என்னங்க திடீர் விருந்தாளியா...கவலையை விடுங்க...அசத்திடலாம் நிமிஷத்தில....இனிப்பை....
நாளை கார்த்திகை தீபம் இல்லையா... பண்ணலாம் பாயாசம்...வாங்க
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 1 கோப்பை
பால் - 5 கோப்பை
சர்க்கரை - 1 1/4 கோப்பை
ஏலக்காய் தூள் - சிறிது
முந்திரி - 5
நெய் - 1 தே.க
நெய்யில் முந்திரியை வறுக்கவும்.
அத்துடன் ஓட்ஸ் சேர்த்து வறுக்கவும்.
நன்கு வறுபட வேண்டும்.
3 கோப்பை பால் சேர்த்து வேகவிடவும். மிக வேக மாக வெந்து விடும்.
ஏலம் + சர்க்கரை சேர்க்கவும்.
மீதி 2 கோப்பை பால் சேர்க்கவும்.
பால் கொதிக்கவும் இறக்கவும். இது ஆறவும் சேர்மானமாக ஆகிவிடும்.
( தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கொதிக்க வீட்டுக் கொள்ளுங்கள் )
எளிதான, சத்தான , புதுமையான ஓட்ஸ் பாயசம் தயார்...!!!
நாளை கார்த்திகை தீபம் இல்லையா... பண்ணலாம் பாயாசம்...வாங்க
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 1 கோப்பை
பால் - 5 கோப்பை
சர்க்கரை - 1 1/4 கோப்பை
ஏலக்காய் தூள் - சிறிது
முந்திரி - 5
நெய் - 1 தே.க
நெய்யில் முந்திரியை வறுக்கவும்.
அத்துடன் ஓட்ஸ் சேர்த்து வறுக்கவும்.
நன்கு வறுபட வேண்டும்.
3 கோப்பை பால் சேர்த்து வேகவிடவும். மிக வேக மாக வெந்து விடும்.
ஏலம் + சர்க்கரை சேர்க்கவும்.
மீதி 2 கோப்பை பால் சேர்க்கவும்.
பால் கொதிக்கவும் இறக்கவும். இது ஆறவும் சேர்மானமாக ஆகிவிடும்.
( தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கொதிக்க வீட்டுக் கொள்ளுங்கள் )
எளிதான, சத்தான , புதுமையான ஓட்ஸ் பாயசம் தயார்...!!!
ஓட்ஸ் பாயசம் ஓஹோ....
ReplyDeleteசத்தான பாயாசம்...!
ReplyDeleteஓட்ஸ் பாயசத்திற்கு ஜே!..
ReplyDeleteஆனாலும், சர்க்கரை... சர்க்கரை என்கின்றீர்களே.. நம்ம நாட்டுச் சர்க்கரை தானே!..
(ஏன்னா,, அந்தப் பயல் வெள்ளை சர்க்கரை - அதான் ஜீனி - அவன் பொல்லாதவனா இருக்கான்!)
Delete(ஏன்னா,, அந்தப் பயல் வெள்ளை சர்க்கரை - அதான் ஜீனி - அவன் பொல்லாதவனா இருக்கான்!) //
உண்மை தான் ஐயா.
இரண்டிலும் செய்யலாம் அவரவர் விருப்பம் தான் இல்லங்களா..
நன்றி
வணக்கம் சகோதரி!
ReplyDeleteஓட்ஸில் கஞ்சி, தோசை என்று செய்தாகி விட்டது. இனி தங்கள் செய்முறைப்படி ஓட்ஸ் பாயசமும் செய்து விடுகிறேன்.
சுவையும் சத்தும் நிறைந்த ஓட்ஸ் பாயாசம் சிறப்பாக அறிமுகபடுத்தியமைக்கு நன்றி!
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
நன்றி சகோ
Deleteவணக்கம்
ReplyDeleteசுவையான உணவு பற்றிய அறிமுகம் நன்று.. அறியாத உணவு...
அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல..த.ம2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி சகோ
Deleteஇனிய சத்தான ஓட்ஸ் பாயசம் அருமை சகோதரி!
ReplyDeleteநல்ல பகிர்வு! நன்றியுடன் தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்!!!
ஒரு ரகசியம் சகோதரி.. தினமும் இரவுச் சாப்பாட்டிற்குப் பதில் நான்
இந்த ஓட்ஸ் கஞ்சியே குடிப்பது வழக்கம்.
வெல்லமோ - சர்க்கரையோ(சீனி) சேர்க்கமாட்டேன். பதிலாக 1 கப் கஞ்சிக்கு 1தேக்கரண்டி தேன் + துளி உப்பு. தவிர ஓட்ஸ் வறுப்பதில்லை. அப்படியே நீரில் காய்ச்சி சிறிது பால் சேர்ப்பேன். மிளகு சீரகப் பொடி தூவிக் குடித்தால் அமிர்தம் அதுவும்..:)
அதற்கு
ஆஹா... ரகசியத்தை வெளியிட்டதற்கு நன்றி சகோ.
Deleteஅமிர்தத்தை...சுவைத்து மகிழ்கிறேன்.
சூப்பர் தான் போங்க. கலக்குங்க சகோ.
ReplyDeleteசுவையாக இருக்கும்போல் தெரிகிறது....... செய்து பார்த்துவிட வேண்டியது தான்!
ReplyDeleteஆஹா படத்துடன் அருமை...சாப்பிடத்தூண்டுகின்றதுமா
ReplyDeleteநன்றி சகோ
Deleteநானும் இளமதி கேஸ்தான். உப்பிட்ட ஓட்ஸ் கஞ்சி அமிர்தம்தான். பிள்ளைகளுக்கு செய்வதாக இருந்தால் சர்க்கரை சேர்த்து பாயசமாக்கிவிடுவேன்.
ReplyDeleteஉப்பிட்ட ஓட்ஸ் கஞ்சி அமிர்தம்தான்//
Deleteஇளமதியும், நீங்களும் சொன்ன பின் விடுவேனா செய்து விடுகிறேன்.
நன்றி சகோ.
ஓட்ஸ் பாயசம் அருமை.
ReplyDeleteஓட்ஸ் பாயாசம் செய்வதுண்டு....இதே ஸ்டைல் தான்.....சகோதரி வெல்லம் சேர்த்தும் செய்து பாருங்கள் மிகவும் நன்றாக இருக்கும்....மற்றொன்று....வெல்லம் சேர்த்து தேங்காய் பால் சேர்த்து அதாவது 3 பால் எடுத்து 3 வது பாலில் வேக வைத்து, வடிகட்டிய வெல்லம் சேர்த்து நன்றாக ஒரு பாகு போன்ற வாசனை வந்ததும், இரண்டாவது பால் சேர்த்து சிறிதாக நுரைத்ததும், இறக்கிவைத்து 1 வது பாலைச் சேர்த்தல். நன்றாக இருக்கும்...மற்றதெல்லாம் இதே காஷ்யூ, தேங்காய் கூட வறுத்துப் போடலாம்....
ReplyDelete