Tuesday, 11 November 2014

மென் சுவாசம் விட...!

நாற்பதுக்கு மேலே
நாடிவருமொரு தனிமை
நலமோ…? பெண்மைக்கு
உடல்தரும் இம்சை...

கொஞ்சிய குழந்தைகள்
விடலைகளாய் வளர்
விஞ்சிய பொழுது 
விரயமாய் நிற்க யாம்
தஞ்சிய நேரம் 
தழுவும் சோம்பலை

திடீரென ஓய்வு 
திகட்டும் இனிப்பாய்...
ஊர்பார்க்க செல்லலாமென்று
தேதிகுறிக்க
வாராது ஞான்...
உடலதுசொல்லும்
மறுமொழி யாங்கே

திருவார்...
விடாது கேட்டாயேயென
வீசிடுவார் கனைச்சரத்தை

ஆசையுண்டு 
நேரமுண்டு 
மனமுண்டு 
ஓரேக்கமும்முண்டு

அடித்தாற்போல
உடற்வரவுகண்டு
உள்ளாட்டமும்முண்டே
அடிக்கடி சொல்ல 
அவஸ்தையுமுண்டே என்செய்வோம்


அப்போது மட்டும் 
ஆணாய் பிறக்கலையேயென
அங்களாய்ப்பும் உண்டே 
மகளிர் மனந்தனிலே

இயலாமைக் கோபம் 
எரிமலையாய் வெடிக்கையிலே
குழுமை சேர்க்கவேணும் இல்லம்
அன்புமழையிலே...

இல்லத்தரசியின் உடலாட்சியிலே 
சிறிது ஓய்வுவேணுமே

பருவமாற்றம் 
வருகையிலும், 
போகையிலும் 
மங்கைக்கு
பலம்சேர்க்க 
குடும்ப அரவணைப்பும் 
துளியூக்கமும்
திடமாய் யாகாரமும் 
அமைதியும் 
ஆக்கியுண்ணவேணுமே

வருகைக்கு ஆர்ப்பாட்டமும்,
போகையிலே வசைப்பாட்டுமாயிறாமல்
பெண்பூக்க பூரிக்கும் 
தகப்பன்களே... 

மென்சுவாசம் விட 
வாடும்பூவுக்கும்
நீர்தெளித்து 
முகம் பூத்திருக்க
பூத்துமுடித்த பெண்ணுக்கும் 
ஆதரவுத்தோள் கொடுங்கள்.

21 comments:

 1. 40 வயதுக்கு மேல் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை உணர்வுபூர்வமாக சொல்லிவிட்டீர்கள்.
  உங்களின் இந்த கவிதையை படிக்கின்ற ஆண்கள் அனைவரும் தங்களின் மனைவிக்கு ஆதரவுத்தோள் கொடுப்பது நிச்சயம்.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் இந்த கவிதையை படிக்கின்ற ஆண்கள் அனைவரும் தங்களின் மனைவிக்கு ஆதரவுத்தோள் கொடுப்பது நிச்சயம்.//

   நன்றி சகோ

   Delete
 2. உள்ளர்த்தம் கொண்டு உணர்த்தும் கவிகண்டு
  மெல்லவீசும் தென்றல் மிதந்து!

  மென்சுவாசம் கிட்டட்டும்!..
  வாழ்த்துக்கள் உமையாள்!

  ReplyDelete
 3. அருமை தோழி !! குறிப்பாக நம் ஆசிய பெண்களுக்கு ஒரு சோர்வு டென்ஷன் கோபம்எல்லாமே இவ்வயதில் ஏற்படும் ..நீங்க சொன்னமாதிரி //பூத்துமுடித்த பெண்ணுக்கும்
  ஆதரவுத்தோள் கொடுங்கள்.// செய்தால் குடும்பத்தினர் அனைவருக்குமே நல்லது ..

  ReplyDelete
  Replies
  1. குறிப்பாக நம் ஆசிய பெண்களுக்கு ஒரு சோர்வு டென்ஷன் கோபம்எல்லாமே இவ்வயதில் ஏற்படும்//

   இயற்கையான இன்னல்...

   நன்றி சகோ

   Delete
 4. இதே பிரச்சனையை தற்போது அனுபவித்து வரும் என் சக ஆசிரியருக்கு கணவர் துணையாய் தான் இருக்கிறார். ஆனால் அவரது வளரிளம் குழந்தைகள் படுத்துகிறார்கள். கால தாமதமான திருமணங்கள் எத்தனை துயர் தருகின்றன:((( கவிதை அருமை தோழி!!!

  ReplyDelete
  Replies
  1. கால தாமதமான திருமணங்கள் எத்தனை துயர் தருகின்றன:// உண்மை தான்

   இதே பிரச்சனையை தற்போது அனுபவித்து வரும் என் சக ஆசிரியருக்கு கணவர் துணையாய் தான் இருக்கிறார் //

   நிறைய ஆண்கள் துணையாகத் தான் இருக்கிறார்கள்.

   நன்றி சகோ

   Delete
 5. வணக்கம்

  அருமையான கவித்துவம் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
  த.ம 1

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 6. பெண் பிள்ளை பெறாத தகப்பன்மார்களுக்கும் பொருந்துகின்ற கவிதை :)
  த ம 2

  ReplyDelete
 7. வணக்கம் சகோதரி!

  பெண்களின் வயது மாற்றத்துக்கேற்ற கவி.இச்சமயம் குடும்பத்தின் ஆதரவு மனச்சோர்வை அகற்றும். உண்மையான வரிகளை உதிர்த்த தங்களுக்கு நன்றி.
  பகிர்ந்தமைக்கும் நன்றி.

  நட்புடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. பெண்களின் வயது மாற்றத்துக்கேற்ற கவி.இச்சமயம் குடும்பத்தின் ஆதரவு மனச்சோர்வை அகற்றும்.//

   ஆம் சகோ

   Delete
 8. மிக அருமையாக எழுதியிருக்கிறீங்க உமையாள். கண்டிப்பா இச்சூழ்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் புரிந்துணர்வுடன் நடக்கவேண்டும். அன்பும்,அரவணைப்பும் இருந்துவிட்டால் இந்த இன்னல்களிலிருந்து விடுபடலாம்.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அன்பும்,அரவணைப்பும் இருந்துவிட்டால் இந்த இன்னல்களிலிருந்து விடுபடலாம்...//
   ஆம் சகோ அது தான் பெரிய பலம்
   .நன்றி.

   Delete
 9. ஆணுள்ளமே அறியென
  பெண்ணுள்ளமே கூறிடும்
  சொல்கள் இணைந்து வர
  இல்லற வழிகாட்டல் கூறும்
  நல்ல கவிதை படித்தேன்!

  ReplyDelete
 10. மிக மிக அருமையான ஒரு கவிதை! சகோதரி! அதுவும் பெண்களின் இந்த வயதில் வரும் காலகட்டத்தின் உணர்வுகளையும், அழற்சியையும் அழகாகாச் சொல்லிய விதம்! சூப்பர்! அன்பும், புரிதலும், மாரல் சப்போர்ட்டும் இருந்துவிட்டால் எஹ்டையும் நகர்த்தி விடலாம்.....பெண்களால்.....அருமை!

  ReplyDelete
  Replies
  1. எதையும் நகர்த்தி விடலாம்..பெண்களால்...//

   நன்றி சகோ

   Delete
 11. இயலாமைக் கோபம்
  எரிமலையாய் வெடிக்கையிலே
  குழுமை சேர்க்கவேணும் இல்லம்
  அன்புமழையிலே...//
  இது போன்ற சமயத்தில் குடும்பத்தினர் ஆதரவு இருந்தால் துன்பத்தை கடந்து போய் விடுவாள் எளிதாக.
  நல்ல கவிதை. பெண்மனதை அழகாய் கவிதையில் சொன்னீர்கள் உமையாள்.

  ReplyDelete