தேவையான பொருட்கள்.
ப.அரிசி மாவு - 1 கோப்பை
தேங்காய் துருவல் - 1கோப்பை (1/2 மூடி தேங்காய்)
நெய் - 1 தே.க
உப்பு - 2 சிட்டிகை
ஏலக்காய் பொடி - 1/2 தே.க
வெல்லம் - 3/4 கோப்பை
1 1/2 டம்ளர் தண்ணீரில் 1/2 தே.க நெய்விட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
த. கொதிக்கும் போது மாவை சிறிது சிறிதாக போட்டுக் கொண்டே கிளறவும்.
கிளறிய மாவை மூடி போட்டு 15 நிமிடங்கள் விடவும்.
பின் நெய் தொட்டுக் கொண்டு மாவை நன்றாக பிசையவும்.
நெய் தொட்டுக் கொண்டு கொழுக்கட்டைகளாக உருட்டவும்.
வெல்லத்தை சிறிது நீர் விட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
தேங்காய் துருவலை மூன்று பால்கள் எடுத்துக் கொள்ளவும்.
1வது - 1/2 கோப்பை அளவு
2வது - 3/4 கோப்பை அளவு
3வது - 3/4 கோப்பை அளவு
அதில் 2வது, 3வது பாலை இப்போது வெல்லத்துடன் சேர்த்து விடவும்.
வெல்லம் + பால் நன்கு கொதிக்கும் போது கொழுக்கட்டைகளை ஒவ்வொரு கையாக எடுத்து இடைவெளி விட்டு விட்டு தூவினாற் போல் போடவும்.
பின் மிதமான தீயில் கொழுக்கட்டைகளை வேக விடவும்
மிதமான தீயில்
வெந்த பின் 3 வது பாலை விடவும்.
ஏலம் சேர்க்கவும். பால் கொதி வருகிறார் போல் இருக்கும் போது அடுப்பை அணைத்து விடவும்.
குறிப்பு
பால் கொழுக்கட்டை நேரம் ஆக ஆக இஞ்சிக் கொண்டு வரும்.
உடனே சாப்பிட என்றால் சேர்மானம் திக்காக இருக்கட்டும்.
நேரம் சென்று சப்பிடுவதானால் சற்று தளர வைக்கவும். மதியம் செய்து சாயங்காலம் சப்பிடலாம்.
இதை சூடாக மற்றும் குளிரூட்டியும் சாப்பிடலாம்.
சாயங்காலம் செய்ததை மறுநாள் (குளிரூட்டியில் வைத்தது தான் ) சாப்பிட இன்னும் சுவை கூடி நன்றாக இருக்கும். நேத்து வச்ச மீன் குழம்பு என்னை இழுக்குதுன்னு உங்களுக்கு பாட்டுக் கேட்டா... எனக்கு தெரியாது. ஏன்னா...? நான் சாப்பிட மாட்டேன். கேட்ட அனுபவம் தானே...ஹஹஹா...!!!
உமையாள்,
ReplyDeleteநல்ல நிறத்துடன் பால் கொழுக்கட்டையைப் பார்க்கவே சாப்பிடத் தூண்டுகிறது.
அன்பின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி சகோ
Deleteதித்திக்கும் பால் கொளுக்கட்டை
ReplyDeleteஎத்திக்காரும் சுவைத்து உண்ண
சிறந்த வழிகாட்டல்
அன்பின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி சகோ
Deleteசூப்பர்! ரொம்பப் பிடிக்கும்!
ReplyDeleteஅன்பின் வரவிற்கும் கருத்திற்கும் த மவிற்கும் நன்றி சகோ
Deleteசின்ன சின்னதாக உங்களின் குறிப்பின் படி செய்யச் சொல்லி உள்ளேன்...
ReplyDeleteநன்றி சகோதரி...
அன்பின் வரவிற்கும் கருத்திற்கும் த மவிற்கும் நன்றி சகோ
Deleteபால் கொழுக்கட்டையை மறந்தாரும் உண்டோ!.. அருமை!..
ReplyDeleteஅதானே...
Delete.அன்பின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி சகோ
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : காயத்ரி தேவி அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என்னில் உணர்ந்தவை
வலைச்சர தள இணைப்பு : கதம்ப மாலை...
தங்கள் கருத்தைக் கண்டு பார்த்து வந்தேன் மிக்க நன்றி தெரியப்படுத்தியமைக்கு.
Deleteபால் கொழுக்கட்டை செய்முறையும் விளக்கப்படங்களும் மிக அருமையாக கொடுத்திருக்கீங்க சகோ. இறுதியில் கொடுத்திருக்கும் டிப்ஸ்ம் அருமை.
ReplyDeleteஎனது பதிவு காலிபிளவர் மிளகு பொரியல் !
அன்பின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி சகோ.
Deleteதங்கள் காளிப்ளவர் மிளகுப் பொரியலைக்கண்டு கருத்திட்டு வந்தேன் சகோ
www.youtube.com/watch?v=Pmo_Ck7uvE4
ReplyDeleteThis pal kozhukkattai is offered as a neyvedhyam or Nivedhanam to Sayee Bhabha today to offer at His feet.
Listen to subbu thatha praying for all .today at the sayee temple.
subbu thatha
அன்பின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி ஐயா. பாடலை கேட்டுரசித்தேன் ஐயா
Deleteபால் கொழுக்கட்டை செய்முறையும் விளக்கப்படங்களும் ஜோர் ஜோர் ! :)
ReplyDeleteஅன்பின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி சகோ
Deleteenakku mikavum pidithadhu. thanks for sharing.
ReplyDeleteஅன்பின் முதல் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி சகோ
Deleteவணக்கம்
ReplyDeleteசெய்முறை விளக்கத்துடன் அசத்தல் அருமை...j.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பின் வரவிற்கும் கருத்திற்கும் த மவிற்கும் நன்றி சகோ
Deleteபால் கொழுக்கட்டை செய்ததில்லை.படம் பார்க்க அருமையாய் இருக்கு.! நன்றி உமையாள்.
ReplyDeleteஅன்பின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி சகோ
Deleteபால் கொழுக்கட்டை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆன்ட்டி..
ReplyDeleteமுதல் நாள் சாயங்காலம் செய்து அடுத்த நாள் காலை சாப்பிடுவது ரொம்ப நல்லா இருக்கும்ல ஆன்ட்டி...
எனக்கு பால் கொழுக்கட்டை ஞாபகம் வந்துவிட்டது,கூடிய விரைவில் செய்கிறேன்...
நான் தேங்காய் பால் சேர்த்து செய்ததில்லை,இம்முறை நீங்க சொல்லியுள்ள முறையில் செய்து பார்க்கிறேன்....
நன்றி...
வாழ்க வளமுடன்...
பால் கொழுக்கட்டை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆன்ட்டி.//
Deleteஅதான் போட்டு இருக்கிறேன் சரிதா.
கூடியவிரைவில் பதிலை எதிர் பார்க்கிறேன் நன்றி
அடாடா, எவ்வளவு நாள் ஆச்சு இந்த பால் கொழுக்கட்டையை சாப்பிட்டு..
ReplyDeleteஇது உங்களுக்கே நல்லா இருக்கா.. இப்படி நீங்க மட்டும் செஞ்சு சாப்பிடுறீங்களே, எனக்கு பார்சல் பண்ணி அனுப்பணும்னு தோணுச்சா?
அடுத்தமுறை உங்களுக்கு பார்சல் அனுப்பி விட்டுத்தான் சாப்பிடுவோம் சகோ சரியா.
Deleteஅன்பின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி சகோ
பால் கொழுக்கட்டை எனக்கு மிகவும் பிடிக்கும் படம் ஸூப்பர்
ReplyDeleteதமிழ் மணம் 4
அன்பின் வரவிற்கும் கருத்திற்கும் தமவிற்கும் நன்றி சகோ.
Deleteஅடடா தெரியாம போச்சே அடுத்த முறை பார்சல் அனுப்பி விடுகிறேன்
நேத்து வச்ச பால் கொழுக்கட்டை வாசம் என்னை இழுக்குதய்யா..
ReplyDeleteஅதான் அடுத்த நாள் வந்து இருக்கீங்களா...சகோ. என்ன ரெம்ப பிஸியா...ஆளையே காணோம்...
Deleteஎனக்கு எங்க அம்மா செய்வது ஞாபகம் வந்துவிட்டது.சின்ன வயதில் நானும், தங்கையும் உருட்டித் தருவோம்.பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.
ReplyDeleteநானும் சின்ன வயசில் அம்மாவிற்கு உருட்டிக் கொடுத்ததை நினைத்துக் கொண்டே தான் செய்தேன்.
Deleteஅன்பின் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி சகோ
மிகவும் பிடிக்கும். படங்கள் சாப்பிட சொல்கிறது அழகு.
ReplyDelete