தடுமன் பிடித்து இருக்கா...? சளியா...இல்லை சளி பிடிக்கிற மாதிரி இருக்கா....காய்சலா...?
ஒரு நிமிடம்...நில்லும்மா...என்ன நீ பாட்டுக்கு வரிசை கட்டி சொல்லிகிட்டே இருக்க...
இல்லங்க வந்து.... இந்த ரசம்.... அது எல்லாத்துக்கும் நல்லா கேக்கும்னு சொல்ல வந்தேன்...அடடே...உங்களுக்கே தெரியுமா...?
So Sorryங்க நான் மூச்சு விடலை... ok...வா...
ம்ம்...
சரி மேட்டருக்கு வரேன்....
இந்த குளிர் காலத்துக்கு ஏற்ற ரசம்.
தேவையான பொருட்கள்.
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 3
வெங்காயம் - சிறிது
தக்காளி - 1
புளி - 1 எலுமிச்சை
து .பருப்பு தண்ணீர் - 1 கோப்பை
மிளகு சீரகப் பொடி - 1 தே.க
எண்ணெய் - 1 தே.க
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் காயவும் இஞ்சியை சேர்த்து வதக்கவும்.
பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்
வெங்காயத்தை சேர்த்து வத்க்கவும்
பூண்டை சேர்த்து வதக்கவும்.
தக்காளியை சேர்த்து வதக்கவும்.
மிளகு சீரகப் பொடியை சேர்க்கவும்.
புளிக்கரைசலை விடவும்.
நன்கு பச்சை வாசம் போன பின்பு
பருப்பு தண்ணீரை விடவும், உப்பு சேர்க்கவும்.
மல்லியை தூவவும்.
தாளிக்க வேண்டியது
நெய் - 1/2 தே.க
கடுகு - 1/ 4 தே.க
பெருங்காயம் - சிறிது
. தாளிக்கவும்
அப்பாடா...விறுவிறுன்னு.....ரசம் தயாராயிடுச்சு...!!!
இஞ்சி இடுப்பழகி...!!!
இஞ்சி இடுப்பழகா...!!!
அருமையான ரசம்..
ReplyDeleteகாலத்திற்கேற்ற சமையல் குறிப்பு
ReplyDeleteஎனக்குப் பிடித்ததும் கூட
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
இதை மிளகு ரசம்னு கூட சொல்லுவாங்க தானே. இல்ல அது வேற வகையான ரசமா?
ReplyDeleteமிளகு ரசம் வேறு...சகோ.
Deleteஅருமையான இஞ்சி ரசம் உமையாள்.
ReplyDeleteநன்றி.
நன்றி சகோ
Deleteநான் சமையல் பதிவுகளையும் படிப்பது உண்டு--என்னுடைய hobby சமைப்பது!\விடுமுறை நாட்களில் என் சமையல் தான் - என் ஆத்துக்காரிக்கு என் சமையல் மிகவும் பிடிக்கும்.
ReplyDeleteஅது சரி! எண்ணெய் குளியலில் மிளகாய் போட்டால் கண்ணில் பட்டால் எரியுமே! மேலும் சீக்கக்காய் வேற? எப்படி?
தமிழ்மணம் +1
விடுமுறை நாட்களில் என் சமையல் தான் -// பேஷ் பேஷ் தொடரட்டும்.
Deleteசீயக்காய், மிளகாய் கண்ணில் படாமல் தான் உபயோகிக்க வேண்டும்.
இப்போது இது தேவை... ஏனென்றால் எங்கள் செல்லத்திற்கு ஜலதோசம்...
ReplyDeleteநன்றி...
இந்த ரசம் வைத்துக் கொடுங்கள் .
Deleteஇஞ்சி ரசம் - நம்முடைய கை வண்ணமும் இப்படித்தான்..
ReplyDeleteஇஞ்சி ரசத்திற்கேற்ற பாட்டு - இப்பதான் சரி..
இஞ்சி ரசம் - நம்முடைய கை வண்ணமும் இப்படித்தான்.//
Deleteகைமணம்....அசத்தல் ஐயா
இந்த குளிருக்கு ஏற்ற ரசம். பார்க்கவே செய்யனும் போல. நன்றி.
ReplyDeleteஇந்த குளிருக்கு ஏற்ற ரசம்...ஆம் சகோ
Deleteமருத்துவத் தீர்வாகத் தரும்
ReplyDeleteஇவ்வாறான வழிகாட்டல்கள்
நல்ல பயனைத் தரும்!
தொடருங்கள்
அருமையான நல்ல தகவல் சகோதரி விக்ஸ் கம்பெனிக்காரன் இந்தப்பதிவை பார்த்திடக்கூடாது,,, கோபப்படுவான்
ReplyDeleteதமிழ்மணம் 3
விக்ஸ் கம்பெனிக்காரன் இந்தப்பதிவை பார்த்திடக்கூடாது,,, கோபப்படுவான் //
Deleteஅடடா..அப்படியா செய்தி...ஹிஹிஹி...
ரசமான பதிவு.
ReplyDeleteஇஞ்சி ரசம்... இப்ப தேவையான ரசம்தான்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சகோதரி...
நன்றி சகோ
Deleteஇஞ்சி போட்ட ரசம் அருமையா இருக்கும்!..
ReplyDeleteசெய்துவிட்டுச் சொல்கின்றேன்!
நல்ல பகிர்வு! நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!
நன்றி சகோ சொல்லுங்கள்
Deleteஹை புதுசா இருக்கே! ரசம்.....ஒரு கை பாத்துரலாம்...ஹஹா உங்க ரசத்துக்கு எங்கே போறது?!!! நாங்க சென்ஞ்சுததான் சாப்டணும்...ம்ம்ம்ம்
ReplyDeleteநாங்க சென்ஞ்சுததான் சாப்டணும்// ஆமாம்..
Deleteநன்றி சகோ
எனக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்! நகல் எடுத்துக்கொள்கிறேன்! நன்றி!
ReplyDeleteநகல் எடுத்துக் கொள்ளுங்கள் சகோ.
Deleteதில்லியில் குளிர் ஆரம்பித்துவிட்டது..... நிச்சயம் பயன்படும்.....
ReplyDeleteபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நன்றி சகோ
Deleteஇஞ்சி ரசம் மிக அருமை, இந்த குளிருக்கு ஏற்ற ரசம் . நான் எல்லாவற்றையும் அரைத்து சேர்த்து விடுவது,
ReplyDelete