பக்கோடா சாப்பிட எல்லோருக்கும் புடிக்கும்.
சும்மா கொரிக்கலாம்
டீயுடன் ருசிக்கலாம்
சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ளலாம்
என செளகரியமான ஒன்று இது.
பாவக்காயை எடுத்தேன்...மனசு ஏன் இதை பக்கோடா போடக்கூடாதுன்னு கேட்டது...?
குழம்பு வைச்சாச்சு, சிப்ஸ் 2 வகை பண்ணியாச்சு...இதெல்லாம் பதிவா பின்னாடி வரும்.
புதுசா என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சப்ப....வந்த ஐடியா...இது. சரின்னு களத்துல குதித்தேன். சும்மா சொல்லக்கூடாது சூப்பரா இருந்தது. வித்தியாசமாகவும் இருந்தது. அதாங்க இப்ப உங்க கிட்ட பதிவா வந்து விட்டது எல்லாவற்றையும் முந்திக் கொண்டு...அவசரக்குடுக்கை....
தேவையான பொருட்கள்
பாவக்காய் - 1/2 கோப்பை
வெங்காயம் - 1 கோப்பை
முந்திரி - 5
கொத்தமல்லி - 1 கை
உப்பு - ருசிக்கு
மிளகாய் தூள் - 1 தே.க
கடலைமாவு - 3 மே.க
அரிசிமாவு - 2 தே.க
பெருங்காயம் - சிறிது
கரைசல்
புளி - சிறிய நெல்லி
உப்பு - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
இவற்றை கரைசலாக்கிக் கொள்ளுங்கள்.
பாவக்காயை சிப்ஸ்க்கு நறுக்குவது மாதிரி மெல்லிய வட்டமாக நறுக்கிக் கொண்டு அதை 4 பாகமாக ஆக்கிக் கொள்ளுங்கள். பின் கரைசலில் போட்டு 15 அ 20 நிமிடங்கள் ஊறவிடவும். பின் பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்வதால் பாவக்காயின் கசப்பு சற்று குறைந்து விடும். உப்பும் சார்ந்து இருக்கும்.
வெங்காயத்தை சற்று பெரியதாக நறுக்கிக் கொள்ளுங்கள்
முந்திரியை நான்கு நான்காக உடைத்துக் கொள்ளுங்கள்.
கொத்தமல்லியை நறுக்கிக் கொள்ளுங்கள்.
பொடி + நறுக்கிய வற்றை சேர்த்து கலக்குங்கள். உப்பு சிறிது சேருங்கள். தண்ணீர் தெளித்துக் கொண்டு பிசறுங்கள்.
எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
சும்மா கொரிக்கலாம்
டீயுடன் ருசிக்கலாம்
சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ளலாம்
என செளகரியமான ஒன்று இது.
பாவக்காயை எடுத்தேன்...மனசு ஏன் இதை பக்கோடா போடக்கூடாதுன்னு கேட்டது...?
குழம்பு வைச்சாச்சு, சிப்ஸ் 2 வகை பண்ணியாச்சு...இதெல்லாம் பதிவா பின்னாடி வரும்.
புதுசா என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சப்ப....வந்த ஐடியா...இது. சரின்னு களத்துல குதித்தேன். சும்மா சொல்லக்கூடாது சூப்பரா இருந்தது. வித்தியாசமாகவும் இருந்தது. அதாங்க இப்ப உங்க கிட்ட பதிவா வந்து விட்டது எல்லாவற்றையும் முந்திக் கொண்டு...அவசரக்குடுக்கை....
தேவையான பொருட்கள்
பாவக்காய் - 1/2 கோப்பை
வெங்காயம் - 1 கோப்பை
முந்திரி - 5
கொத்தமல்லி - 1 கை
உப்பு - ருசிக்கு
மிளகாய் தூள் - 1 தே.க
கடலைமாவு - 3 மே.க
அரிசிமாவு - 2 தே.க
பெருங்காயம் - சிறிது
கரைசல்
புளி - சிறிய நெல்லி
உப்பு - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
இவற்றை கரைசலாக்கிக் கொள்ளுங்கள்.
பாவக்காயை சிப்ஸ்க்கு நறுக்குவது மாதிரி மெல்லிய வட்டமாக நறுக்கிக் கொண்டு அதை 4 பாகமாக ஆக்கிக் கொள்ளுங்கள். பின் கரைசலில் போட்டு 15 அ 20 நிமிடங்கள் ஊறவிடவும். பின் பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்வதால் பாவக்காயின் கசப்பு சற்று குறைந்து விடும். உப்பும் சார்ந்து இருக்கும்.
வெங்காயத்தை சற்று பெரியதாக நறுக்கிக் கொள்ளுங்கள்
முந்திரியை நான்கு நான்காக உடைத்துக் கொள்ளுங்கள்.
கொத்தமல்லியை நறுக்கிக் கொள்ளுங்கள்.
பொடி + நறுக்கிய வற்றை சேர்த்து கலக்குங்கள். உப்பு சிறிது சேருங்கள். தண்ணீர் தெளித்துக் கொண்டு பிசறுங்கள்.
எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
பொதுவாக கசக்கும் பாவக்காய், தங்கள் கைபட்டதும் ருசியோ ருசியாகி, கரகரப்பாக மொறுமொறுப்பான, சூடான சுவையான பக்கோடாவாகவும் ஆகி, என்னை உடனே சாப்பிடச்சொல்லி ஹிம்சிக்குதே !
ReplyDeleteபடமும் பக்குவங்களும் அருமை.
கொஞ்சம் சாம்பிள் பார்ஸல் அனுப்புங்கோ ப்ளீஸ் :)
பொதுவாக கசக்கும் பாவக்காய், தங்கள் கைபட்டதும் ருசியோ ருசியாகி, கரகரப்பாக மொறுமொறுப்பான, சூடான சுவையான பக்கோடாவாகவும் ஆகி, என்னை உடனே சாப்பிடச்சொல்லி ஹிம்சிக்குதே !//
Deleteநீங்கள் சாப்பிட்டுப் பார்த்து விட்டால் திர்ம்ப திரும்ப ருசிக்க விரும்புவீர்கள்.
கொஞ்சம் சாம்பிள் பார்ஸல் அனுப்புங்கோ ப்ளீஸ் :)//
இதோ அனுப்பி விட்டேன் ஐயா...)))))....
மகிழ்வான உடனடி வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி ஐயா நன்றி
//இதோ அனுப்பி விட்டேன் ஐயா...)))))....//
Deleteபார்ஸல் கிடைத்தது. சாப்பிட்டேன். சூப்பரா டேஸ்டா இருந்துச்சு. தங்கள் உடனடியான அன்பான பார்ஸலுக்கு மிக்க நன்றி.
கனவில் நான் ‘பக்கோடா’ என ஏதேதோ உளறியதாக நாளைக்கு என்னவள் சொன்னாலும் சொல்லுவாள்.
>>>>>
’மதறாஸ் டு பாண்டிச்சேரி’ என்று அந்தக்காலத்தில் ஓர் நகைச்சுவையான படம் வந்தது. அதில் நடித்ததால் தான் காதருக்கு ‘பக்கோடா காதர்’ என்ற பெயரும் கிடைத்தது.
Deleteமிகவும் குண்டான அவன் அதில் ஒரு 7-8 வயது பொடியனாக இருப்பான்/நடிப்பான். பஸ்ஸில் மதறாஸில் ஏறும் போதே, ஒரு வியாபாரி ”பக்கோடா ... பக்கோடா ... சூடான சுவையான பக்கோடா” என விற்றுக்கொண்டே, பையனைச் சுற்றிச்சுற்றி வருவான்.
உடனே அந்த குண்டுப் பையன் காதர், தன் அம்மா மனோரம்மாவிடம் ‘அம்மா ...... பக்கோடா’ ’அம்மா ...... பக்கோடா’ என புலம்பி படுத்த ஆரம்பித்து விடுவான்.
அவன் வாயை ஒரு துண்டைப்போட்டு இறுக்கமாகக் கட்டிவிடுவார்கள். பஸ் கிளம்பி விடும். பாண்டிச்சேரி வந்ததும், பையன் வாயைக்கட்டிய துண்டை அவிழ்த்து விடுவார்கள். அப்போதும் மீண்டும் ”அம்மா ...... பக்கோடா” ”அம்மா ...... பக்கோடா” என ஞாபகமாக அழ ஆரம்பிப்பான். மிகவும் சிரிப்பாக இருக்கும், அந்தப்படம்.
ஏனோ பக்கோடா சாப்பிடும் போதெல்லாம் எனக்கு அந்த ஞாபகம் வந்துவிடும். இப்போது இந்தப்பதிவினைப்படித்ததும், அதே ஞாபகம் தான் வந்தது. அதனால் அதனைப் பகிர்ந்துகொண்டேன். :)
Deleteகனவில் நான் ‘பக்கோடா’ என ஏதேதோ உளறியதாக நாளைக்கு என்னவள் சொன்னாலும் சொல்லுவாள். //
அம்மா அப்படி ஏதாவது இன்று சொன்னார்களா..? ஐயா...))).....
ஐயா தங்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டது பக்கோடாவை விட ருசியாக இருக்கிறது. நன்றி
DeleteR.Umayal Gayathri 13 May 2015 at 13:51
Delete**கனவில் நான் ‘பக்கோடா’ என ஏதேதோ உளறியதாக நாளைக்கு என்னவள் சொன்னாலும் சொல்லுவாள்.** - vgk
//அம்மா அப்படி ஏதாவது இன்று சொன்னார்களா..? ஐயா...))).....// - R.UG
நான் இந்தப்பதிவினைப் படித்துவிட்டு என் கருத்துக்களை எழுதும்போது நேற்று இந்திய (நள்ளிரவு நேரம்) சுமார் 1 மணியோ 2 மணியோ இருக்கும். என்னவள் அப்போதும் நல்ல உறக்கத்தில் ............... :) மட்டுமே. அவள் விழித்திருந்தால் நான் பதிவுகள் பக்கம் வர வேண்டிய அவசியமோ / அவசரமோ ஏது ? :)
அதனால் அம்மா அப்படி எதுவும் இன்று என்னிடம் சொல்லவே இல்லை. ஒருவேளை நானே என் கையால் பக்கோடா செய்து அவளுக்குக் கொடுத்ததுபோல ஏதும் அவள் கனவு கண்டிருப்பாளோ என்னவோ ! :) அதை என்னிடம் சொல்ல வழக்கம்போல மறந்து போய் இருப்பாள் என நினைக்கிறேன். :)
"பாவக்காய் பக்கோடா" படு டேஸ்ட் என்பதை சொல்லவும் வேண்டுமோ?
ReplyDeleteகாயத்ரி மந்திரம் மனதிற்கு இனிமை, மகிமை!
உமையாள் காய்திரி தந்திரம்(சமையல்)
உண்போர் வயிறு வாழ்த்தும் வளமை/பெருமை!
த ம 1
நட்புடன்,
புதுவை வேலு
ஆஹா...கவியாய் வாழ்த்தையும் பாராட்டையும் பொழிந்தது விட்டீர்கள் சகோ
Deleteமகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி சகோ. நன்றி
உங்களுக்குன்னு பார்த்து எப்படி இப்படி யோசனையெல்லாம் வருது ? ஒவ்வொரு பதிவிலும் வித்தியாசமான சமையலை செய்து காட்டி அசத்துகிறீர்கள் ...நான் உங்கள் பதிவுகளின் நீண்ட நாள் வாசகன் ..இப்போதுதான் முதன்முறையாக பின்னூட்டம் இடுகிறேன் ...உங்க வீடு எங்கேன்னு சொன்னால் ,வந்து சாப்பிட்டு விட்டு போகலாம் என நினைக்கிறேன் ...கண்டிப்பா பாத்திரம் கழுவற வேலை செஞ்சு கொடுத துறேங்க .....
ReplyDeleteஉங்களுக்குன்னு பார்த்து எப்படி இப்படி யோசனையெல்லாம் வருது ?//
Deleteதெரியவில்லையே........அதானே.....
ஒவ்வொரு பதிவிலும் வித்தியாசமான சமையலை செய்து காட்டி அசத்துகிறீர்கள் ...//
நன்றி சகோ
நான் உங்கள் பதிவுகளின் நீண்ட நாள் வாசகன் ..இப்போதுதான் முதன்முறையாக பின்னூட்டம் இடுகிறேன் ...//
ஆஹா...நீண்ட நாள் வாசகனை பக்கோடா வாசம் இழுத்துக் கொண்டு வந்து விட்டது போல....)))))......முதல் கருத்து இனி தொடர்ந்தால் சந்தோஷம்.....
உங்க வீடு எங்கேன்னு சொன்னால் ,வந்து சாப்பிட்டு விட்டு போகலாம் என நினைக்கிறேன் ...கண்டிப்பா பாத்திரம் கழுவற வேலை செஞ்சு கொடுத துறேங்க
அப்ப நீங்க பக்கோடா செலவை விட அதிகமா செலவு செய்யனும். யூ கேல இருந்து நீங்க வரணும் இல்ல...அதை சொன்னேன்.
மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி சகோ. நன்றி
எளிமை, அருமை. நேரம் கிடைக்கும்போது ஒருமுறை செய்து விடுவோம். சிப்ஸ் செய்ததுண்டு.
ReplyDeleteநேரம் கிடைக்கும்போது ஒருமுறை செய்து விடுவோம்//
Deleteசெய்து விட்டு சொல்லுங்கள் சகோ.
மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி சகோ. நன்றி
பிடித்தமான காய் பாவக்காய். படமும் பகோடாவைச் செய்து பார்க்கச் சொல்கிறது.
ReplyDeleteஎனக்கும் இக்காய் என்றால் இஷ்டம். இங்கு கிடைக்காது. ஊரில் இருந்து கொண்டு வந்ததில் செய்து காலிபண்ணியாச்சு. இக்காய் சாப்பிட்டு எவ்வளவோ நாட்கள்..... ஆகிவிட்டன .
Deleteசெய்து பார்த்து விடுங்கள் சகோ...
மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி சகோ. நன்றி
எனக்கு ரொம்பவும் பிடிக்கும்...
ReplyDeleteதிண்டுக்கல்லுக்கும் பார்ஸல்....! ஹிஹி...
எனக்கும் சகோ....
Deleteதிண்டுக்கல்லுக்கும் பார்ஸல்....! ஹிஹி..//
அனுப்பி விட்டேன் சகோ....)))).....
மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி சகோ. நன்றி
பாவக்காய் பகோடா வித்தியாசமான ரெசிப்பி. படம் பார்க்க,செய்யும் ஆவல் எழுகிறது. நன்றி பகிர்விற்கு.
ReplyDeleteஉங்கலிஸ்டில் இது இடம் பிடித்து இருக்கும். விரைவில் எதிர் பார்க்கிறேன் தாங்கள் ருசித்தை சொல்ல...
Deleteமகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி சகோ. நன்றி
நல்ல வித்தியாசமான பக்கோடா கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் சகோ.
ReplyDeleteகண்டிப்பாக செய்து பாருங்கள்
Deleteமகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி சகோ. நன்றி
நான் சிப்ஸ் போடுவேன். இந்த பக்கோடா ட்ரை பண்ணிரவேண்டியது தான். விடு ஜூட்! thanks மேம்!
ReplyDeleteஇந்த பக்கோடா ட்ரை பண்ணிரவேண்டியது தான்//
Deleteவிரைவில் என நினைக்கிறேன்....))))...
மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்ச்சி சகோ. நன்றி
ஆஹா சூடான பக்கோடா ஸூப்பர்
ReplyDeleteதமிழ் மணம் 6
மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும், வாக்கிற்கும் மகிழ்ச்சி சகோ. நன்றி
Deleteபல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுவான் என்று பெரியவர்கள் சொல்லி இருப்பதால் ,பாவக்காய் பக்கோடா சாப்பிட எனக்கும் ஆசை வந்துவிட்டது :)
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும், மகிழ்ச்சி. நன்றி
Deleteபக்கோடா படிக்கும் போதே ருசிக்கிறது :)
ReplyDeleteதொடர்கிறேன்.
தம கூடுதல் 1
மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும், மகிழ்ச்சி. நன்றி
Deleteபாவற்காய் பகோடா
ReplyDeleteஎன்னைப் போல
நீரிழிவுக் காரங்களுக்கு
நல்லா இருக்கும் என்ற நினைக்கிறேன்.
மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும், மகிழ்ச்சி. நன்றி
Deleteஅட! பாகற்காயில் பக்கோடா....செய்துடுவோம்...உடனே......
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும், மகிழ்ச்சி. நன்றி
Deleteஇப்போ மழை வேற பெய்கிறது ,சூடா பாகற்காயில் பக்கோடா சாப்பிட்டா சூப்பரா இருக்கும்..
ReplyDeleteசெய்து பார்த்து என் அனுபவத்தை பகிர்கிறேன்...
வாழ்க வளமுடன்...
மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும், மகிழ்ச்சி. நன்றி
Deleteசெய்து பார்த்து என் அனுபவத்தை பகிர்கிறேன்...//
கண்டிப்பாக...செய்து விட்டு சொல் சரிதா...
இதுவரைக்கும் 3 முறை செய்தாச்சுப்பா பாகற்க்காய் பகோடா ...ரொம்ப டேஸ்டி ..4 ஆம் முறை படமெடுத்து போடறேன் ப்ளாகில்
ReplyDelete