தேவையான பொருட்கள்
உ.கிழங்கு - 1
பச்சை பட்டாணி - 1 கோப்பை
அவித்த நிலக்கடலை - 1/2 கோப்பை
சோளம் - 1/2 கோப்பை
பூண்டு - 5 பல்
உப்பு -ருசிக்கு
தனி மிளகாய் தூள் - 1/2 தே.க
கரம் மசாலா தூள் - 1/4 தே.க
மஞ்சள் தூள் - சிறிது
தாளிக்க வேண்டியது
எண்ணெய் - 3 மே.க
கடுகு - 1/4 தே.க
உ.பருப்பு - 1/2 தே.க
சோம்பு - 1/4 தே.க
தாளிக்கவும்,
உ.கிழங்கு, பூண்டு,பட்டாணியைப் போட்டு வதக்கவும். வெந்த பின்
அவித்த நிலக்கடலை, சோளம் சேர்த்து விட்டு
மிளகாய் தூள், மஞ்சள் தூள்,கரம் மசாலா இவற்றை சேர்க்கவும்.
நன்கு மிதமான தீயில் வேகவிட்டு
எடுக்கவும்.
நல்ல காரசாரமா.....பொரியல் தயார்....!!!
அருமை!..
ReplyDeleteபார்க்கவே வண்ணமயமாக் பொரியலை கண்ணாலேயே
சாப்பிட வைச்சிட்டீங்க சகோதரி!
அருமை!
த ம.1
விரைந்து வந்து கருத்திட்ட சகோதரிக்கு நன்றி.
Deleteதம வுக்கும்
உருளைக் கிழங்கு, பட்டாணி மட்டும் போட்டும், உருளைக் கிழங்குடன் பீட்ரூட் சேர்த்து கலர்ஃபுல்லாகவும் செய்ததுண்டு.
ReplyDeleteஇந்த காம்பினேஷனில் செய்ததில்லை. முயற்சித்து விடுவோம்!
:))
உருளைக் கிழங்கு, பட்டாணி மட்டும் போட்டும், உருளைக் கிழங்குடன் பீட்ரூட் சேர்த்து கலர்ஃபுல்லாகவும் செய்ததுண்டு.//
Deleteஆம்.நானும் அது போல் செய்வேன்.
சரி.. சரி..
ReplyDeleteஉருளைக் கிழங்கு இல்லாமல் செய்து பார்க்கின்றேன்!..
சரி சரி ஐயா.
Deleteஅவித்த கடலை போட்டு வித்தியாசமான பொரியல். அருமை.நன்றி உமையாள்.
ReplyDeleteஅவித்த கடலை போட்டு..ஆம்..
Deleteதயிர் சாதத்துக்கு ஏற்ற ஒரு பொரியல்
ReplyDeleteஆம்..அருமையாக இருக்கும்.
Deleteஆஹா நல்ல ருசி எனது வேலைப்பளுவின் ஊடே ஏன் ? வந்து போகிறேன் தெரியுமா ? சாப்பிடத்தான் நன்றி.
ReplyDeleteத.ம.2
எனது வேலைப்பளுவின் ஊடே ஏன் ? வந்து போகிறேன் தெரியுமா ? சாப்பிடத்தான் //
Deleteவாருங்கள் சகோ நல்லா எனர்ஜியோட போய் உங்க வலைச்சர ஆசிரியப்பணியை தொடருங்கள். வேலைக்கிடையேயும் வந்து கருத்திட்டமைக்கு மனமார நன்றி தமவுக்கும் தான்
சூப்பர் காம்பினேஷன்.தோழி நல்ல சத்துள்ள உணவு.
ReplyDeleteபகிர்ந்தமைக்கு நன்றி.
ஆம்...நல்ல காம்பினேஷ்னாக இருக்கு சாப்பிட.
Deleteநன்றி தோழி
வணக்கம் சகோதரி!
ReplyDeleteவண்ண வண்ண படங்களுடன் சுவையாக தினம் ஒரு சமையல் பதார்த்தங்கள்.அருமை!
செய்முறை விளக்கங்களும் செய்து பார்க்க தூண்டுகின்றன. நன்றி சகோதரி.
விரைவில் இதையும் செய்து பார்க்கிறேன்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
தங்களைப் போன்றோரின் உற்சாகவார்த்தைகள் தான் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டு இருக்கிறது.நிதானமாய் சமயம் கிடைக்கும் போது செய்து பாருங்கள் சகோ.நன்றி
Deleteவணக்கம்
ReplyDeleteசுவையான உணவு... இலகுவான் செய்முறை விளக்கம் பகிர்வுக்கு நன்றி த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் கருத்திற்கும் தமவுக்கும் நன்றி ரூபன்.
Deleteபொறியல் செம...! நன்றி...
ReplyDeleteஉங்களுக்கும் உதவலாம்...
http://dindiguldhanabalan.blogspot.com/2014/12/Speed-Wisdom-10.html
அருமையான அழகான பொரியல்.
ReplyDelete