மாலை
வேளை…
அந்த
8 மாடி கட்டடம் முன்பாக டாக்ஸி வந்து நின்றது. அதிலிருந்து நால்வர் இறங்கினர். பாவம் அப்போது
அவர்களுக்கு தெரியாது கொஞ்ச நேரத்தில் நமக்கு வாழ்நாள் மறக்க முடியாத ஒர் அனுபவம் கிடைக்கும்
என்று.
கணவன்,
மனைவி, கல்லூரி செல்லும் அவர்களது இளைய மகள் மற்றும் அதே கட்டடத்தில் வசிக்கும் நண்பரின்
மனைவி. இவர்களே அந்த நால்வர்.
கட்டடத்தில்
நுழைந்த அவர்கள் லிப்டுக்காக காத்திருந்தனர். 6 வது மாடியில் லிப்ட் நின்று கொண்டிருந்தது.
நான் பட்டனை அழுத்தியவுடன் அது கீழ் நோக்கி வர ஆரம்பித்தது. ஒரு பத்து வயதுப் பையனும்
வந்து எங்களுடன் இணைந்து கொண்டான்.
விதி
அவன் வசத்தில் இருந்ததை நாங்கள் அறியோம் சாமி…!!! ( ஆமா இல்லையா பின்ன விதியொல்லாம்
முன்னாடியே தெரிந்து விட்டால்…சாமியை நாம யாருன்னு கேட்க மாட்டோம்…? தலையில அவ்வளவு
கணமில்லை நமக்கு )
லிப்ட்
வரவும் நாங்கள் ஏறினோம். அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. காத்திருக்கவும் மனம் வரவில்லை.
அது சிறிய லிப்ட். 4 பேர் மட்டுமே சரியாக நிற்க முடியும். 320 kg எடை உள்ள அளவு உபயோக
படுத்தலாம் என லிப்ட் தயாரிப்பு கம்பெனி அதில் அழகாக அச்சிட்டு இருந்தான்.
நாங்கதான்
அவ்வளவு எடையில்லையே… இருப்புக் கொள்ளாமல் அந்தப் பையன் உள்ளே வர முயற்சித்தான். சரி..இம்புட்டு(
உடனடியாக ) நிமிஷத்தில மேலே போயிடுவோம்மில்ல என நினைத்து ( ஒரேயடியாக மேலே அவன் அனுப்பிடுவான் போல என தெரியாமத்தான் பயத்துல ) சரியாக பொருந்தினார்
போல அசைய இடமின்றி ஏறிக் கொண்டோம்.
அவன்
எகிப்தியன். எனவே நாங்க அவனுடன் பேச, மொழிப் பிரச்சனை.
அவன்
தான் ஏற்கனவே இருப்புக் கொள்ளாத ஆசாமியாக இருக்கிறானே…கடகட என கையை ஆட்டிக் கொண்டு ஏதோ ஒரு பட்டனை அழுத்தினான். நண்பர் பட்டன் பக்கம் நின்று கொன்டிருந்தார். அவர் அமுக்கும் முன் கடகட என தட்ட லிப்ட் மேலே போனது.
5 மாடி வந்தது. சரி அங்குதான் இறங்கப் போகிறான்
என நினைத்தால் அவன் கதவு திறக்கும் போதே திரும்பவும் பட்டனை அவசர அவசரமாக தட்ட லிப்ட்
கீழே 4 மாடிக்கு போனது. இங்கு தான் நண்பர் குடும்பம் இறங்க வேண்டிய இடம் ஆனால் லிப்ட்
4 மாடிக்கு முழுமையாக இறங்காமல் முக்கால் சதவிகிதத்தில் நின்று விட்டது. ஆகையால் யாராலும்
இறங்க முடியாத நிலை. திரும்ப அச்சிறுவன் ஏதேதோ…கையை ஆட்டி அமுக்கினான். அவனின் இருப்புக்
கொள்ளாதனம் கூடி விட்டது. அசைய இடமில்லை மூஞ்சியில் அடித்துக் கொள்கிறான். பயம் அவனை
ஆக்கிரமித்துக் கொண்டது.
நாங்களும்
லிப்ட் பாதியில் நிற்கவும் பேசுவதை நிறுத்திக் கொண்டோம். நண்பரின் மனவி என்னிடம் பேச
எனக்கோ பேச முடியவில்லை. காற்று வேற இல்லை. அசைய முடியவில்லை. சிறுவன் அவன் பாஷையில்
பிதற்றினான். நான் சாய் பாபாவை எண்ணி பிரார்த்திக்க ஆரம்பித்து விட்டேன்.
பயம்
மூச்சை அடைக்கும் என்பார்கள். சிறிய லிப்ட். ஒரு வேளை நாம எடை அதிகமாக ஏறிட்டோமே…..?
இல்லை இல்லை அவ்வளவு எடையில்லை என எங்களுக்கு தெரியும். அந்தப் பையன் ஏறின போதே நாம
யாராவது இறங்கி இருக்கனும் அப்படின்னு ஆற்ற மாட்டாம பேசத்தான் முடியும் நம்மால. இப்போ
பேசி என்ன பிரயோஜனம்….? ஆனா நாம இருக்கோமே
எப்ப எப்படின்னாலும் அதைப் பார்க்காம முதல்லயே இப்படி செய்து இருக்கலாம்..அப்படி செய்து
இருக்கலாம் என பேசுவோம் அப்படி செய்து இருந்தால் இப்படி ஆகியிருக்காதுல்ல என புலம்புவோம்
இல்லையா..?
இப்போ
லிப்ட் மேலே 6வதுக்கு சென்றது. அங்கேயும் முக்கால் அளவாக நின்று விட்டது. சிறுவனின்
வேகம் கூடி விட்டது. லிப்ட் பெல் அடித்தான். போன் கொடுங்க பேசுகிறேன் என போன் போன்
என கேட்டான். கையை விட்டு போன் எடுப்பதே கஷ்டமான இடநெருக்கடி, அதையும் மீறி நண்பரின்
மகள் போனை எடுத்தால். லிப்டில் சிக்னல் கிடைக்காது என தெரியும் இருந்தாலும் வேறு வழி..
சிக்னல் இருக்கா என பார்த்தாள்.அவன் கத்தினான், பெல் அடித்தான், மூஞ்சியில் டப்டப்
என அடித்துக் கொண்டான், யாரையாவது உதவிக்கு அழைக்க கத்தினான்.
நண்பர்
மட்டும் அமைதியாக இருந்தார். அவர் மனைவி பயத்துடன் பேசாமல் இருந்தார். எனக்கோ பயம்
அதிகரித்து விட்டது. மூச்சு முட்ட ஆரம்பித்தது. கால் மாற்றி நிற்க முடியவில்லை. நண்பர்
மட்டும் அமைதியாக இருங்கள் நல்ல எண்ணமாக நினைத்தால் நல்லது நடக்கும் என்றார். அவர்கள்
உடன் இருந்ததால் பரவாயில்லை. ஒரு நிமிடம் நினைத்தேன் தனியாக மாட்டியிருந்தால்…? இந்நேரம்
என்ன ஆகி இருக்கும். அதுவும் கரண்ட் கட் ஆகிவிட்டால் விளக்கு வேறு இருக்காது. ஆத்தாடியோவ்…
மாடிப்படிகளில்
பேச்சு சப்தம் கேட்டது. மணி அடித்தும் யாரும் ஏன் என்று கேட்க வரவில்லை. அவரவர்கள்
வீட்டில் இருக்கிறார்கள், இப்போது அப்படித்தானே.. வெளியே என்ன ஏதுன்னு யாரும் கண்டு
கொள்வதில்லையல்லவா…?
செல்போன்
சிக்னல் 1 கோடு இருந்தது. அவனிடம் கொடுத்தோம். ஆனால் முயன்றால் செல்போன் சிக்னல் மறைந்து
விடுகிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை
மறுபடியும் யாரோ பேசும் சப்தம் கேட்டது. அவனை கூப்பிடச் சொன்னோம். அவன் சத்தம்
போட்டு கத்தி ஏதோ சொன்னான். யாருக்கும் கேட்கவில்லையோ ? அல்லது அவர்கள் யாரும் கவனிக்க
வில்லைய்யோ ( இப்படியும் இருக்கிறார்கள் அவர்கள் குழந்தைகள் மாட்டினால் கவனம் இருக்குமோ
இருக்காதோ என நாங்கள் நினைத்துக் கொண்டோம் ) அது சரி இப்போ லிப்ட் எங்கே நிற்கிறதுன்னு
சொல்லவில்லையே…
மேலே
சென்றது இப்போ கீழ் தளத்துக்கு வந்து விட்டது. அப்போது கதவு திறந்தது….ஆஹா..வெளியில
போகலாம் என நினைக்கும் போது தான்…..ஆ…. அப்படியே எனக்கு பயம் உச்சிக்கு போய் விட்டது.
பதிவின்
நீளம் கருதி …இரண்டாக ஆக்கிவிட்டேன்….. மீதி அடுத்த பதிவாக இடுகிறேன்.
உமையாள்,
ReplyDeleteஎன்னதிது? திகில் நாவல் படிப்பது மாதிரி இருக்கு. 8 மாடி கட்டிடத்திற்கு 4 பேர் நிக்குற மாதிரிதான் லிஃப்டா ? சீக்கிரம் வந்து மீதிய சொல்லுங்க.
4 பேர் நிற்குற மாதிரிதான் லிஃப்டா ? //
Deleteஇங்கு நாங்கள் வசிக்கும் இடத்தில் அவ்வாறு தான் உள்ளது.
திகில் நாவல் படிப்பது மாதிரி இருக்கு.//
அப்படியா...
பயங்கர திகில் அனுபவமாக இருக்கே ..அடுத்து என்ன நடந்தது ?? இதயம் பயத்தில் துடிக்குது படிக்கிற எனக்கே அப்போ உங்கள் நிலை ...
ReplyDeleteஇதயம் பயத்தில் துடிக்குது படிக்கிற எனக்கே அப்போ உங்கள் நிலை ...//
Deleteஆமாங்க...என் நிலை....
ஆ... லிப்ட் போல் பாதியில் நிறுத்தி விட்டீர்களே....!
ReplyDeleteஆம் சகோ...லிப்ட் அவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டது...அதான் அதே போல் பாதியிலேயே நிற்கும் படி ஆகிவிட்டது போலும்.
Deleteஅன்பின் உமையாள் காயத்ரி
ReplyDeleteகதை நன்றாகச் செல்கிறது - தொடர்க கதையினை - ஆவலுடன் எதிர்ப்ராத்துக் காத்திருக்கிறேன்.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
நன்றி தொடர்கிறேன்
Deleteஇது கதையல்ல நிஜம்...ஐயா
அன்பின் உமையாள் காயத்ரி - தொடர்க - ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் - த.ம : 1
ReplyDeleteநல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
நன்றி ஐயா
Delete"//ஆ…. அப்படியே எனக்கு பயம் உச்சிக்கு போய் விட்டது. //"
ReplyDeleteசஸ்பன்ஸ் கதையெல்லாம் எப்பத்திர்லிருந்து எழுத ஆரபிச்சுட்டீங்க சகோ??
அப்புறம் சகோ,
"//கணவன், மனைவி, கல்லூரி செல்லும் அவர்களது இளைய மகள் மற்றும் அதே கட்டடத்தில் வசிக்கும் நண்பரின் மனைவி. இவர்களே அந்த நால்வர்//".
நண்பரின் மனைவி தான் தாங்களா? - கதையின் ஆரம்பித்தில் 4பேர் என்று சொல்லிவிட்டு, திடீரென்று "நான்" என்று கதையை நகர்த்த ஆரம்பித்துவிட்டீர்களே. அதான் ஒரு சந்தேகம் வந்து விட்டது.
சீக்கிரம் அடுத்த பகுதியையும் சொல்லிவிடுங்கள். (நானெல்லாம் இந்த மாதிரி கதைகளை எல்லாம் படிச்சு முடிச்சுட்டு தான் புத்தகத்தை கீழே வைப்பேன். )
சஸ்பன்ஸ் கதையெல்லாம் எப்பத்திர்லிருந்து எழுத ஆரபிச்சுட்டீங்க சகோ?? //
Deleteஆஹா...இது கதையல்ல நிஜம்.
நண்பரின் மனைவி தான் தாங்களா? - கதையின் ஆரம்பித்தில் 4பேர் என்று சொல்லிவிட்டு, திடீரென்று "நான்" என்று கதையை நகர்த்த ஆரம்பித்துவிட்டீர்களே. அதான் ஒரு சந்தேகம் வந்து விட்டது. //
மொத்தம் 4 பேர் என சொல்வதற்கு அப்படி ஆரம்பித்தேன். அனுபவம் நமதல்லவா...ஆகையால்...நான் வந்து விட்டேன். அதான் சகோ
சீக்கிரம் சொல்லி விடுகிறேன்...சகோ
படிக்கும் போதே படபடப்பாக இருக்கின்றது.
ReplyDeleteசரியான இடத்தில் - இடை வேளை வேறு!..
சரியான இடத்தில் - இடை வேளை வேறு!..//
Deleteஆமாங்க ஐயா...அங்கே தானே உச்ச பட்சமாக ஆனது...
ஆஹா சரியான இடத்திலே,,,, தொடரும் ஸூப்பர்
ReplyDeleteஆமாங்க சகோ...அங்கே தானே உச்ச பட்சமாக ஆனது...
Deleteகதை மர்ம நாவல் படிப்பதுபோல் உள்ளது திக்..திக்...தான். எனக்கு லிப்ட் ல் ஏறினால் பயம்தான் வரும். இடையில் நின்றா என்ன செய்வது என. இதை நீங்க அனுபவித்து இருக்கின்றீர்கள். அடுத்த பகுதியை சீக்கிரம் பதிவிடுங்கள்.
ReplyDeleteஎனக்கு லிப்ட் ல் ஏறினால் பயம்தான் வரும். இடையில் நின்றா என்ன செய்வது என. இதை நீங்க அனுபவித்து இருக்கின்றீர்கள். //
Deleteஇப்போ எல்லாம் அப்படித்தான் இருக்கிறது எனக்கும்...அனுபவம் அல்லவா...
தொடருமா?
ReplyDeleteஅதுசரி...
கீழ வந்ததும் மறுபடியும் அந்த பையன் மேல பட்டனை அனுப்பிட்டானா????
ஆவலாய் அடுத்த பதிவுக்கு...
கீழ வந்ததும் மறுபடியும் அந்த பையன் மேல பட்டனை அனுப்பிட்டானா????//
Deleteகீழ....என்ன அப்படின்னு பார்க்கனும் இல்ல சகோ
படிச்சிட்டு வரும்போதே இப்படி பாதியிலே நிப்பாட்டினதுக்கு நல்லா காது பிடிச்சு கிள்ளணும் :) அந்த பையன் பேரு உங்களுக்கு தெரியலன்னு நினைக்கிறேன். எங்க பையன் இபானா தான் இருக்கும் கண்டிப்பா.. ஏன்னா இந்த பகிர்வு படிக்கும்போதே என் மகன் இபான் பண்ண ரகளை நினைவுக்கு வந்துவிட்டது. லிப்ட் பாதியில் நின்றுவிட்டதும் கரெண்ட் இல்லாததும் விளக்கு இல்லை காற்று இல்லை எல்லோரும் பயத்துடன் முயற்சிக்க அந்த இடத்தையே ஜனரஞ்சகமா செய்த க்ரெடிட் என் பிள்ளையை தான் சாரும்.. ஏன்னா அவனுக்கு லிஃப்ட் நா பயம் என்னைப்போலவே.. துடிச்சு கதறி அழுது ஒருவழியா முக்கா மணி கழிச்சு லிஃப்ட் திறந்ததும் எல்லாரையும் தள்ளிட்டு வெளியே வந்து விழுந்த முதல் ஆள் என் இரண்டாவது மகன் இபான் தான். :) அவன் அவஸ்தையை அழகா ஒரு துளி கூட விடாம வீடியோ பிடிச்சு வெச்சுக்கிட்டான் மூத்த மகன் அஞ்சான் :)
ReplyDeleteஅந்த எகிப்தியன் பண்ணின கலாட்டா படித்ததும் பதறிவிட்டது. அடுத்து இருப்போர் குழந்தைகள் பயந்துடுவாங்க. பொறுமையா என்ன செய்ய முடியும் என்று தானே யோசித்திருக்கவேண்டும்.. எழுதிய விதம் மிக அருமை காயத்ரி.. ரசித்தேன். ஆனா லிப்ட் நா இனி ரொம்ப பயப்படுவேன் கொஞ்ச நாள் பயம் விட்டிருந்தது. இப்ப மீண்டும் வந்துவிட்டது உங்க தொடர் படிச்சதும். அப்புறம் என்ன தான்பா ஆச்சு? :)
படிச்சிட்டு வரும்போதே இப்படி பாதியிலே நிப்பாட்டினதுக்கு நல்லா காது பிடிச்சு கிள்ளணும் :) //
Deleteஆ.....வலிக்குதுங்க சகோதரியே....
ஆமாங்க...அந்த பையன் பெயர் தெரியாது...அவன் யாருக்கோ மருந்து கொடுக்க வந்தவன் அப்படின்னு அப்புறமாகத்தான் தெரிந்தது
ஆஹா...சின்ன பையன் கலாட்டா...வா
அவன் அவஸ்தையை அழகா ஒரு துளி கூட விடாம வீடியோ பிடிச்சு வெச்சுக்கிட்டான் மூத்த மகன் அஞ்சான் :)//
ஆஹா...நாங்க இருந்த டென்ஷன்ல...கையில போன் இருந்தும் போட்டோ எடுக்கல...நீங்க இப்போ சொல்லவும் தான் தோணுது அப்போ எடுக்கலையேன்னு...
ஆனா லிப்ட் நா இனி ரொம்ப பயப்படுவேன் கொஞ்ச நாள் பயம் விட்டிருந்தது. இப்ப மீண்டும் வந்துவிட்டது//
ஆமாம் எனக்கும் தான்.
நன்றி சகோ
#எனக்கு பயம் உச்சிக்கு போய் விட்டது.#
ReplyDeleteபயம்தானே உச்சிக்குப் போனது ,லிப்ட் இல்லையே :)
த ம 2
ஆமாங்க ஐயா
Deleteஒரு வழியா சமையல் கட்டை விட்டு வெளியேறி வந்தால், லிப்டில் மாட்டிக் கொண்டீர்கள் போலிருக்கிறது.
ReplyDeleteத.ம.
எழுத்து, சமையல், ஓவியம், கவிதை, புகைப்படம்,இவை அனைத்தையும் நான் ஒன்றாகவே பார்க்கிறேன். எதிலும் மாட்டிக் கொண்டதாக நான் நினைக்கவில்லை.
Deleteலிப்ட்டில் தான் மாட்டிக் கொண்டேன்.
திகில் அனுபவத்தையும் சஸ்பென்ஸோட நிறுத்திட்டீங்களே!
ReplyDeleteபதின் நீளம் கருதி தான் அப்படி ஆகி விட்டது.
Deleteசரியான இடத்தில் தான் தொடரும் போட்டீங்க! அடுத்த பகுதிக்கான காத்திருப்புடன் நானும்....
ReplyDeleteசஸ்பென்ஸ்...................
ReplyDeleteஆம் அம்மா
Deleteவணக்கம் சகோதரி!
ReplyDeleteஎனக்கும் தனியாக லிப்டில் செல்வது சற்று பயத்தை கொடுக்கும். பதிவை மிகவும் படபடப்பாக, விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறீர்கள். அதன் பின் என்ன ஆயிற்று? அறியும் ஆவலில் நானும் படபடப்பாக உள்ளேன்.
நட்புடன்,
கமலா ஹரிஹரன்.
எனக்கும் தனியாக லிப்டில் செல்வது சற்று பயத்தை கொடுக்கும்//
Deleteஆம் எனக்கும் இப்போது அப்படித்தான் இருக்கிறது சகோ.
முழுவதும் படித்து இரண்டாவதில் பதிலிட்டாயிற்றுக. அதைப் படித்து பயந்து விடாதீர்கள். பி பாசிட்டிவ் சகோதரி! இறைவன் துணை இருப்ப்பார்!
ReplyDeleteலிப்டுதான் பாதியிலே நின்னதுன்னா நீக்களுமா பாதியிலே !!!!!!!!! கொடுமை!
ReplyDeleteநானும் சில நேரம் லிஃப்டில் ஏறும் போது பட படத்து போவேன் தீடீருன்னு நின்னுடுச்சினா எனன் செய்வது என்று. தனியா மாட்டி கொண்டால் என்ன செய்வது இது போல கேள்விகள் எல்லாம் எழும்
ReplyDelete