Wednesday, 5 November 2014

விடுகதை - 6

என்னங்க ....சின்னப்புள்ளையா இருந்தப்ப நாம எல்லோரும் விளையாடுவோம் இல்ல......

இப்ப இது மாதிரியில்லாம பஸில்ஸ் அப்படின்னு ஆடுறாங்க...

இந்த மாதிரி விளையாட்டின் போது மொழி உச்சரிப்பும்,புது புது வார்த்தைகளும், கவிதை நயம்மும், நாட்டுப்புற பாடல்களும் என தானாவே கற்றுக் கொள்ளும் படி இருந்தது.

நல்லா யோசிப்போம்....சந்தோஷமாக இருக்கும்...இல்ல





26     புல் படுக்கை வீட்டிற்குள் ?
         அது என்ன ?

  
27     நின்றிருப்பான் ஆனால் மூன்று கால்களில் ஓடுவான்
         அவன் யார் ?


28     மஞ்சள் குண்டம்மா
         மணக்க வந்திடுவாள்
         காலி மனது கொண்டு
         பிள்ளைகளை ஈன்றிடுவாள்.?
         அவள் யார் ?


29    அண்டாவின் வாய் பெரிதானதால்
        பனி அரசன் வெளியே ஓடுகிறான் ?
        வாய் எது ?


30    கடலில் குடிப்பான்
        விரும்பினால் உமிழ்வான்
        அவன் யார் ?





அட அதற்குள் கண்டு பிடித்து விட்டீர்களா...? நண்பர்களே....சபாஷ்...!!!

என்ன நல்லா இருந்ததா...?

கண்டு பிடித்த பதிலை கருத்தில் பதியுங்கள்.


மீண்டும் விளையாடலாம்.



25 comments:

  1. அருமையான விடுகதைகள்..

    ReplyDelete
  2. ஹலோ - இப்படியெல்லாம் எங்களை கஷ்டப்படுத்தலாமா நீங்க? பேசாம பதிலையும் போட்டிருக்கலாம் இல்ல.....
    (நமக்கெல்லாம் அவ்வளவு மூளை இல்லைங்க)

    ReplyDelete
    Replies
    1. அத யாரு சொல்வது...... ( நமக்கெல்லாம் அவ்வளவு மூளை இல்லைங்க)

      கஷ்டமா விளையாட்டுத்தானே... சகோ

      சரி சரி கருத்தில் சொல்லிவிடுகிறேன்

      Delete
  3. உமையாள்காயத்ரி,

    விடுகதைகள் எல்லாமே நல்லாதான் இருக்கு. ஆனால் விடைகளைக் கண்டுபிடிக்கத்தான் முடியல.

    ReplyDelete
    Replies
    1. விடுகதைகள் எல்லாமே நல்லாதான் இருக்கு.,,//

      நன்றி சித்ரா

      விடைகள் எல்லாம் நமக்கு பரிச்சயமானது தான் விடைகள் பார்த்தவுடன் இது தானா அது அப்படிங்கப்போறீங்க.

      கீழே கருத்தில் விடைகள்

      Delete
  4. Replies
    1. ஆட்டோவும் சொல்லலாம்.

      Delete
  5. 27.நடைவண்டி
    30.மேகம்

    ReplyDelete
    Replies
    1. நடை வண்டியும் சொல்லலாம்

      மேகம் சரியானது

      மற்ற பதில்கள் கீழே கருத்தில்

      Delete
    2. பரவாயில்லை சகோ இரண்டு பக்கத்துல வந்துட்டீங்க

      நன்றி

      Delete
  6. சுவையான விடுகதைகள்! நன்றி!

    ReplyDelete
  7. 27. மின் விசிறி? ஆட்டோ கூட சொல்லலாம்தான்....இது ஒண்ணுதான் பா முடின்சுச்சு....மற்றதெல்லாம் ஏதோ தெரியறா மாதிரி இருக்கு...ஆனால் இல்ல...

    ReplyDelete
    Replies
    1. மின் விசிறி? ஆட்டோ கூட சொல்லலாம்தான். ஆம் சரிதான்

      மற்றதெல்லாம் ஏதோ தெரியறா மாதிரி இருக்கு...ஆனால் இல்ல...//

      ஆமாம் அப்படித்தான். விடைகள் பார்த்தவுடன் அட அப்படிங்கப்போறீங்க.

      Delete
  8. வணக்கம்

    அருமையான விடுகதைகள்.. பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. விடைகள்

    26 ய்பா
    27 றிசிவின்மி
    28 ய்காக்கிங்ரப
    29 ன்சோஓ
    30 ம்கமே

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் ரொம்ப டூ மச்சா இல்ல. நேரடியா பதிலை சொல்லாம, பதிலையும் ஒரு விடுகதை மாதிரி இல்ல சொல்லியிருக்கீங்க...

      Delete
    2. நான் தங்கள் தளத்திற்கு பிந்தி வந்தமையால் கொஞ்சம் நன்மை.
      பாய், மின்விசிறி, பரங்கிக்காய், ஓசோன், மேகம் எனக் கண்டு பிடிக்க வைச்சீங்க...
      ஆனால், என் கண்டு பிடிப்பில பாய் ஒன்று தான் சரி. "விடுகதையா, அப்ப ஆளைவிடுங்க..." என்று படிக்கிற காலத்தில ஒளிந்தமையே காரணம்.

      Delete
    3. இதெல்லாம் ரொம்ப டூ மச்சா இல்ல. நேரடியா பதிலை சொல்லாம, பதிலையும் ஒரு விடுகதை மாதிரி இல்ல சொல்லியிருக்கீங்க...//

      அப்படியில்லை சகோ...சிலர் எப்பவாவது வந்து முயற்சி பண்ணி பார்ப்பாங்க இல்லையா...அப்போ டக்குன்னு விடை பட்டா...எப்படி யோசிப்பது.. கொஞ்சம் டைம் எடுத்துக்கலாம் இல்லையா.. ? கொஞ்சம் த்ரில் அவர்களுக்கும்...

      அதான் விஷயம்.

      Delete
    4. ஆனால், என் கண்டு பிடிப்பில பாய் ஒன்று தான் சரி. "விடுகதையா, அப்ப ஆளைவிடுங்க..." என்று படிக்கிற காலத்தில ஒளிந்தமையே காரணம்.//

      ஓ...ஆனாலும் 1 கண்டு பிடித்து விட்டீர்கள்....

      Delete
  10. இவ்வளவுத்தானா?!! சே மண்டைக்கு அந்த சமயம் உரைக்கவே இல்லை!

    ReplyDelete
  11. லேட்டாக வருவதில் ஒரு வசதி. விடையெல்லாம் நீங்களே சொல்லிட்டீங்களே! :)

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா பதிலை பாத்துட்டீங்க.

      நன்றி

      Delete
  12. யோசித்து பார்த்தேன் விடை தெரியவில்லை,உங்கள் விடைக்கு தான் விடை தெரிந்தது .... நன்றி

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ..விடையையே நேரடியா பார்த்துவிட்டாய் பலே பலே

      Delete