பரிதாபத்தை எதிர் பார்த்தான்...
பரிதாபம் கிடைத்தது
மகிழ்ந்து போனான்...
காரியம் கைகூடியது
அடுத்துஅடுத்து...
முயன்றான்...
பாவமாகிப் போனான்
தொடர்ந்தான்....
தொல்லையானான்
திரும்பவில்லை யாரும்
திருந்தாதவன் இவனென...
திசைமாறிப் போனார்கள்
நண்பர்கள்...
சுய பச்சாதாபம்
சூழ்ந்து கொண்டது
வீட்டுக் கைதியானான்
பரிதாபம் அவனை
இப்போது படுத்தியெடுக்கிறது.
பரிதாப நிலையென்றாலும்
யாருக்கும் இடம் கொடேல்
பரி போல் எழுச்சி கொண்டு ஓடலாம்
வாழ்க்கை வசப்படும்.
ஆம் சகோதரி!
ReplyDelete"பரி போல் எழுச்சி கொண்டு ஓடலாம்
வாழ்க்கை வசப்படும்."
உண்மையும்கூட! ஆனால் பரி தறிக்கெட்டு ஓடாது இருக்க வேண்டும் அல்லவா?
நட்புடன்,
புதுவை வேலு
பரி தறிக்கெட்டு ஓடாது இருக்க வேண்டும் அல்லவா?//
Deleteஆம் அளவுக்கு மிஞ்சினால் எதுவும் ....அப்படித்தான். நம் கையில் தான் இருக்கிறது குதிரையின் கடிவாளம்.
அருமை. நல்லதொரு கருத்தை நயமாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
ReplyDeleteநன்றி ஶ்ரீராம்
Deleteபரிதாபஞ்களும் சுய பச்சாதாபங்களும் நம்மை வளர்க்காது என்பார்கள் கற்றரிந்த பெரியவர்கள்,மாறாய் விழுந்து எழ பழக்கிக்கொள்ளுதல் நலம் என்கிறார்கள்.
ReplyDeleteஅதை நான் முன் மொழிகிறேன்/
ஆம் உண்மை தான் சகோ பரிதாபத்திற்கு இடம் அளிக்காமலும், விழுந்து எழும் போது அதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு , நம்மால் முடியும் என்கிற நம்பிக்கையுடன் செல்ல வேண்டும். மிக்க நன்றி
Deleteஇன்னும் கொஞ்சம் முயற்சி செய்யுங்க. கவிதை உங்களுக்கு இயல்பாக வருகின்றது.
ReplyDeleteஇன்னும் முயற்சி செய்கிறேன் சகோ. மிக்க நன்றி
Deleteவணக்கம்
ReplyDeleteபரியை மனித வாழ்க்கைக்கு ஒப்பிட்ட விதம் நன்று கவியை இரசித்தேன் த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி சகோ
Deleteநமக்குள் நமக்கே வேண்டும் ஊக்கம்...
ReplyDeleteஆம்....நன்றி சகோ
Deleteஎழுந்துவிட்டாலே வெற்றிதான்...
ReplyDeleteஅழகிய வரிகள்
ஆம் தங்களின் முதல் வருகைக்கு வந்தனங்கள்
Deleteநன்றி சகோ
அவன் வேண்டியது பரிதாபம் தானே.. அதை அனுபவிக்கட்டும்!..
ReplyDeleteநன்ற ஐயா
Deleteபரிதாபத்தை இனி பரிதாபமாகப் பார்க்க வைத்துவிட்டது உங்கள் கவிதை.
ReplyDeleteபரிக்கும் கடிவாளம் உண்டு. நம் முத்தோர் சொல். கவிதை அருமை.
ReplyDeleteபரிக்கும் கடிவாளம் உண்டு. நம் முத்தோர் சொல்//
Deleteஆம். சோர்ந்து விடாமல் எழுச்சி கொண்டு நாம் இருக்கவேண்டும். நன்றி சகோ
பரிதாபத்திற்கு கடிவாளமிட்டால் பரியாக எழுந்து ஓடலாம்! அருமை!
ReplyDeleteநன்றி சகோ
Deleteவணக்கம் சகோதரி.!
ReplyDeleteநல்லதோர் கவிதை.எதுவுமே அளவுக்கு அதிகமானால் வாழ்க்கை கசந்துதான் போகும். அது இனிதாக. மாற்றம் நிச்சயம் வேண்டும்.என்ற வாழ்க்கை தத்துவத்தை உணர்த்தியது தங்கள் கவிதை.!வாழ்த்துக்கள்.!
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
பரிதாப நிலையென்றாலும்
ReplyDeleteயாருக்கும் இடம் கொடேல்
பரி போல் எழுச்சி கொண்டு ஓடலாம்
வாழ்க்கை வசப்படும்
ஊக்கம் தரும் மருந்து போல நல்ல கருத்து!
நன்றி சகோ
Deleteஅருமையான கவிதை சகோ பாராட்டுகள்
ReplyDeleteதமிழ் மணம் நவரத்தினம்
நன்றி சகோ
Deleteவாழ்க்கை வசப்படும் ..... கவிதைத்தலைப்பும், வரிகளும், வெள்ளைக் குதிரைப்படமும் பேரெழுச்சியாக உள்ளன. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteநன்றி ஐயா
Deleteநன்றாக எழுதுகிறீர்கள் தோழி.தொடர்ந்து எழுத வேண்டும்.
ReplyDeleteஎழுதுகிறேன் சகோ நன்றி
Deleteஅவன் ஆடிய வேடம் கலைந்ததா அந்தோ பரிதாபம் ,அடியேனின் அனுதாபம் :)
ReplyDeleteத ம 10
நன்றி ஐயா
Deleteபரி தாபம்
ReplyDeleteபரிதாபம்
சூப்பர் தோழி!!
நல்லதொரு கருத்து ! அதை நயம்பட அழகாகச் சொல்லி இருக்கின்றீர்கள் சகோதரி!
ReplyDeleteநன்றி சகோ
Deleteஅட தன்னம்பிக்கை கவிதை உங்களுக்கு என்னமா வருது. அருமை அருமை. வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteநன்றி சகோ
Deleteநல்ல கருத்துக்கள் கொண்ட கவிதை..
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நன்றி அம்மா
Delete