Thursday, 14 May 2015

வாழைத்தண்டு தயிர் பச்சடி / Vazhaithandu Raitha






தேவையான பொருட்கள்

வாழைத்தண்டு - 1 கோப்பை
தயிர் -  3/4 கோப்பை
உப்பு - ருசிக்கு

தாளிக்க வேண்டியவை

எண்ணெய் - 1/2 தே.க 
கடுகு - 1/4 தே.க
வரமிளகாய் - 1
பச்சைமிளகாய் -1
கருவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - சிறிது


வாழைத்தண்டை பொடியாக மோரில் நறுக்கிப் போடவும். அப்போது தான் வாழைத்தண்டு கருக்காமல் இருக்கும்.

பின் தயிரில் தாளித்துக் கொட்டி , உப்பு போட்டு விட்டு நறுக்கிய வாழைத்தண்டை,(நீரை வடிகட்டி விட்டு) சேர்த்து கலக்கவும்.  



                                      வாழைத்தண்டு தயிர் பச்சடி தயாராகிவிட்டது. 


வாழைத்தண்டு உடம்பிற்கு மிகவும் நல்லது. குளிர்ச்சியைக் கொடுக்கும். நீரை நன்கு பிரித்து உடம்பில் இருந்து வெளியேற்றும். சிறுநீர் கல் வராமல் தடுக்கும். கல்லை கரைக்கும். சமைப்பதும் சுலபம்...!!!





12 comments:

  1. வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிடலாம். சுவையானது.

    ReplyDelete
  2. வாழைத்தண்டில் தயிர் பச்சடியும் செய்யலாம். இருப்பினும் நல்ல காரசாரமான மோர்க்கூட்டுதான் வாழைத்தண்டில் என் வீட்டில் செய்வது வழக்கம்.

    தயிர் பச்சடிக்கு என்றால் வெள்ளரிப்பிஞ்சு, தக்காளி முதலியன மட்டுமே உபயோகிக்கிறோம்.

    பச்சடி போன்ற ருசிமிக்க பகிர்வுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  3. பார்க்கவே செய்யத்தூண்டும் குறிப்பு.இங்கு வாழைத்தண்டு கிடைக்காது. பகிர்விற்கு நன்றி உமையாள்.

    ReplyDelete
  4. வாழைத்தண்டு தயிர் பச்சடி சிறுநீரக கல்லை மட்டுமல்ல!
    ஆண்களின் மனதையும் கரைக்கும் ஆரோக்கியத்தை அள்ளித் தரும் உணவு வகை!
    பாராட்டுக்கள் சகோ!
    த ம 2
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  5. வாழைத்தண்டு இங்கு கிடைபதில்லையே என்ன செய்வது ? எகிப்தில் கிடைக்கிறதா ?

    ReplyDelete
  6. உடல் நலனுக்கு மிகவும் உகந்தது. அவ்வப்போது நான் சாப்பிடுகிறேன். நன்றி.

    ReplyDelete
  7. பயனுள்ள குறிப்பு... நன்றி...

    ReplyDelete
  8. சத்தான உணவு எனக்கு மிகவும் பிடிக்கும்
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  9. வேகவைக்க வேண்டாமா? நீரை வடிகட்டுவது நன்றா?எழுதுங்கள்!

    ReplyDelete
  10. வாழைத்தண்டு தயிர் பச்சடியா - அந்த
    வாழைத்தண்டு நோய் தீர்க்கும் மருந்தே - அப்ப
    ஏழலில் இரு நாள்கள் உண்டால் - நோய்
    நம்மை நெருங்காதே!

    ReplyDelete
  11. இங்கும் சேம்......அடிக்கடிச் செய்வதுண்டு....மிகவும் நல்ல பச்சடி....

    ReplyDelete
  12. வாழைத்தண்டை வேக வைக்க வேண்டாமா ஆன்ட்டி??
    இந்த முறையில் செய்து பார்க்கிறேன்...

    வாழைத்தண்டை வெட்டி நார் எடுக்கும்போதெல்லாம் உங்களைதான் நினைப்பேன்,உங்களுக்கு ஞாபகம் இருக்கானு தெரியல?நீங்க தான் முதன்முதலாக எனக்கு அதை எப்படி வெட்டனு, நார் எடுக்கணும்னு உங்க வீட்ல(ஓசூர்)வைத்துசொல்லிக்கொடுத்திங்க.

    வாழ்க வளமுடன்...

    ReplyDelete