உ.கிழங்கு பொரியல் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. சட்டுன்னு செய்திடலாம். இது சாம்பார், ரசம், வத்தக்குழம்பு, மோர்க்குழம்பு என நல்ல காம்பினேஷனாக இருக்கும். ஆல் ரவுண்டர்...!!!
இது எல்லோரும் செய்வது தான். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பொரியல் இல்ல....?
சும்மா...நானும் இன்று செய்தேன்...அதாங்க உங்களுக்கும் கொடுக்கலாம், எவ்வளவு நாளாச்சு...? அப்படின்னு வந்தேன்.....
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 2 ( வேகவைத்து தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள் )
வெங்காயம் - 1
தக்காளி - 1
சாம்பார் பொடி - 1 தே.க
மிளகாய்ப் பொடி - 1/4 தே.க
மஞ்சள் தூள் - சிறிது
மிளகு& சீரகப் பொடி - 1/2 தே.க ( வாயுவை போக்கும் )
உப்பு -ருசிக்கு
கருவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
தாளிக்க வேண்டியவை
எண்ணெய் - 3 மே.க
கடுகு - 1/4 தே.க
உ.பருப்பு - 1/2 தே.க
க.பருப்பு - 1/2 தே.க
சோம்பு - 1/4 தே.க
தாளிக்கவும்
வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
தக்காளி சேர்த்து வதக்கவும்.
பொடிகளைப் போட்டு நன்கு கிளறவும். உப்பு சேர்க்கவும்.
உ.கிழங்கை போட்டு கிளறி வேக விடவும்
கிழங்கில் நன்கு சாரவும் மல்லி போட்டு இறக்கவும்.
அப்பாடா...பொரியல் ரெடியாகிடுச்சு...!!!
சமையலின் அரிச்சுவடி தெரியாத என்னையும் சமைக்க வைத்துவிடுவீர்கள் போல.. :))
ReplyDeleteஉண்ணத் தூண்டும் உணர்வுடன் படங்கள்.
அருமை சகோ
த ம 1
:))))).......!!!
Deleteமுதல் வருகைக்கும், வாக்கிற்கும் நன்றி சகோ...
உருளைக்கிழங்கு காரக்கறி படங்கள் + செய்முறை விளக்கங்கள் அருமை.
ReplyDeleteஎனது வீட்டில் சாம்பார் / வற்றல் குழம்பு / மோர்க்குழம்பு போன்ற அனைத்துமே காரசாரமாக [காரம் தூக்கலாகவே செய்யப்படுவதால்] எனக்கென்னவோ தொட்டுக்கொள்ள இந்த உருளைக்கிழங்குக் காரக்கறியை விட, உருளைக்கிழங்கு பொடிமாஸ் என்று செய்தால் விருப்பம் மிக அதிகமாவது உண்டு.
மற்றபடி உப்புச்சப்பில்லாத சாப்பாட்டுக்கு இந்த உருளைக்கிழங்கு காரக்கறி மேட்ச் ஆக நன்றாகவே இருக்கும்தான்.
மிகவும் ருசிமிக்க இந்தப் பகிர்வுக்கு நன்றிகள்.
உ.கிழங்கு பொடிமாஸ் சூப்பராக இருக்கும் ஐயா நன்றி.
Deleteபடங்கள் சாப்பிடும் ஆவலை தூண்டுகின்றன. எனக்கு சாப்பிட மட்டுமே தெரிவதால், யாரவது சமைத்து கொடுத்தால் சாப்பிடுவேன். மற்றபடி சமையல் தெரிந்தவர்களுக்கு நல்ல பதிவு!
ReplyDeleteத ம 2
)))....
Deleteநன்றி சகோ
ரசிக்கவும், ருசிக்கவும் அருமை.
ReplyDeleteசும்மா கிடைத்த உ.கி பொ அருமையான சுவை.
ReplyDeleteத.ம.4
நன்றி சகோ
Deleteசாம்பார் ,தயிர் மோர் ரசம் எல்லாத்துக்கும் சூப்பர் காம்பினேஷன் !
ReplyDeleteஆமாம் ஏஞ்சலின் நன்றி
Deleteருசியான டிஷ். தக்காளி போட்டால் நாங்கள் அதை பொரியல் என்ற பெயரிலிருந்து எடுத்து விடுவோமே.....!!!! :)))))))
ReplyDeleteஓஓ..அப்படியா...? சரி சரி
Delete))).....
நன்றி சகோ
ஆனா தக்காளி போட்டு செய்கிற இந்த பொரியல் நல்ல டேஸ்டாக இருக்கும். ஒரு முறை செய்து பார்த்து விடுங்கள். உங்களுக்குத்தான் கைவந்த கலையாச்சே...நல்ல டேஸ்டா செய்வீங்க...ருசித்து விட்டு சொல்லுங்கள் சகோ
Deleteஉருளைக்கிழங்கு பொரியல் எடுத்து சாப்பிடணும் போல இருக்கு ! செய்முறை, விளக்கப்படங்கள் மிக அருமை சகோ.
ReplyDeleteகாணவே சுவையாக உள்ளது! ஆனால் எனக்கு ஆகாதே!
ReplyDeleteநல்லா இருக்கும்......
ReplyDeleteநன்றி....
காரசாரமா உருளைக்கிழங்கு. சரி!.. ரசம் எங்கே?..
ReplyDeleteஇருந்தாலும் - மார்க்கெட்க்கு போய்ட்டு வர இவ்வளவு நேரமா!..
ரசம் அடுத்த பதிவாய் ஐயா...நன்றி
Deleteவணக்கம்
ReplyDeleteசமையல் அசத்தல்... உண்டு மகிழ்ந்தது போல உணர்வு... நிச்சயம்செய்து பார்க்கிறோம். த.ம7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி சகோ
Deleteஅம்மா தாயே பார்க்க அழகா த் தான் இருக்கிறது பார்த்து ஏங்கத் தான் முடியுமே ஒழிய இதெல்லாம் சாப்பிட முடியாதும்மா நமக்கு எல்லாம் பத்தியம் தான் ஹா ஹா ...
ReplyDeleteசரி சரி அசத்துங்க அசத்துங்க !
சூப்பர்...! உங்களின் செய்முறைப்படி செய்து பார்க்கிறோம்... நன்றி...
ReplyDeleteநன்றி சகோ
Deleteகாரசாரமான உருளை பொரியல். ஈசியானதும் கூட.செய்துபார்கிறேன் உமையாள்.நன்றி.
ReplyDeleteநன்றி சகோ
Deleteஉமையாள்,
ReplyDeleteசூப்பர் உருளைக்கிழங்கு பொரியல் .
உருளைக்கிழங்கு என்றால் அவ்வளவு விருப்பம் எனக்கு. சில சமயங்களில் இது மாதிரியும் செய்வேன்.
எனக்கு ரொம்ப பிடிக்கும். சூப்பர்.
ReplyDeleteகிளம்பிட்டோம் எடுத்து வைங்க..... அருமை சாப்பிடனும் போல இருக்கு....
ReplyDeleteஆஹா.. பிரமாதம். நான் தக்காளி சேர்க்காமல் பூண்டும் வெங்காயமும் சேர்த்து பொரியல் செய்வேன். பூண்டு வாசனையுடன் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இந்தமுறையிலும் செய்துபார்க்கிறேன். நன்றி உமையாள்.
ReplyDeleteசேம்! சேம்! செய்வதுண்டு. கீத மஞ்சரி அவங்க சொன்னது போலவும்....ரொம்ப பிடிச்ச டிஷ்ஷுங்கோ! நாக்குல தண்ணி ஊறுது...
ReplyDeleteஎனக்கொரு டவுட்டு! அதப்படி எப்போதும் நீங்கள் கிச்சனில் கமராவும் மையுமாகத்தான் இருப்பீங்களா??? ஹாஹாஹா ...........மிகவும் துல்லியான புகைப்படங்கள்.
ReplyDeleteநன்றி அருமையான பதிவு.