உத்ராயணத் திங்கள் தோன்றிற்று இன்னாள்
எம்பெருமானைப்பாட நீவீர் துயில் களைவீர்
கார்மேக வண்ணனை கருத்திற் கொண்டே
காலைப் புலருகையில் அவன்காலைப் பற்றுவீர்
உய்விற்கு வழியொன்றே உகந்தே செய்யக்கடவீர்
உத்தமன் அவனே உலகளந்த நம்பியே
கேட்டீரோ பெண்டீர் கிருபைக்கு வாரீர்
தாமரைத் தாள்தன்னை பற்றிப் பாடிடவே
மார்கழி மாதத்தில் மகிழ்ந்து எழுதிய பாவைகள். அவ்வப்போது இங்கு பதிவிட இருக்கிறேன்.
திருப்பாவை மெட்டிலேயே...
10 நாட்களாக என்னுடைய கணினி சற்று ப்ராளமாக இருக்கிறது. ஆகையால் நிறைய தளங்களுக்கு என்னால் சென்று வாசித்து கருத்திட முடியவில்லை. ஆகையால் நண்பர்களே தவறாக நினைக்க வேண்டாம்.
படம் கூகுள் நன்றி.
தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் உங்களின் ஊக்கம் தான் என்னை மேலும் மேலும் எழுத தூண்டிக் கொண்டிருக்கின்றன. நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி
கிருஷ்ணர் கவிதை அருமை
ReplyDeleteதமிழ் மணம் 1
தமிழ் மண இணைப்பிற்கும் , வாக்கிற்கும், கருத்திற்கும் நன்றி சகோ
Deleteஆண்டாளின் அழகிய படமும் திருப்பாவை மெட்டில் எழுதியுள்ள பாடலும் அருமை. பாராட்டுக்கள்.
ReplyDeleteதொடர்ந்து உற்சாகமாக பாராட்டுவதற்கு மிக்க நன்றி ஐயா.
Deleteஅருமையாக இருக்கிறது. ஒரு ப், ஒரு ள ஒரு த் சேர்க்கோணும், மாற்றணும்! பாடல் அருமை.
ReplyDeleteசேர்த்து விட்டேன், மாற்றி விட்டேன் சகோ. சொன்னதற்கு மிக்க நன்றி.
Deleteஅழகான படமும் பக்திப் பாடலும் அருமை.
ReplyDeleteஇனிமையாக இருக்கின்றது..
ReplyDeleteசர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்!..
நன்றி ஐயா
Delete// உகந்தே செய்யக்கடவீர்... //
ReplyDeleteஆகா...! வாழ்த்துக்கள் சகோதரி...
தொடர்கிறோம்...
நன்றி சகோ
Deleteகிருஷ்ணப்பாவை அருமை. புகைப்படம் அதைவிட அருமை. எழுதுங்கள். தொடர்ந்து வாசிக்கிறோம்.
ReplyDeleteஅழகிய புகைப்படம்.பாவை அதைவிட அருமை. வாருங்கள் , நாங்களும் தொடர்கிறோம்.
ReplyDeleteநன்றி சகோ
Deleteதிருப்பாவை மெட்டிலேயே மார்கழி மாதத்தில் மகிழ்ந்து எழுதிய பாவைகளை தங்களின் பதிவினில், தினம் காண கண் கோடி வேண்டும் சகோதரி!
ReplyDeleteஅருமை தொடர்க
த ம 6
நட்புடன்,
புதுவை வேலு
அழகான பாடல்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நன்றி சகோ
Deleteபுதிய திருப்பாவை அருமை சகோதரி!
ReplyDeleteநன்றி சகோ
Delete