Tuesday, 9 December 2014

எண்ணெய் குளியல் / எண்ணெய் காய்ச்சுவது எப்படி..?

தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் - 1 கோப்பை
வர மிளகாய் - 1
பூண்டு - 3பல்
வெந்தயம் - 1/2 தே.க
மிளகு - 1/2 தே.க


நல்லெண்ணெய்யை கடாயில் காயவிடவும். காயும் போது மிளகைப் போடவும். அது வெடித்தபின்

வெந்தயம்

பூண்டு

மிளகாய்

என போட்டு 1 நிமிடம் விட்டு இறக்கவும்.

இப்போது  எண்ணெய்  தயாராகி விட்டது.

தலை மற்றும் உடம்பு தேய்த்து நீராடலாம். இப்படி காய்ச்சிய எண்ணெய் தேய்த்து குளிப்பதால் தடுமன் பிடிக்காது. தலைகனம், தலை வரட்சி இன்றி இருக்கும். தலைவலி வராது. உடல் சூடு தணியும். தோல் வரட்சி போய் மினுமினுப்பாகவிருக்கும்.


அதைப்  பற்றி நான் எழுதிய  கவிதை

எண்ணெய் நீராடல்எண்ணெய் குளியலுக்கு சிறந்த தினம்   

15 வருடங்களுக்கு முன்பு வரை எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது நமது கிராமங்களில் சனிக்கிழமை அன்று எண்ணெய் குளியல் நிறைய வீடுகளில் நடக்கும். இன்று அது அரிதாகி விட்டது. தீபாவளி அன்று தான் நம் வீட்டில் எண்ணெய் தேய்த்துக் குளியல் நடக்கும். 

ஆனால் அதன் முழுப்பயனும் அன்று ஒரு நாள் மட்டும் குளித்தால் நடக்குமா? நிச்சயம் நன்மை இருக்காது. ``எண்ணெய் குளியல் உடலுக்கு மட்டுமின்றி, உள்ளத்துக்கும் பல நன்மைகளைக் கொடுக்கக்கூடியது. இந்த தீபாவளி முதல் எண்ணெய் குளியலை மறுபடி உங்கள் வாழ்க்கையில் வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள்''. ``நமது சருமம் மற்றும் கூந்தலுக்கு எண்ணெய் சத்தானது அவசியம். 

இரண்டிலும் இயல்பிலேயே மிதமான கொழுப்பும் எண்ணெய் சுரப்பும் இருக்கும். அந்த இரண்டும் நம் சருமம் மற்றும் கூந்தலுக்குக் கவசம் போன்றவை. இதைத் தக்க வைத்துக்கொள்ள வெளியிலிருந்து எண்ணெய் தடவுவது, மசாஜ் செய்து குளிப்பது போன்றவை அவசியம். 

பிறந்த குழந்தைக்கு காலையில் எழுந்ததும், அதன் தாய் செய்கிற விஷயம், உச்சந்தலையில் எண்ணெய் வைப்பது. குழந்தை வளர வளர இந்தப் பழக்கம் மெல்ல மறைகிறது. இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும், தலையில் எண்ணெய் வைத்துக் கொள்வதை நாகரிகக் குறைவாக நினைக்க ஆரம்பிக்கிறார்கள் பிள்ளைகள். 

எண்ணெய் குளியலையும் தவிர்க்கிறார்கள். எண்ணெய் தேய்த்துக் குளித்தால் முகமெல்லாம் எண்ணெய் வழியும் என்பது பரவலான குற்றச்சாட்டு. சரியான முறையில் எண்ணெயைத் தேய்ப்பதும், பிறகு சரியான முறையில் குளிப்பதும் இந்தப் பிரச்சனையைத் தவிர்க்கும். 

உங்களுக்கு எந்த எண்ணெய் பிடிக்குமோ, ஒப்புக் கொள்ளுமோ அதை தலை, உடல், கை, கால் என முழுக்கத் தடவுங்கள். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு என்று நாட்கள் உள்ளன. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் செய்ய வேண்டும். 

சாஸ்திரங்கள் ஆண்கள் சனிக்கிழமைகளில் எண்ணெய் நீராடுவது உசிதம் என்கின்றன. காரணம் சனி அசதி, சோம்பேறித்தனம் நிறைந்த தமோ குணத்தின் அதிபதி. எண்ணெய் குளியல் முடிந்த பின் மனிதனின் சுறுசுறுப்பு குறைந்து அசதியும், உறக்கமும் ஏற்படும். 

விரைந்த செயல்பாடுகள், சடங்குகள், மங்கல நிகழ்ச்சிகள் சனிக்கிழமைகளில் செய்வது வழக்கமில்லை. எனவே ஓய்வை உண்டாக்கும் எண்ணெய் குளியலை சனியன்று செய்வது நல்லது. பெண்களுக்கு சனியை விட சுக்ரனின் உதவி அதிகம் தேவை. 

செவ்வாயும், வெள்ளியும் பெண்களுக்கு உகந்த கிரகங்களின் நாட்கள். எனவே இந்தக் கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.


நன்றி -  மாலை மலர் நாளிதழ்


17 comments:

 1. நான் இதை செய்யும் முறை பற்றி தேடிகொண்டிருந்தேன் .நன்றி

  ReplyDelete
 2. அருமையான ,பயன்மிக்க ஆரோக்கிய பகிர்வு..

  ReplyDelete
 3. நல்ல விஷயத்தை நினைவுபடுத்தினீர்கள்..

  எண்ணெய் தேய்த்துக் குளிப்பதா?... இதற்கெல்லாம் யாருக்கு நேரம் இருக்கின்றது..

  கஷ்டப்பட்டு (!) சம்பாதித்த காசைக் கொடுத்து Beauty Parlor - ல் Oil Massage செய்து கொள்வார்களே தவிர - நாகரிகக் கிறுக்குகளுக்கெல்லாம் நல்ல விஷயங்கள் புரியாதது.

  வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்கு கொடு.. - என்று ஒரு சொல்வழக்கு உண்டு..

  இதெல்லாம் பெரும்பாலானவர்க்குத் தெரிந்திருக்க நியாயமில்லை..

  ReplyDelete
 4. அரிசி எங்கே...?

  அதற்காகவே குளிப்போம்... ஹிஹி...

  ReplyDelete
 5. நான் எண்ணெய் குளியல்னா, தலயில வெறும் நல்ல எண்ணையை மட்டும் தேச்சுக்கிட்டா போதும்னு இல்ல நினைச்சுக்கிட்டு இருந்தேன்.
  நீங்க என்னடான்னா அதுக்கு ஒரு பெரிய சமையல் குறிப்பையே கொடுத்திருக்கீங்க!!

  ReplyDelete
 6. மிகவும் பயனுள்ள குறிப்பு.

  ReplyDelete
 7. மருத்துவ பயனுள்ள பதிவுதான் பழைய புகைப்படத்தை குளிப்பாட்டுவதற்க்கு உபயோகப்படுத்துகிறீர்கள் போலயே...
  த.ம. 2

  ReplyDelete
 8. எண்ணெய் குளியலின் பயனை சொன்னது அருமை.
  கவிதை, இஞ்சி ரசம் என்று பதிவுகள் அருமை.

  ReplyDelete
 9. எண்ணெய் குளியலா!! அதெல்லாம் ஊரோடுதான். அங்கு கிழமையில் 3நாள் நிச்சயம் இருக்கும். அம்மா விடமாட்டா கண்டிப்பா செய்தே ஆகனும். வருத்தம்,துன்பம் இல்லாமல் இருந்தம்.இங்கு அதன் அருமை தெரிகிறது. பயனுள்ள குறிப்பு. நன்றி

  ReplyDelete
 10. சுகமான எண்ணை குளியல்! தீபாவளி சமயத்தில் இப்படி காய்ச்சிய எண்ணையில் குளிப்பதோடு சரி!

  ReplyDelete
 11. இந்த எண்ணைக் குளியல் தீபாவளி சமயத்தில் செய்வதுண்டு...சகோதரி....நன்றி நன்றி மற்ற நேரங்களில் செய்தாலும் நல்லதே...ஆனால்...ம்ம்ம் எல்லாம் சோம்பேறித்தனம் ஆனால் சொல்லிக்கறது என்னமோ அயோ டைமே இல்ல...அப்படின்னு...ஹஹஹ்

  ReplyDelete
 12. இருங்க... எண்ணெய் தேய்ச்சு குளிச்சிட்டு வந்து கமெண்ட் பண்றேன்....

  ReplyDelete
 13. வழுக்கி ஓடும் நீரோ...!
  வழவழப்புத் தோலின் சாட்சியாய்
  ம்ம்ம்...கவிதை நல்லாயிருந்துச்சு. நானும் குளிக்கிறேன். வழுக்கி ஓட மாட்டுக்கே..

  ReplyDelete