புதிய வகை
புதினா ரசம்...!!!
புகுந்து கொள்ளும் வாசம்
புன்னகைக்கும் வீடு முழுதும்
எட்டி பார்த்த வயிற்றுக்கு
ஏக்கம் நீக்கி தணிக்கும்
முகர்ந்து பார்த்த மூக்கோ
முனங்கிடும் வயிற்றைப் பார்த்து
விருந்துண்ட விருந்தினரோ
வரவா மற்றொரு நாள் என்பர்
பார்த்துக் கொள்ளுங்கள்...
பண்பான நண்பர்களே...
ருசித்த கதை கேட்க
ருசித்து நானும் காத்திருக்கேன்.
தேவையான பொருட்கள்
து.பருப்பு - 1 1/2 மே.க ( மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்)
தக்காளி பெரிது - 1
ப.மிளகாய் - 2
சாம்பார் பொடி - 1/4 தே.க
மிளகு & சீரகப் பொடி - 1/4 தே.க
உப்பு - தே அ
எலுமிச்சை - 1
கொத்தமல்லி - 2 ஆர்க்கு
புதினா - 1/2 கைஅளவு
தாளிக்க வேண்டியவை
நெய் - 1/2 தே.க
எண்ணெய் - 1/2 தே.க
கடுகு - 1/4 தே.க
வரமிளகாய் - 1
மிளகு - 1/4 தே.க
சீரகம் - 1/4 தே.க
பெருங்காயம் - சிறிது
பருப்பு தண்ணீர் + தக்காளி + ப.மிளகாயை போடவும்.
சாம்பார் பொடி + மிளகு & சீரகப் பொடியைப் போடவும்.
நன்கு தக்காளி வேகும் வரை கொதிக்கவிடவும்.
தாளித்து போட்டு விட்டு வேண்டும் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
உப்பு போட்டு கொதிவரவும் அடுப்பை அணைக்கவும்.
நறுக்கிய மல்லி & புதினாவை சேர்க்கவும்.
எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். மூடி வைக்கவும் சாப்பிடும் போது திறந்து கொள்ளுங்கள்.
( அப்புறம் என்ன மூடிட்டேவா சாப்பிட முடியும் ? )
வாசம் வெளியே போகாம இருக்கும் அப்படின்னு சொல்ல வந்தேன் ஹிஹிஹி...!!!
அன்னத்தில் கலந்தும் சாப்பிடலாம்
ஆவல் மிகுந்தால் குடித்திடலாம்...!!!
சரி சரி நான் போறேன் சாப்பிட...அப்ப நீங்க...?
புதினா ரசம்...!!!
புகுந்து கொள்ளும் வாசம்
புன்னகைக்கும் வீடு முழுதும்
எட்டி பார்த்த வயிற்றுக்கு
ஏக்கம் நீக்கி தணிக்கும்
முகர்ந்து பார்த்த மூக்கோ
முனங்கிடும் வயிற்றைப் பார்த்து
விருந்துண்ட விருந்தினரோ
வரவா மற்றொரு நாள் என்பர்
பார்த்துக் கொள்ளுங்கள்...
பண்பான நண்பர்களே...
ருசித்த கதை கேட்க
ருசித்து நானும் காத்திருக்கேன்.
தேவையான பொருட்கள்
து.பருப்பு - 1 1/2 மே.க ( மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்)
தக்காளி பெரிது - 1
ப.மிளகாய் - 2
சாம்பார் பொடி - 1/4 தே.க
மிளகு & சீரகப் பொடி - 1/4 தே.க
உப்பு - தே அ
எலுமிச்சை - 1
கொத்தமல்லி - 2 ஆர்க்கு
புதினா - 1/2 கைஅளவு
தாளிக்க வேண்டியவை
நெய் - 1/2 தே.க
எண்ணெய் - 1/2 தே.க
கடுகு - 1/4 தே.க
வரமிளகாய் - 1
மிளகு - 1/4 தே.க
சீரகம் - 1/4 தே.க
பெருங்காயம் - சிறிது
பருப்பு தண்ணீர் + தக்காளி + ப.மிளகாயை போடவும்.
சாம்பார் பொடி + மிளகு & சீரகப் பொடியைப் போடவும்.
நன்கு தக்காளி வேகும் வரை கொதிக்கவிடவும்.
தாளித்து போட்டு விட்டு வேண்டும் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
உப்பு போட்டு கொதிவரவும் அடுப்பை அணைக்கவும்.
நறுக்கிய மல்லி & புதினாவை சேர்க்கவும்.
எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். மூடி வைக்கவும் சாப்பிடும் போது திறந்து கொள்ளுங்கள்.
( அப்புறம் என்ன மூடிட்டேவா சாப்பிட முடியும் ? )
வாசம் வெளியே போகாம இருக்கும் அப்படின்னு சொல்ல வந்தேன் ஹிஹிஹி...!!!
அன்னத்தில் கலந்தும் சாப்பிடலாம்
ஆவல் மிகுந்தால் குடித்திடலாம்...!!!
சரி சரி நான் போறேன் சாப்பிட...அப்ப நீங்க...?
வணக்கம்
ReplyDeleteநல்ல விளக்வுரையுடன் மற்றும் செய்முறை விளக்கத்துடன் அசத்தி விட்டீர்கள் நிச்சயம் செய்து பார்க்கிறோம் பகிர்வுக்கு நன்றி த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க தம்பி...முதல்ல வந்து வாக்கு + கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி
Deleteஉங்களின் சரிபாதி...வந்தவுடன் நீங்கள் அனைத்தையும் ருசிப்பீர்கள்...விரைவில் எல்லாம் நல்லபடியாக அமைய வாழ்த்துகிறேன்....பிரார்த்திக்கிறேன்.
Deleteபுதினா ரசம் பார்க்க ருசிக்க வேண்டும் எனும் ஆவலை தூண்டுகிறது. ஒரு சில வாரங்களில் செய்திடுவேன்.ஏனெனில் வீட்டில் புதினா வளர்கிறது. விளக்கமான படங்கள் அருமை உமையாள்!!
ReplyDeleteஆஹா...வீட்டில் வளர்ந்த புதினா...சூப்பர், வாசம் பிரமாதம் தான்...
Deleteசெய்து சாப்பிட்டு விட்டு வந்து மறக்காம சொல்லுங்க...பிரியசகி
நன்றி வருகைக்கு
அட்டகாசம்!.. இது முற்றிலும் புதிய செய்முறை!..
ReplyDeleteநாளைக்கு நிச்சயம் புதினா ரசம் தான்!.. (இன்றைக்குத் தான் சமையல் முடிந்து விட்டதே!..)
அட்டகாசம்! //
Deleteஉண்மையிலே எங்களுக்கு இந்த ரசம் அட்டகாசமாகத் தான் இருந்தது. சரியான வார்த்தை பிரையோகம் ஐயா...
நாளை அமர்க்களப்படுத்தி விட்டு...நன்கு ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்து வந்து கருதிடுங்கள் ஐயா...ஆவலுடன் நாளை...
நன்றி ஆர்வத்திற்கு...
செய்து விடுவோம் ஒரு தரம். புளியில்லா ரசம். நாங்கள் சாதாரணமாக பெங்களூரு தக்காளிதான் உபயோகிப்போம். புளி சேர்க்க வேண்டாமென்றால் புளிப்புச் சுவைக்கு நாட்டுத் தக்காளி போடலாம்!
ReplyDeleteஇங்கு நான் எலுமிச்சை சேர்த்து இருக்கிறேன் சகோ....
Deleteவிரைவில் செய்வீர்கள் என நினைக்கிறேன்
இங்கு பொங்களூர் + நாட்டுத் தக்காளி இணைந்த விதமாக இருக்கும். புளிப்பும் இருக்கும் பார்க்க பொங்களூரு தக்காளி போலவும் இருக்கும்....))))....
வருகைக்கு நன்றி
புதினா ரசம் புதிய வகையே....
ReplyDeleteதமிழ் மணம் 2
வரவிற்கு நன்றி சகோ
Deleteமிகவும் ருசியான ரஸமான பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteநன்றி ஐயா
Deleteபுதினா ரசம் மிக அருமை.
ReplyDeleteநன்றி சகோ
Deleteஎங்கள் வீட்டம்மைக்கு நிறைய வேலை வைக்கிறீர்கள் சகோ..!!!!
ReplyDeleteம்ம்.
பகி்ர்விற்கு நன்றி.
த ம கூடுதல் 1
அப்படியா...விஷயம்..சகோ கோபித்துக் கொள்ளப் போகிறார் என் மேல்...ஆனால்...சாப்பிட பின் கூள் ஆகிவிடுவார் என நினைக்கிறேன்....))))...
Deleteநன்றி சகோ
கவிதையும் கலக்கல் ரசமும் அருமை!
ReplyDeleteவரவிற்கு நன்றி அக்கா
Deleteputhina vaasam inga varai thokkuthu akka
ReplyDeleteவாசம் ரெம்ப தூக்கியதால் வந்து விட்டாய் என நினைக்கிறேன்.....நிறைய நாட்கள் ஆகிவிட்டனவே...வந்து கருத்திட்டமைக்கு நன்றி சங்கீதா
Deleteபுதினா ரசம் ! புதுமை! ஸ்ரீராம் அவர்களின் கருத்து வழி மொழிகின்றோம்...செஞ்சுட்டாப் போச்சு அருமை! மண்க்குது இங்க...
ReplyDeleteகீதா...
செய்து விட்டு சொல்லுங்கள் சகோ...நீங்கள் ஆர்வமுடன் உடனே செய்து விடுவீர்கள். நன்றி
Deleteரசமான கவிதை
ReplyDeleteமுதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சகோ
Deleteத + ம 6
Deleteபுதிய ரசம்... புதினா ரசம்...! செய்து பார்க்கிறோம்... நன்றி...
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2015/04/Salt.html
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றி
Deleteஒருவித ரசனையோடேயே சமையல் செய்கிறீர்கள் அதனால் தான் ரசமும் உங்கள் கைப்பகுவத்தில் வாசமும் ருசியும் தூக்கலாகவே இருக்கிறது. செய்து பார்க்கிறேன்மா உங்கள் தயவில்.
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றி
Deleteஇன்றைய பதிவுக்கு இன்றே வரவேண்டும் அதுதான் பொருந்தும்.
ReplyDeleteபொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காது.
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றி
Deleteஒரு புறம் புதின ரசம், இன்னொரு புறம் கவிதை அசத்திவிட்டீர்கள் ஆன்ட்டி....
ReplyDeleteவாழ்க வளமுடன்.....
மகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றி
Deleteபுதினா ரசம்.... - நல்லா இருக்கே.... செய்து பார்த்துடலாம்! :)
ReplyDeleteமகிழ்வான வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றி
Delete