Thursday, 31 July 2014

ஸ்வீட் கார்ன் ரைஸ்


சோளத்தில் ஒரு கலந்த சாதம்.....

சுவையும் வண்ணமும்  அபாரம்.....

சத்தும் சாதமும் பிரமாதம்.....

வாங்க செய்யலாம் வரப் பிரசாதம்...

என்னங்க ரெடியாயிட்டீங்க

போல..போகலாம்.


Wednesday, 30 July 2014

கொத்சு பொடி

கத்தரிக்காய் கொஸ்துக்கான பொடி இது.


முன்னமே செய்து வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும் போது எளிதாக இருக்கும்.

முடிந்தவர்கள் அவ்வப்போது செய்து கொள்ளலாம். வாசம் படு ஜோராக இருக்கும்.

ஓ...     இம்புட்டுத்தானா...?Sunday, 27 July 2014

மிதி வண்டிமிதி வண்டி

இந்த மிதி வண்டி வாட்டர் கலரில் வரைந்தது. வாட்டர் கலர் கைப்பழக்கம் வரவேண்டும் என்பதற்காக வரைந்தேன்.

மாம்பழ ஹல்வா


தேவையான பொருட்கள்

மாம்பழம் - 1 கோப்பை
சர்க்கரை - 1 கோப்பை
கான்பிளவர் மாவு - 1/2 கோப்பை
முந்திரி - 13
நெய் - 5 மே.க


Thursday, 24 July 2014

எண்ணெய் வாழைக்காய்

தேவையான பொருட்கள்

வாழைக்காய் - 2
சாம்பார்ப் பொடி - 1 1/2 தே.க
மிளகாய்ப் பொடி - 1/2 தே.க
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தே.அ


கிருஷ்ண கானம்


கண்ணன் வரும் பொழுது தெரியாது
களவாட வெண்ணெய் உறிமீது
விடிகால வேளையில் செய்து வைத்தேன்
வீதியெல்லாம் கோலம் போட்டு வைத்தேன்         கண்ணன்

Read More


Wednesday, 23 July 2014

ஆராரோ...ஆரிரரோ...!!!

கவிதை - 27வற்றல் மிளகாயை
வாயில் வைத்தாயோ...?
வாயில் வைத்ததினால்
ஒற்றை விரலையும்
உள்ளே வைத்தாயோ...!!!

Sunday, 20 July 2014

இட்லி

இட்லி...

என்னடா..... இது... இட்லியைபற்றி எல்லாம் போட்டு

இருக்காங்களே....அப்படின்னு நினைக்கிறீங்க....! இல்ல... ஏன் நான் இட்லியை

பற்றி கவிதையே போட்டு இருக்கேன்.

Saturday, 19 July 2014

கவிதைத் துளிகள் - கவிதை - 26

கவிதைத் துளிகள்


நிலம்

விளை விப்பவன்
இன்றி...
வீணாய்கிடக்கிறேன்...

விளைய நான் ரெடி...
விளைவிக்க
நீங்கள் ரெடியா...?Friday, 18 July 2014

கதம்ப சட்னிசர்க்கரை வள்ளிக்கிழங்கு மசியல்

தேவையான பொருட்கள்

சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 1 பெரிது
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 3 அ 4
சாம்பார்ப் பொடி - 3/4 தே.க
மஞ்சள் தூள் - சிறிது
எலுமிச்சை - 1Thursday, 17 July 2014

கிருஷ்ண கானம்

பாமாலை - 14

                                கிருஷ்ணா...!!!   கிருஷ்ணா...!!!    கிருஷ்ணா...!!!                                     கிருஷ்ணா  கிருஷ்ணா  கோவிந்தா
                                     கிருஷ்ண  ஹரி  கோவிந்தா
                                     ராமா  ராமா  அனந்தராமா
                                     மனங்களில்  வாழும  ஆத்மராமா

Wednesday, 16 July 2014

புதினா சாதம்

தேவையான பொருட்கள்

அரிசி - 1 கோப்பை
வெங்காயம் - 1
புதினா - 1 கட்டு
எலுமிச்சை - 1
பச்சைமிளகாய் - 2 அ 3
பூண்டு - 2
உப்பு - தே.அ

Monday, 14 July 2014

கடல் - கவிதை -25

                                                                           கடல்

உப்புப்  பாலின்  நுரைகண்டேன்
உவப்பாய்  காற்றின்  ருசிகண்டேன்
மணலில்  கால்  தடம்கண்டேன்
மனம்  சற்று  நிற்கக்கண்டேன். 


Sunday, 13 July 2014

கவண் அரிசி (கருப்பு அரிசி)


 செட்டி நாட்டு ஸ்பெஷல் கவண் அரிசி இனிப்பு.

சத்தான இனிப்பு. 

இந்த அரிசியில் உள்ள சத்துக்கள் நம் உடம்பில் அப்படியே சேரும்.
Friday, 11 July 2014

Egypt Pyramids-Giza and Saqqara and Sphinx

உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிடு நம்மை பிரமிக்க வைக்கிறது.  ஒவ்வொரு கல்லும் 2 டன் எடை உள்ளது. எப்படித்தான் தூக்கி நூல் பிடித்தார் போல அடுக்கி கட்டினார்களோ....!  அதுவும் பாலை வனத்தில். மணற்பிரதேசம். இத்தனை வருடங்களாக அசையாமல் நிற்கிறது.

கட்டடக்கலையை தான் எப்படி இப்படி கட்டினார்கள் என  ஆராய்ச்சி செய்கிர்கள்.


                                                  சகார் பிரமிடு நுழைவு வாயில்

Thursday, 10 July 2014

பாமாலை - 13


அவன் தாள்
 
                                  கிருபாகரோ கிருபாகரோ
                                  தயாகரோ கிருபாகரோ                                   (கிருபாகரோ)

                                  
                                  உன்கமல பாதம் கைபட
                                  உன்கமல தீட்சை வேண்டுமே
                                  பத்துவிரல் கை நீவிட
                                  பாதசேவை யருள் வேண்டுமே                     (கிருபாகரோ)

Wednesday, 9 July 2014

கவிதைத் துளிகள் - கவிதை - 24

கவிதைத் துளிகள் - 16

விம்

நிறங்களின்
நெகிழ்ச்சி -                                                                              
தூரிகைகளின்


வீழ்ச்சி -

கலைஞனின்
ஆட்சி -
கண்முன் வந்தது
சாட்சி...!

Tuesday, 8 July 2014

கேப்பை தோசை ( ராகி தோசை)

கேப்பை மாவு தோசை.    சத்தானதும் எளிதானதும் கூட...
விரைவில்  செய்யலாம்.தேவையான பொருட்கள்

கேப்பை மாவு - 1 கோப்பை
அரிசி மாவு - 3 மே.க

Monday, 7 July 2014

சிட்டுக்குருவி - கவிதை 23

மரம்  கொள்ளாத  சிட்டுக்குருவியைக்  கண்டுகளித்து,  பரவசப்பட்டேன். அதன் ஆட்டத்தை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

வானில் பறந்து, பறந்து என்னை சந்தோஷக் கடலில் ஆழ்த்தியது.

சென்னையில் சிட்டுக்குருவி குறைந்து வருகிறது, அட்டைப்பெட்டியை வீடுகளில் வைத்தால் அது வந்து தங்கும் என முன்பு படிந்தது ஞாபகம் வந்தது.

சின்ன சிட்டுக்குருவிக்காக...அந்த செல்லக் குட்டிகளுக்காக.. அவைகள் பெருகி வாழ வேண்டும் என நினைத்து, என் பிறந்த நாளின் பரிசாக இந்தக் கவிதையை சமர்ப்பிக்கிறேன்.

கவிதை

சிட்டுக்குருவி...!   குட்டிக்குருவி...!
அப்பப்பா...  உன்  சிறகடித்தல்
மின்னலாய்யல்லவா..?  இருக்கிறது
என்ன  வேகம்...!  என்ன  லாவகம்...!

Thursday, 3 July 2014

கிருஷ்ண கானம்


பாடல்

                                              மதுரா  நகரத்து  கிருஷ்ணய்யா
                                              மனங்களைக்  கவர்ந்த  கண்ணய்யா
                                              குழல்  எடுத்து  நீ  ஊதினால்
                                              குழைந்து  போகாதோ  எங்கள்  நெஞ்சம்         (மதுரா)

Wednesday, 2 July 2014

கல்கண்டு வடை

அருமையான இனிப்பு வடை இது. பெரும் பாலான வீடுகளில் தீபாவளிக்கு இதை செட்டி நாட்டுப் பக்கங்களில் கட்டாயமாக செய்வார்கள்.

கல்யாணம், மற்றும் விசேஷமான நாட்களிலும் செய்வார்கள். 

கல்கண்டு கிடைக்கும் இடங்களில் அதை உபயோகப் படுத்துங்கள்.

இல்லை என்றால் சர்க்கரை போட்டுக் கொள்ளலாம்.
  

வாழைக்காய் சாப்ஸ்