இரசித்தேன் சகோதரி
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அருமையான கானம்.

    ReplyDelete
  3. மீண்டும் ஒரு அருமையான கிருஷ்ண கானம்.

    ReplyDelete
  4. சிறந்த பக்திப் பாவரிகள்

    ReplyDelete
  5. கிருஷ்ணனைப்பற்றிய பாடல் வரிகள் அருமை.

    சர்வம் கிருஷ்ணார்ப்பனம். :)

    ReplyDelete