வெட்டியாய்
விட்டத்தை நோக்குகையில்...
விரிந்தது ஒரு கவிதை
எதை நோக்குகிறாய்...என
எதை நோக்குகிறேன்...?
விட்டத்தையா...?
இல்லை
விட்டத்தின் வழியாய்...
எதையோ...வா...?
இல்லை இல்லை...
விழிகள் விட்டத்தை
நோக்கியிருக்க...
மனமே நோக்கிற்று...
நோக்கு பொருள்
நினைவில்லை...
ஆனாலும்
நோக்குகிறேன்...
அசையாமல்
சில நேரங்களில்
சிலசில நோக்குகள்
புலனாவதில்லை...
மனம் உடன் இருக்கவில்லை யாதலால்
நேத்திரத்தின்
நேர் பார்வை
மனம் மட்டும் ராட்டினமாய்...
கவிதை முடிந்து விட்டது
கலைந்தேன் சுய நினைவிற்கு...
//சில நேரங்களில் சிலசில நோக்குகள் புலனாவதில்லை... மனம் உடன் இருக்கவில்லை யாதலால்//
ReplyDeleteஉண்மை தான். இதனை நானும் நிறைய தடவைகள் அனுபவித்து உணர்ந்துள்ளேன்.
>>>>>
உடனே வந்து கருத்திட்டமைக்கு நன்றி ஐயா.
Delete//நேத்திரத்தின் நேர் பார்வை ..... மனம் மட்டும் ராட்டினமாய்...//
ReplyDeleteஅழகான இயல்பான இந்த வரிகளில் நானும் சுற்றினேன் ராட்டினத்தில்.
//கவிதை முடிந்து விட்டது .... கலைந்தேன் சுய நினைவிற்கு...//
அருமையான முடிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
அழகான இயல்பான இந்த வரிகளில் நானும் சுற்றினேன் ராட்டினத்தில்.//
Deleteநீங்களும் அழகாய் சுற்றி வந்து விட்டீர்கள்....பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஐயா.
"சிலசில நோக்குகள்
ReplyDeleteபுலனாவதில்லை...
மனம் உடன் இருக்கவில்லை யாதலால்" என்பதில்
உண்மையிருக்கு...
தங்கள் கருத்திற்கு நன்றி ஐயா.
Deleteவணக்கம்
ReplyDeleteவரிகளை இரசித்து படித்தேன் அம்மா... பகிர்வுக்கு நன்றி த.ம2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரசித்ததற்கும், தமிழ் மணம் வீசச் செய்தமைக்கும் நன்றி ரூபன்.
Deleteதத்துவம். அருமை.
ReplyDeleteமிகச் சிறிய வரிகள். ஆனால் மனதை உலுக்கிவிடும் சொற்றொடர்கள். மனது படும் பாடும், படுத்தும் பாடும் மிக அழகாக.
ReplyDeleteதங்கள் கருத்திற்கும், தொடர்வருகைக்கும் நன்றி ஐயா
Deleteகவிதையும் தலைப்பும் அருமை சகோ.
ReplyDeleteநன்றி சகோ.
Deleteசில வேளைகளில் அப்படித்தான்... புரியாத புதிர்...?
ReplyDeleteரசித்தேன்...
ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி சகோ
Delete//..கவிதை முடிந்து விட்டது!..//
ReplyDeleteகவிதை எப்போது முடிந்தது!?..
இப்போது தானே ஆரம்பமாகியிருக்கின்றது!..
கவிதை எப்போது முடிந்தது!?..
Deleteஇப்போது தானே ஆரம்பமாகியிருக்கின்றது!..
;)))).........
Tamil manam 66
ReplyDeleteஆஹா...சகோ...இதுவரை இல்லாத அளவில் தமிழ் மணத்தை வீசச் செய்தமைக்கு நன்றி...66..வாக்குகள் அளித்த அபுதாபி தம்பிக்கு...நன்றி
Deleteதவறாய் 6 அப்படி ஆகிவிட்டது.....
எனக்கும் பள்ளிக்கூடத்தில் விட்டத்தை வெரித்ததுண்டு, விட்டம் ஆரம் ,,,,,,,,, ஆனால் உண்மை நாம் நோக்குவது நினைவில் இல்லாமல், வெற்றுப் பார்வை, அருமையான வரிகள் அழகான பொருள், அருமை,அருமை வாழ்த்துகள்,
ReplyDeleteஅனுபவமாய் ரசித்து...கருத்திட்டமைக்கு நன்றி
Deleteஉங்கள் கவிதையை படித்து நானும் சுயநினைவிற்கு திரும்பிவிட்டேன் சகோ. அருமை. அருமை.
ReplyDeleteஅப்பப்பா...சுயநினைவிற்கு...திருப்பி விட்டீர்கள். நன்றி சகோ
Deleteசுய நினைவுக்கு திரும்பினீங்களா ? அப்படினா ? நீங்க அப்படியா ?
Deleteபொருள் பதிந்த வரிகளுக்கு பொருத்தமான படம் அருமை சகோ...
ReplyDeleteதொடரட்டும் கவிதைகள்.
பாராட்டுக்களுக்கும், ஊக்கப்படுத்துவதற்கும் நன்றி சகோ
Deleteநேத்திரத்தின்
ReplyDeleteநேர் பார்வை
மனம் மட்டும் ராட்டினமாய்...//
ஆஹா!! ஆமாம் ஆமாம்!! பல சமயங்களில் அப்படித்தான். மனம் ஒரு குரங்கு அல்லவா!
பல சமயங்களில் அப்படித்தான். மனம் ஒரு குரங்கு அல்லவா!//
ReplyDeleteஆமாம் உண்மை தான் சகோ. மிக்கநன்றி
மனம் சில நேரங்களில் பிடிபடுவது இல்லைதான்.
ReplyDelete