Monday, 10 November 2014

கேரட் கீரை சப்பாத்தி

கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் சப்பாத்தி.

புதுமையான வெரைட்டி..

அத நாங்கல்ல...சொல்லனும் அப்படீங்கறீங்க...? அதுவும் சரிதான்.

ஒரு எட்டு பார்க்கலாமா..?






தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 2 கோப்பை ( கோபுரமாக)
கேரட் - 2
உப்பு - ருசிக்கு
கீரை கட்டு - 1
பச்சைமிளகாய் - 2
கரம் மசாலா - 1/2 தே.க
சீரகத்தூள் - 1/2 தே.க
எண்ணெய் - தே.அ
நெய் - 1 தே.க
\


1 தே.எண்ணெய் விட்டு பச்சைமிளகாயை வதக்கவும்.






சுத்தம் செய்த கீரையை போட்டு





 வதக்கவும். ஆறின பின்பு மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும்.





கோ.மாவுடன் பொடிகளைச்சேர்த்து கலக்கவும்.


நெய் 1 தே.க +
அரைத்ததை ஊற்றி பிசையவும்.
( அரைக்கும் போது நீர் சிறிது விட்டால் போதும் )











மாவை பிசைந்து 30 நிமிடங்கள் மூடிவைக்கவும்.








                           
                                                    சற்று கனமாக சப்பாத்தியை இடவும்




                     கேரட் துருவலை சப்பாத்தி கட்டையின் மேல் பரப்பி விடவும்.





 





சப்பாத்தியை அதன் மேல் போட்டு








                                                                        தேய்க்கவும்











பின் புறமுன் அதே போல் செய்யவும்.







இரண்டு பக்கமும் மாவை தூவி விட்டு விடுங்கள். கேரட் மேலே உள்ளதால் நீர்த்து விடும் சப்பாத்தி. பின்பு நாம் எடுத்து கல்லில் போடும் போது கஷ்டமாக இருக்கும்.





                       
                                                     தாயாரன சப்பாத்தி சுடலாமா..?


                                                        அப்பப்பா...சுட்டாச்சு....சப்பாத்தி



வண்ணமான சப்பாத்தி
வாசனையை கிளப்புது
ஜோரான குருமா அல்லது
கெட்டித் தயிர் சேர்த்தும்
சுவைக்கலாம் இதை...!!!



குறிப்பு

இது பாலக் கீரை மாதிரி இருக்கிறது

பாலக்கீரையையும் உபயோகப்படுத்தலாம்.

பருப்புக்கீரையையும் உபயோகிக்கலாம்.




19 comments:

  1. ஆஹா கீரையில் சப்பாத்தி படத்தைப் பார்க்கும்போதே பசிக்கிறதே....

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி!

    வண்ணமயமான சப்பாத்தி படங்களுடன் அருமை. சத்துக்களும் சுவையும் மிகுந்துள்ளதால், அப்படியே சாப்பிடலாம்.தொட்டுக்கொள்ள ௬ட எதுவும் வேண்டாமென்றே தோன்றுகிறது. பகிர்ந்தமைக்கு நன்றி.

    நான் வெறும் கேரட் மட்டும் துருவி மாவில் கலந்து செய்வேன்.இனி தங்கள் செய்முறையின்படி கீரையையும் கலக்கலாம். அருமை சகோதரி.

    நட்புடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. // அப்படியே சாப்பிடலாம்.தொட்டுக்கொள்ள ௬ட எதுவும் வேண்டாமென்றே தோன்றுகிறது #...

      ஆம் அப்படியே கூட சாப்பிடலாம்..தான்.

      நன்றி சகோ

      Delete
  3. ஆஹா.... அஹா...
    இதை செய்து பார்த்து விட வேண்டியதுதான்...

    ReplyDelete
    Replies
    1. இதை செய்து பார்த்து விட வேண்டியதுதான்...//
      செய்து பாருங்கள். சகோ

      Delete
  4. ஸ்ஸ்ஸ்ஸ்!!! சூப்பர்!

    ReplyDelete
  5. கீரைச் சப்பாத்தியா? குழந்தைகளுக்கு நல்ல சத்தான உணவு. ஆனால் எங்கள் குழந்தைகள் தான் சாப்பிடுவார்களா என்று தெரியவில்லை. செய்து பார்த்து கொடுக்க வேண்டும் தான்.

    பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. .செய்து பார்த்து கொடுக்க வேண்டும் தான். //
      கொடுத்துப் பாருங்கள். சகோ

      Delete
  6. சூப்ப்ப்பர் குறிப்பு. பகிர்வுக்கு நன்றி உமையாள்.

    ReplyDelete
  7. செய்முறை,ரெசிபி இரண்டும் வித்தியாசமாக இருக்கிறது ...நல்ல ஹெல்த்தியான சப்பாத்தி,நானும் செய்து பார்க்கிறேன்..பகிர்வுக்கு நன்றி..

    வாழ்க வளமுடன்...

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஹெல்த்தியான சப்பாத்தி,நானும் செய்து பார்க்கிறேன்..//
      பார் சரிதா.

      Delete
  8. வண்ணமான சப்பாத்தி
    வாசனையை கிளப்புது என்கிறீங்க...
    செய்முறை வழிகாட்டலைப் படித்த பின்
    முடிவில் நாவூற வைக்கும் செய்தியாக
    பகிர்ந்தீர் நல்லதொரு பதிவை!

    ReplyDelete
    Replies
    1. முடிவில் நாவூற வைக்கும் செய்தியாக //

      நன்றி ஐயா

      Delete
  9. சூப்பர்! கேரட்டைச் துருவி சேர்ப்பதுண்டு...பகிர்வுக்கு மிக்க நன்றி! சே என்னப்பா எத்தனை எத்தனை விதவிதமான ரெசிப்பிகள் அள்ளித் தெய்ளிக்கின்றீர்கள்! பேசாம நாங்க அங்க வந்து உக்கந்துடறோம்! ...ஹஹஹ்

    ReplyDelete
  10. பேசாம நாங்க அங்க வந்து உக்கந்துடறோம்! ...ஹஹஹ்///

    வாங்க வாங்க,,,ஹஹஹஹா..

    நன்றி சகோ

    ReplyDelete
  11. அருமையான சப்பாத்தி.

    ReplyDelete