Sunday 15 March 2015

கருமைச் சூரியன் மெதுவாக...!







வானத்தின் இமைகள் திறந்தனவே
விடியல் விடியத் துவங்கியதே
தூக்கம் கலையாக் கண்களுக்கு
பனிப்புகை  திரைகள் யிட்டனவே

கருமைச் சூரியன் மெதுவாக
உருண்டு பார்க்க முயல்கின்றான்
பறவைகள் முனங்கள் ஒலியாலே
இரசித்தே வெளிவர தயங்கிநின்றான்

மலர்கள் விரியும்  இசைகேட்டு
மகிழ்ந்தே தன்னை புதுப்பித்தான்
பறவையின் துறுதுறு நாட்டியத்தால்
முறுவல் பூத்தசையா  நிற்கின்றான்

குளிர்தென்றல் இவனின் நிலைகண்டு
வீசியே அவனை உசுப்பிவிட்டான்
தென்றல் தடவலின் சுகங்கண்டு
சொக்கியே மேலும் நிற்கின்றான்

பூவின் வாசம் கூட்டமைத்து
அவனின் நாசியில் நுழைந்தனவே
பெருமூச்சு விட்ட சூரியனும்
இறக்கை விரித்து புறப்பட்டான்

ஒளியின் வெள்ளப் பாய்ச்சலும்
ஓவியத்தை உலகினில் தீட்டிற்று
காலை கண்களை விரித்துக் கொள்ள
காரியம் செய்ய அவன் போனான்






21 comments:

  1. ஆஹா ஹாசினிக்கு விடிந்து விட்டதே ? சந்தோஷம் ...
    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் , தம விற்கும் நன்றி சகோ

      Delete
  2. நல்ல கவிதை சகோ.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி.!

    புலரும் காலைப் பொழுதை கவிதையின் வார்த்தைகள் எனும் தூரிகைகளினால் சிறந்த ஓவியமாக்கி விட்டீர்கள் சகோதரி.. .நல்ல கற்பனைத் திறத்துடன் ௬டிய வாசகங்கள்...
    ஒவ்வொரு வார்த்தையும் ரசிக்கும்படி இருக்கிறது...பொங்கி வந்த கற்பனை நயத்திற்கும் கருமை சூரியனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ...

    என் வலைத்தளம் வந்து வாழ்த்தியமைக்கும் நன்றிகள் சகோதரி..
    இனியும் தொடர்ந்திட வேண்டுகிறேன்...நன்றிகள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. அன்பான வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோ

      Delete
  4. மலர்கள் விரியும் இசைகேட்டு
    மகிழ்ந்தே தன்னை புதுப்பித்தான் ......

    விடியும் பொழுது அழகு .... இந்த வரிகளில்.

    ReplyDelete
    Replies
    1. அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  5. வணக்கம்
    ஆகா... ஆகா.. மனதை நெருடும் வரிகள் சொல்லிய விதம் வெகு சிறப்பு. பகிர்வுக்கு நன்றி த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. ஒவ்வொரு வரியும் இனிமை... பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  7. கவிதை அருமை!
    த ம 4

    ReplyDelete
    Replies
    1. அன்பான முதல் வருகைக்கும், கருத்திற்கும், தம விற்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  8. சூப்பர் சூப்பர்! மலர்களின் விரிதலை அருமையான வார்த்தைகள் விவரிக்கின்றன! அருமை!

    ReplyDelete
    Replies
    1. அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி

      Delete
  9. ரசித்தேன் கவிதையை.

    ReplyDelete
  10. அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  11. அன்புடையீர்..
    பதிவு வெளியான அப்போதே கவனித்தேன்.. ஆனாலும் -
    இணைய வேகம் குறைந்ததால் கருத்திட இயலவில்லை.. இதோ வந்து விட்டேன்!..

    அழகான விடியலை கண்முன்னே நிறுத்துகின்றது - கவிதை!..
    அமுதாகத் தமிழாக என்றும் வாழ்க!..

    ReplyDelete
  12. காலைப் பொழுது கவிதை எழத கற்பனை தந்தது !நன்று!

    ReplyDelete
  13. அன்புள்ள சகோதரி,

    புத்தப் புதுக்காலை...கவிதை இரசித்துப் படித்தேன்.

    மலர்கள் விரியும் இசைகேட்டு
    மகிழ்ந்தே தன்னை புதுப்பித்தான்

    -நன்றி.
    த.ம.8.

    ReplyDelete
  14. ஒளியின் வெள்ளப் பாய்ச்சலும்
    ஓவியத்தை உலகினில் தீட்டிற்று
    காலை கண்களை விரித்துக் கொள்ள
    காரியம் செய்ய அவன் போனான்//
    அருமை.

    ReplyDelete