Friday, 7 November 2014

வரமிளகாய் சட்னி






தேவையான பொருட்கள்



சின்னவெங்காயம் - 1 கையளவு
வரமிளகாய் - 3
புளி - சிறு நெல்லியளவு
உப்பு -  ருசிக்கு


சிறிது எண்ணெய் விட்டு வரமிளகாயை மட்டும் கருக்காமல் ...
சிவக்க வாசம் வரும் அளவு வறுத்துக் கொள்ளுங்கள்.


மீதி எல்லா (பச்சையாக)பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில்  நன்கு அரைத்துக் கொள்ளுங்கள் .

சிறிது நீர் சேர்த்து அரைக்கலாம்.

பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.

தாளிக்க வேண்டியவை

நல்லெண்ணெய் - 6 அ 7 மே.க
( நல்லெண்ணெய்யின் அளவு கூடுதல் வேண்டும் )
கடுகு 1/2 தே.க
உ.பருப்பு - 3/4 தே.க
பெருங்காயம் - சிறிது
கருவேப்பிலை - சிறிது


                                             தாளிக்கவும்





தாளித்ததை சூடாக உடனேயே சட்னி மேல் விட்டு கலக்கவும்.

பச்சை வாசம் முக்கால் வாசி போய் விடும். பச்சை வீசாது








அம்மியில அரைத்தால் சும்மா அபாரமாக இருக்கும் இந்த சட்னி. மிக்ஸி இருந்தாலும் ஊரில் இதை மட்டுமாவது அம்மியில் அரைக்க ...ஜம்முன்னு இருக்கும்.


நிறைய அளவில் செய்யும் போது தண்ணீர் சேர்க்காமல் துவையலாக அரைத்துக் கொள்ளலாம்


வெளியூர் போகும் போது நீர் சேர்க்காமல், கை படாமல் செய்து எடுத்துப் போனால் 3, 4 நாட்கள் உபயோகப் படுத்தலாம்.

இதுவும் எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும்.

சூடான இட்லி மேல் நல்லெண்ணெய் விட்டு இச் சட்டினியுடன் சாப்பிட ,சாப்பிட.....அடடே என்ன.... இட்லி மாவைக் காணோம்...?


அய்யோ சாமி நான் இந்த ஆட்டத்துக்கு வரலை ..விடு ஜீட்.....!!!





24 comments:

  1. நல்ல காரசாரமான பகிர்வு. :)))))

    பாராட்டுகள். வாழ்த்துகள்>

    ReplyDelete
  2. இது அம்மா கைவண்ணத்தில் சாப்பிட்டிருக்கிறேன்...
    மிகவும் சுவையாக இருக்கும்...
    வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். அம்மா கை பட்டாலே அருமையாக இருக்கும்.
      நன்றி சகோ

      Delete
  3. வெள்ளைப்பணியாரத்துக்கு ஏற்ற ஒரு சைடிஷ்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோ வெள்ளைப்பணியாரத்துக்கு சூப்பராக இருக்கும்.
      நன்றி சகோ

      Delete
  4. ஆகா...! செய்து பார்த்து விடுகிறோம்...! நன்றி...

    ReplyDelete
  5. சுவையான சட்னி

    ReplyDelete
  6. சிறந்த செய்முறை வழிகாட்டல்
    தொடருங்கள்

    ReplyDelete
  7. வரமிளகாய் சட்னி பதிவு சூப்பர் !! எங்க அம்மாவின் கைப்பக்குவம் போல இருக்கு.

    ReplyDelete
  8. இந்த ஊர் குளிருக்கு நான் எப்படியாவது இட்லிக்கு ஊறவைச்சி செய்தே சாப்பிடனும் இந்த சட்னியை !! வெரி கலர்புல் :)

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இதே பிரச்சனைதான்...முயன்று செய்யுங்கள், மகிழுங்கள்.

      http://www.umayalgayathri.blogspot.com/2013/11/blog-post_13.html இட்லி கவிதை

      பாருங்கள். நன்றி தோழி

      Delete
  9. ஆஹா .. இந்த குளிருக்கு காரமா சாப்பிடனும் போல இருக்கிக்கேன்னு நினைத்தேன் .. அழகா மிளகாய் சட்னி செய்து காட்டிடிங்க ...சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. ஆமா குளிருக்கு கார சாரம் தான் நாவிற்கு ருசி இல்ல.நன்றி சங்கீதா.

      Delete
  10. ஜோரா இருக்கு வரமிளகாய் சட்னி! நன்றி!

    ReplyDelete
  11. வணக்கம் சகோதரி.!

    உண்மையிலேயே, இட்லிக்கு இந்த சட்னி சரியான ஜோடி..! தங்களின் செய்முறை விளக்கங்களும், படங்களும், இட்லியை ௬ட எதிர் பார்க்காமல், நாளைக்கே செய்து விடு , என்கிறதே..!

    அதனால், நாளை இந்த சட்னிதான், காலை டிபனுடன் ஜோடி.! (எந்த டிபனாய் இருந்தாலும் சரி.!)

    நட்புடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. அதனால், நாளை இந்த சட்னிதான், காலை டிபனுடன் ஜோடி.! (எந்த டிபனாய் இருந்தாலும் சரி.!)
      அப்படியா...சரி சரி சகோதரி செய்து விட்டு சொல்லுங்கள். நன்றி

      Delete
  12. வரமிளகாய் சட்னி சாப்பிட வரம் கிடைக்க வேண்டும்! :)

    நமக்கு காரம் ஒத்துக்காது! :))))

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. வரமிளகாய் சட்னி சாப்பிட வரம் கிடைக்க வேண்டும்! :) // சற்று குரைவான காரமாக சாப்பிடுங்கள் சகோ. நன்றி

      Delete
  13. நீங்க சீக்கிரமே பதிவுகள் போடுவதால் சிலது தெரியாமலே போய் தாமதமா தெரிகிறது. மன்னிச்சூ.
    சட்னி பார்க்க நல்ல கலர்புல்லா இருக்கு. தோசைக்கும் காம்பினேஷன் ஆக இருக்கும். செய்கிறேன் உமையாள். என்ன இருந்தாலும் உங்க பீட்ரூட் சூப் இந்த குளிருக்கு சூப்பரோஓ சூப்பர். நன்றிகள்.

    ReplyDelete
  14. இன்று எங்கள் வீட்டில் இந்தச் சட்னிதான்.

    நன்றி சகோ!

    ReplyDelete