கடலைக்காணவில்லை
என்ன...?
ஆம்
கடலைக்காணவில்லை...
மூடு பனி...
மூடியதால்...நான்
கடலைக் காணவில்லை
இன்று காலை...!!!
இளங் கதிரோன் வரட்டும்
இளகிவிடும் பனி...
இன்று
காலை வணக்கம் சொல்லலாம்
கடலுக்கு...!!!
காத்திருக்க வில்லையா..என
கடல் கோபிக்கும்...
சாம்பல் வண்ண போர்வை கூட
கடலுக்கு அழகாக இருக்கிறது...!!!
படம் கூகுள் நன்றி
அருமை.
ReplyDeleteபனியால் கடலைக் காணாமல் அடித்து விட முடிகிறது!
பனியால் கடலைக் காணாமல் அடித்து விட முடிகிறது!//
Deleteஒன்றை விட ஒன்று விஞ்சி நிற்கிறது...இயற்கை.நன்றி சகோ
ஆஹா அருமை நான் கூட கிணற்றைக் காணோம்னு சொன்னது போல ஆயிடுச்சேனு பயந்திட்டேன்
ReplyDeleteத.ம.1
ஆஹா...நல்ல நகைச்சுவை...நினைவில் வந்திருக்கிறதே..
Deleteநன்றி சகோ
வணக்கம்
ReplyDeleteஅருமையான வரிகள் வரிக்கு சொதக்கார
உங்களுக்கு பாராட்டுக்கள் த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வரிகளை ரசித்து
Deleteவாக்கும் கருத்துமிட்டதற்கு
வந்தனங்கள்...!!!
டாஷ் போர்டில் பார்த்ததும் என்னமோ ஏதோ..ன்னு பயந்து விட்டேன்..
ReplyDeleteதளத்திற்கு வந்ததும் தான் நிம்மதி. பின்னே.. கடலும் காணாமல் போய் இருந்தால்!....
கடலும் காணாமல் போய் இருந்தால்!....//
Deleteஆற்றில் நீரைக் காணவில்லை...
கடலும் காணவில்லை என்றால்...
நன்றி ஐயா
உமையாள்,
ReplyDelete'கெணத்தக் காணோம்'னு சொன்னதில் உள்ளதைப்போல இதில் எவ்வளவு லஞ்சம் எனப் பார்க்க வந்தால் ...... எல்லாம் மூடுபனி செய்த வேலையா ? ஹா ஹா !
ஹாஹாஹஹா.....ஆமாம்
Deleteமூடு பனி
மூடியதால்....
முத்தாய் கவிதை
முளைத்தது...!!!
வணக்கம் சகோதரி!
ReplyDeleteஎதிரிலிருப்பவற்றை காண விடாது மூடிடும் தன் சக்தியால் கடலையும் மூடிக்கொண்டதா மூடுபனி? ஆஹா அற்புத காட்சி! அதை கண்டதும் வந்த தங்களது கற்பனை ஊற்றும் அற்புதம்!
உடன் பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி.
நட்புடன்,
கமலா ஹரிஹரன்.
எதிரிலிருப்பவற்றை காண விடாது மூடிடும் தன் சக்தியால் கடலையும் மூடிக்கொண்டதா மூடுபனி? ஆஹா அற்புத காட்சி! அதை கண்டதும் வந்த தங்களது கற்பனை ஊற்றும் அற்புதம்! //
Deleteஆம்..மிகவும் ஆச்சரியமாக போய்விட்டது. அரிய காணக்கிடைக்காத காட்சியல்லவா... அதான் சகோ
படங்களும் பாவரிகளும் நன்று
ReplyDeleteதொடருங்கள்
நன்றி ஐயா
Deleteசகோ, உங்க நாட்டுல கடல் இருக்கா என்ன?
ReplyDeleteபார்த்துங்க, இன்னைக்கு கடலை காணோம்னு சொல்றீங்க நாளைக்கு வீட்டை காணோம்னு சொல்லப்போறீங்க!(சும்மா ஒரு பேச்சுக்கு...)
அருமையான கவிதை.
கடல் இருக்கு...எங்கள் வீட்டு பால்கனியில் இருந்து கண்டு ரசிக்கலாம். 10 நிமிடத்தில் நடந்து கடற்கரைக்கு செல்லலாம்.
Deleteஆதவன் வந்து
ReplyDeleteதுகிலுரிப்பான்
மூடுபனியை விலக்கிவிட்டு
சூரியக்கதிர்களை
போர்த்திக்கொள்ளும்
கடல்மாதா..!
சூரியக்கதிர்களை
Deleteபோர்த்திக்கொள்ளும்
கடல்மாதா..!//
அழகான வரிகள் சகோ
அழகு...
ReplyDeleteநன்றி சகோ
Deleteஆஹா! அருமை சகோதரி! எங்களுக்கும் மேலே சொன்னது போல கிணத்தைக் காணோம் என்ற அந்த நகைச்சுவைதான் நினைவுக்க் வந்தது...
ReplyDeleteஆஹாஹாஹா.....நல்ல நகைச்சுவை அல்லவா...அது..
Deleteகவிதையையும், கற்பனையையும் இரசித்தேன். வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாருங்கள் ஐயா...நன்றி
Deleteகடல் பிரம்மாண்டம்,அழகு புகைப்படம் பனியுடன்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.உங்கள் வலைத்தளத்தில் உள்ள மீன்களுக்கு என் மகன் உணவிட்டான்.
எங்கிருந்து இதைத் தரவிரக்கினீர்கள்?
மீன்கள் நம் கேஜட்டிலேயே...இருக்கிறது பாருங்கள். உங்கள் பக்கத்தில் நீங்களும் இணைத்துக் கொள்ளலாம். அதனுடன் விளையாடி மகிழலாம். நன்றி சகோ
Deleteநானும் விதிவிலக்கல்ல. கிணறு போல்தான் இதுவுமா என நினைத்தேன்.. நல்ல ரசனையுடன் கவி எழுதியிருக்கிறீங்க. வாழ்த்துக்கள் உமையாள்.
ReplyDeleteஆனால் இங்கு இப்படி பனிமூட்டம் எங்களுக்கு இந்நேரம் இருக்கு. பக்கத்து ஆளையே தெரியாதளவுக்கு. படம் எடுத்தேன் 1தரம். சரியாக வரவில்லை. மறுமுறை முயற்சிக்கிறேன்.
ஆஹாஹாஹா...நிறைய பேர் நகைச்சுவையைத்தான் நினைத்து இருக்கிறார்கள்...
Deleteபுகைப்படம் கூகுளில் எடுத்தது.
மறுமுறை முயற்சித்து பதிவில் இடுங்கள். நன்றி சகோ
மரத்தை மறைத்தது மாமத யானை!
ReplyDeleteமரத்துள் மறைந்தது மாமதயானை!
அதுபோல கடலை மறைத்தது பனியின் போர்வை!..:)
அருமையான படமும் அழகான வரிகளும் சிறப்பு!
வாழ்த்துக்கள் சகோதரி!
மரத்தை மறைத்தது மாமத யானை!
Deleteமரத்துள் மறைந்தது மாமதயானை! //
ஆஹா அருமை சகோ நன்றி
கவிதையும் அழகாக இருக்கிறது...
ReplyDeleteநன்றி சகோ
Deleteசாம்பல் வண்ண போர்வை கடலை மறைத்து விட்டதே!
ReplyDeleteகவிதை அருமை.