Thursday 4 June 2015

வாரீர் வாரீர்






வாரீர் வாரீர் வேங்கட நா...தனே 
வாரீர் வாரீர் வேங்கட....... நாதனே 
வாரீர் வாரீர் வேங்கட... நாதனே

இக்கணமே... வந்து இம்மை மறுமை ரட்சித்து
வேங்குழல் ஊ...திடு கண்ணா.....நீ 
வேங்குழல் ஊ...திடு

வாரீர் வாரீர் வேங்கட நா...தனே 
வாரீர் வாரீர் வேங்கட நா...தனே 

உன் நெடு உயரம் கண்டு உள்ளம் உவந்து நெகிழ்ந்து
ரசமா...ய் கீதம் இசைத்து..... பா...ட
வேங்குழல் ஊ...திடு கண்ணா.....நீ
வேங்குழல் ஊ...திடு

வாரீர் வாரீர் வேங்கட நா...தனே 
வாரீர் வாரீர் வேங்கட நா...தனே 


அகத்தினுள் ஆழம் போய் அகலாது கிடக்கும் உன்னை
கண்டேனடா.... நா.....ன் கண்டு கொண்...டிருக்கிறேனடா
கண்டேனடா.... நா.....ன் கண்டு கொண்...டிருக்கிறேனடா
கண்டேனடா.....நா.....ன் கண்டு கொண்... டிருக்கிறேனடா

வாரீர் வாரீர் வேங்கட நா...தனே 
வாரீர் வாரீர் வேங்கட....... நாதனே 
வாரீர் வாரீர் வேங்கட... நாதனே




 இப்பாடலை சுப்பு தாத்தா பாடியதை இங்கு கண்டும் கேட்டும் மகிழலாம்.







பாடல் தந்த நாத உனக்கு நன்றிகள்
படம் கூகுள் நன்றி.




27 comments:

  1. சங்கடம் தீர்க்கும்
    வேங்கட நாதா!
    சங்கு சக்கரம்
    ஏந்திய நாதா!
    ஓங்கிய திரு நெடு மாலே!
    நீங்கிடும் துன்பம் -உனை
    நினைக்கையிலே!!!
    த ம 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. ஓம் நமோ நாராயணாய...!!!

      Delete
  2. அருமை. ஏதாவது குறிப்பிட்ட ராகத்தில் இயற்றப் பட்ட பாடலா?

    ReplyDelete
    Replies
    1. ஓம் நமோ நாராயணாய...!!!

      Delete
    2. ஏதாவது குறிப்பிட்ட ராகத்தில் இயற்றப் பட்ட பாடலா?//

      எனக்கு ராகம் எல்லாம் தெரியாது. ஆனால் எனக்குள் இருந்து இசையோடு மெட்டாக பாடல் வரும். சரியாக சொல்லத்தெரியவில்லை

      Delete
  3. வேங்கடநாதனின் புகழ் போற்றும் கவிதை மனதிற்கு நிறைவினைத் தந்தது.

    ReplyDelete
    Replies
    1. ஓம் நமோ நாராயணாய...!!!

      Delete
  4. என்ன சொல்வது எப்படி சொல்வது என்றே தெரியவில்லை.

    நேற்று மாலை முதற்கொண்டே,
    பௌலி ராகத்தில் அமைந்த
    ஸ்ரீமன் நாராயண ஸ்ரீமன் நாராயண
    பாடல் மனதிற்குள் திரும்பத் திரும்ப
    வந்துகொண்டே இருந்தது.

    நானும் அடுத்து வரும் ஏதேனும் ஒரு பாடலுக்கு,
    இந்த ராகத்தை உபயோகப்படுத்தலாம் என நினைத்துக்கொண்டேன்.

    இன்று காலை, கணினியைத் திறந்த உடன்,
    வியாழன் ஆயிற்றே, சாயி பகவானின் கீதம் வந்திருக்கும்
    தங்கள் வலையில், என்று தான்
    துரிதமாய் திறந்தேன்.


    வேங்கடவன்
    ஸ்ரீமன் நாராயணன்
    கண் முன்னே நிற்கிறான்.

    எப்பொழுது என்னை அழைக்கப் போகிறாய்
    என்று மனம் குரலிட்ட அதே வேளையில்,

    தங்களது கானத்தை,
    வேங்கடவனை வாரீர் வாரீர் என
    நானும் அதே ராகத்தில் பாடி மகிழ்கிறேன்.

    சுப்பு தாத்தா
    www.menakasury.blogspot.com
    www.pureaanmeekam.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. எனக்கு ஏதோ இவ்வாரம் பெருமாள் பாடல் எழுத வேண்டும் என இருந்தது.

      எழுதி வைத்திருந்தேன். அவனே எனக்குள் இருந்து எழுதி வருகிறான்.

      உங்களுக்கும் ஶ்ரீமன் நாராயண...என தோன்றி இருப்பது எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. எல்லாம் அவன் செயல்.

      ஶ்ரீமன் நாராயண
      ஶ்ரீமன் நாராயண
      ஶ்ரீமன் நாராயண ஶ்ரீ பாதமே சரணம்.


      எனக்கு ராகம் எல்லாம் தெரியாது. ஆனால் எனக்குள் இருந்து இசையோடு மெட்டாக பாடல் வரும். சரியாக சொல்லத்தெரியவில்லை. மனதில் தோன்றுவதை எழுதி இருக்கிறேன். அதை நான் பாடியும் மகிழ்வேன். பாட சரியா வராது. ஆனா நமக்கு நாமே பாடுவதால் எப்படி இருந்தாலும் பரவாயில்லை தானே....

      மிக்க நன்றி தாத்தா.

      Delete
  5. Replies
    1. ஓம் நமோ நாராயணாய...!!!

      Delete
  6. வணக்கம் உமையாள், அழகிய படம், அதனினும் அழகிய பா, கலக்குங்குள், வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  7. காலையில் மங்களகரமான பக்திப் பாடல். மனம் மகிழ்ந்தது.
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. ஓம் நமோ நாராயணாய...!!!

      Delete
  8. இனிய காலைப் பொழுதில் - அழகான பாடல்..
    வேங்கடநாதன் அனைவருக்கும் நல்லருள் பொழியட்டும்..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. ஓம் நமோ நாராயணாய...!!!

      Delete
  9. வேங்கடவன் துதி கண்டேன் -திரு
    வேங்கடவன் துதி கண்டேன்
    நீங்கிட துயரம் எனில்-நெஞ்சில்
    நித்தம் நினைத்திட விண்டேன்

    ReplyDelete
    Replies
    1. ஓம் நமோ நாராயணாய...!!!

      Delete
  10. பாடல் அருமை சகோ. வேங்கடநாதன் எல்லோருக்கும் அருள் புரியட்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஓம் நமோ நாராயணாய...!!!

      Delete
  11. இய்ற்றிய உங்களுக்கும்,அருமையாகப் பாடிய பெரியவருக்கும் வேங்கடவன் அருள் புரிவான்

    ReplyDelete
    Replies
    1. ஓம் நமோ நாராயணாய...!!!

      Delete
  12. காட்டியுள்ள படமும் எழுதியுள்ள பாடலும் மிகவும் அருமை. பாடலைக் காதால் கேட்க இப்போது எனக்கு நேரமோ, பொறுமையோ, சகிப்புத்தன்மையோ சுத்தமாக இல்லை. அதனால் பிறகு கேட்டுக்கொள்கிறேன். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  13. வந்தேன் வந்தேன் வேங்கட நாதனைக்காண வந்தேன்
    தரிசித்தேன் நன்றி சுப்புத் தாத்தவின் பாடலோடு......

    ReplyDelete
    Replies
    1. ஓம் நமோ நாராயணாய...!!!

      Delete
  14. ஓம் நமோ நாராயணாய...!!!

    ReplyDelete
  15. பாடல் அருமை! கஹ்கோதரி! தாத்தாவின் பாட்டும்!

    ReplyDelete