Thursday, 20 November 2014

பருப்பு சாதம்

பருப்பு சாதம்....கண்டிப்பா சின்ன வயசுல சாப்பிட்டு இருப்போம்.
சாந்தமான, சத்தான உணவு இல்லையா...? அந்த பருப்பு வாசமும், நெய்யின் மணமும் சும்மா கும்முன்னு இருக்கும் இல்ல. பெரியவர்களுக்கும் அது பிடிக்கும்.
குழந்தைகளுக்கு பருப்பு சாதம் கொடுப்போம். நாமும் அது போலும் சாப்பிடலாம்...இல்லை என்றால் நமக்கா இதைப் பண்ணி சாப்பிடலாம்.

சுலபமாக, சத்தாக...விரைவாக செய்து சாப்பிடலாம்.




தேவையான பொருட்கள்

ப.அரிசி - 3/4 கோப்பை
து.பருப்பு - 1/4 கோப்பை
மஞ்சள் தூள் - சிறிது
தண்ணீர் - 3 1/2 கோப்பை

அரிசி + பருப்பு+ மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவிடவும். பின் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.


தாளிக்க வேண்டியது

எண்ணெய் - 1 1/2  மே.க
கடுகு - 1/4 தே.க
சீரகம் - 3/4 தே.க
வரமிளகாய் - 2
பெருங்காயம் - சிறிது
கருவேப்பிலை - சிறிது
பூண்டு - 5 அ 6 பல் (நசுக்கிக்கொள்ளவும்)






                                                    தாளிக்கவும்.

1/2 கோப்பை தண்ணீர் சேர்க்கவும்.
உப்பு சேர்க்கவும்.








                              சாதத்தை சேர்க்கவும்












சாதம் உப்பு ,காரம் சார மூடி போட்டு மிதமான தீயில் சற்று விடவும்.


2 மே.க நெய் விட்டு கிளறவும்.

அந்தே....தான்













21 comments:

  1. எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. எளிமையான செய்முறை தான் செய்து பாருங்கள் சகோ

      Delete
  2. எனக்கு கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் பருப்பு சாதம் ரொம்ப பிடிக்கும்.
    வீட்டில் இந்த மாதிரி பருப்பு, 2 மே.க நெய் விட்டு சாப்பிட்டால், என்னாகிறது?

    குழந்தைகளுக்கு ஏற்ற சாதம்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் பருப்பு சாதம் ரொம்ப பிடிக்கும் //
      ஆம் சகோ எனக்கும் அது மிகவும் பிடிக்கும்.
      அது குழந்தைகள் சப்பிடுவது போல் காரம் எல்லாம் இல்லாமல் இருக்கும்.அதன் சுவையே தனிதான்.

      இது கொஞ்சம் காரமாக இருக்கும்.

      வீட்டில் இந்த மாதிரி பருப்பு, 2 மே.க நெய் விட்டு சாப்பிட்டால், என்னாகிறது? //

      பயப்பட வேண்டாம் சகோ. இது பொங்கல் பண்ணி சாப்பிடுவோம் இல்லையா அந்த மாதிரித்தான். அரிசி+பருப்பு சேர்ந்தால் 1 உளக்கு ஆகிவிடும். அந்த மொத்த அளவிற்குத்தான் 2 மே.க நெய் என்றேன்.

      சாம்பார் சாதம் எல்லாம் ஒரு வேளைக்கு பண்ணுவோம் இல்லையா...அந்த மாதிரி சூடாக இதுவும், தேங்காய் துவையலும் செய்து சாப்பிடலாம்.

      வெளியே போய்விட்டு வந்த அன்று, காய்கறி இல்லாத பொழுது, குவிக்காக சத்தாக சாப்பிட இது மிகவும் ஏற்றது. இந்த அனுபவத்தால் நாங்கள் சாப்பிட்ட பொழுது ஒரு நிறைவான ஆகாரமாக இது இருந்தது. சில சமயம் பெண்களுக்கு அலுப்பாக இருக்கும் அன்று இது நன்றாக இருக்கும்.

      என் அனுபவம் முயன்று பாருங்கள்.

      Delete
  3. http://www.4shared.com/rar/COPXYRRX/bhagavatham.html இந்த சுட்டியை கிளிக் செய்து ஸ்ரீமத் பாகவதம் ஒலிப்புத்தகம் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். RAR கோப்பினை திறப்பதற்கு WinRar என்ற மென்பொருள் தேவை. அந்த மென்பொருளைப் பயன்படுத்தி RAR கோப்பினை திறந்தபின், ஒலிக் கோப்புகள் ஒவ்வொன்றையும் கேட்கமுடியும். புத்தகமாக டவுன்லோட் செய்யும் வகையில் லிங்க் கிடைக்கவில்லை. அப்படியே பருப்பு சாதம் பார்சல் அனுப்பிவிடுங்கள். சாப்பிட ஆசையாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் முயன்று லிங்க் அனுப்பியுள்ளீர்கள் மிக்க நன்றி சகோதரரே. நான் முயன்று பார்க்கிறேன், பார்சல் அனுப்பி விட்டால் போச்சு சகோ.

      Delete
  4. வீட்டில் குறித்துக் கொண்டார்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. சகோதரியார் எப்படி இருக்கு என்று சொன்னவுடன் தெரிவியுங்கள் சகோ

      Delete
  5. மிகவும் பிடித்த சாதம்...இப்படி எல்லாம் கும் நு மணக்க மனக்கக் கொடுத்தா இங்க நாக்குல தண்ணிதான் சொட்டுது....ஹஹஹ்

    இதத்தானே கொஞ்சம் வித்தியாசமா நார்த்ல கிச்சடினு செய்வாங்க.....ரைட்டோ...

    ReplyDelete
  6. எனக்கு ரொம்பப் பிடித்த உணவு
    படங்களுடன் பகிர்வு அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. Replies
    1. தமிழ் மணம் வாக்கிற்கு நன்றி ஐயா

      Delete
  8. பார்க்கும்போது சாப்பிடவேணும் போல இருக்கு. படங்களுடன் நல்லபகிர்வு உமையாள்.நன்றி

    ReplyDelete
    Replies
    1. பார்க்கும்போது சாப்பிடவேணும் போல இருக்கு.//

      நன்றி பிரியசகி

      Delete
  9. வணக்கம்
    சகோதரி
    சாப்பிட வேண்டும் என்ற ஆசைதான் இருந்தாலும் செய்து தர யாருமில்லை இப்போது.. குறிப்பு குறித்துக் கொண்டேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. பருப்பு சாதம் சிறு குழந்தையில் சாப்பிட்டது! இப்போது விஷேஷங்களில் சாப்பிடுவதோடு சரி! சுவையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  11. அதே.. அதே.. அதே தான்!...
    அடிக்கடி நான் விருப்பத்துடன் சமைப்பது!..
    பதிவினில் கண்டதும் மகிழ்ச்சி..

    ReplyDelete
    Replies
    1. அதே.. அதே.. அதே தான்!...
      அடிக்கடி நான் விருப்பத்துடன் சமைப்பது!..
      பதிவினில் கண்டதும் மகிழ்ச்சி..//

      மகிழ்ச்சி ஐயா

      Delete
  12. செய்து பார்த்துவிடுகின்றேன். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  13. இப்பவும்
    எனக்குப் பிடித்த உணவு
    பருப்பு சாதம் தான்
    சிறந்த செய்முறை வழிகாட்டல்
    தொடருங்கள்

    ReplyDelete