காலார
நடக்கலாம் வாங்க…!
மயக்கமாய் கண்கள் திறந்து
பார்ப்பது போல்….பனிமூட்டமான காலை வேளை….அந்த காலனி உறங்கிக் கொண்டு இருந்தது. சில
நாய்களைத் தவிர…
குழந்தையின்
சிரிப்பலை போல் சுகமாய் காற்று
தழுவிற்று.
நடைப் பயிற்சிக்காய் கால்களை…நகர்த்தினேன் கண்களையும் உடன் சேர்த்து.கதிரவன்
வரவர தன் இதழ்களை முழுமையாய் விரித்து சிரிக்க காத்திருந்தன மலர்கள். நறுமணம் நாசியில்
ஏற... என்ன ஒரு இயல்பான தன்மை இயற்க்கைக்கு…! மனமும் நானுமாய் நடப்பதே…தனி சுகம்,அதுவும்
காலை வேளையில்….சில வற்றை சுட்டிக் காட்டி என்னை வியக்கவும், சிந்திக்கவும் வைக்கும்.