Wednesday, 19 September 2018

மனம் ஒரு மாயக்காரி / Kavithaiமனம் ஒரு மாயக்காரி

முடியும் என எண்ணும் போல்
முன்னேறுவாள் முடிவு வரை

Tuesday, 18 September 2018

Chettinad Peanut sambar செட்டி நாட்டுக்கடலைக் குழம்பு / Aachi's Style Ki...

தேவையானவை

நிலக்கடலை - 1கப்

வெங்காயம் - 1

பூண்டு - 20 பற்கள்

புளி - எலுமிச்சை அளவு

சம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

கருவேப்பிலை - சிறிது

உப்பு - ருசிக்கு


Wednesday, 12 September 2018

Vegetable Kozhukkattai வெஜிடபிள் கொழுக்கட்டை / Aachi's Style Kitchen

பிள்ளையார் சதிர்த்தி ஸ்பெஷல்.....சுலபமான, சுவையான தாளிப்பு கொழுக்கட்டை.....செய்வது எப்படி என பார்க்கலாமா....வாங்க,வாங்க....

Monday, 10 September 2018

1.Ragi Nuts Gulkhand Kozhukkattai ராகி நட்ஸ் குல்கந் கொழுக்கட்டை / Aachi's...

இந்த வருடம் பிள்ளையார் சதுர்த்திக்கு புதிய சுவையில் கொழுக்கட்டை செய்து நெய்வேத்தியம் செய்யலாமா....நண்பர்களே..

ஆரோக்கியமான இதை சர்க்கரை சேர்த்துக் கொள்ள கூடாதவர்கள் கூட உண்டு இன்பம் பெறலாம்....

Saturday, 8 September 2018

செட்டி நாட்டு மொச்சைக் கறி / Chettinad Mochai Curry

 இந்த மாதிரி மொச்சைக்கறியை செய்து சாப்பிடாதீர்கள்....பின்பு விடவே மாட்டீர்கள்.
மொச்சையில் புரதம் அதிகமாக இருக்கிறது. அதே போல் வைட்டமின்களும், கனிமச்சத்தும் அதிகமாக இருக்கிறது. இதை சாப்பிடுவதால் உடல் தேறும்.

Thursday, 6 September 2018

கற்பூரவள்ளி ரசம் / Karpuravalli Rasam

 
தொண்டை  நமநமவென சளி பிடிப்பது போலிருந்தது. சரி ரசம் செய்யலாம் என நினைத்தேன். ஆனால் வழக்கமாய் செய்வது போல்  இல்லாமல் வித்தியாசமாய் செய்யலாம் என நினைக்கும் போது பால்கனியில் வளரும் கற்பூரவள்ளி காற்றில் தலையாட்டி வாவா என அழைப்பு விடுத்தது. சரி என ஆசையாய்   இலைகளைக் கிள்ளி எடுத்து வந்தேன். என்ன மணம்....காற்றில் சுகமாய்...பரவ நுகர்ந்தேன். கடவுள் என்னமாய் ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்றை மறைத்து வைத்து இருக்கிறார் இல்லையா.....?

Saturday, 1 September 2018

செட்டி நாட்டு வாழைக்காய் சாப்ஸ் / Vazhaikkai chops chettinad cuisine

இதுவரை நீங்கள் சுவைக்காத செட்டி நாட்டு வாழைக்காய் சாப்ஸ் உங்களுக்காக....செய்து சுவைத்து மகிழுங்கள் நண்பர்களே...


Wednesday, 29 August 2018

நீராகாரம் பருகலாமா../Neeraharam - The World Best Break Fast

நீராகாரம் பருகலாமா....நண்பர்களே...வாங்க
காலை காப்பி,டீ என நாம் பருகும் பழக்கம்...ஆங்கிலேய காலத்தில் இருந்து துவங்கியது தான். ஆனால் முன்பு இந்த நீராகாரத்தை தான் பருகினார்கள். இதை நமக்கு பிடித்த மாதிரி கலந்து அருந்தலாம்.

Sunday, 26 August 2018

வரமிளகாய் சட்னி / Varamilagai chutney

செட்டி நாட்டு வரமிளகாய் சட்னி....!

நேயர்களின் வேண்டுகோளுக்கு இணங்க.... இந்த காரசாரமான வரமிளகாய் சட்னியை காணொலியாக பதிவிட்டு இருக்கிறேன்...

Wednesday, 22 August 2018

கோலா/பருப்பு உருண்டை குழம்பு - Kola Urundai Kuzhambu

செட்டி நாட்டு பாரம்பரிய பருப்பு உருண்டை குழம்பு...!!! அதிக புரத சத்துள்ளது இந்த முறையிலும் செய்து சுவையுங்கள் நண்பர்களே...
Sunday, 19 August 2018

தூதுவளை ரொட்டி / Thoothuvalai Roti / Healthy Snacks

 கற்பக மூலிகைகளில் தூதுவளையும் ஒன்று. 

கொடியாக படரும். சிறுசிறு முட்கள் தண்டு, இலைகளில் காணப்படும். இதன் இலை, பூ,காய், வேரென அனைத்தும் மருத்துவ பயன் உடையது.

 கால்சியம் நிறைந்து இருக்கிறது.

இதை சாப்பிடுவதால் சளி, இருமல், இரைப்பு, மண்டையில் நீர்கோர்த்தல், வாதம், பித்தம், காது மந்தம், இன்னும் பிறவற்றையும் சரி செய்யும். 

Thursday, 16 August 2018

Monday, 13 August 2018

Friday, 10 August 2018

Healthy Bread Veggie

சுலபமாக எளிதில் செய்யலாம். குழந்தைகளுக்கு வித விதமாக செய்ய வேண்டி இருக்கும்.  இதை செய்து கொடுத்தால்  அவர்கள் ஆவலாக  சாப்பிடுவார்கள் . காலை மாலை டிபனுக்கு பொருத்தமாக இருக்கும்.
Wednesday, 4 July 2018

பசுமை சமையல்/ Pasumai samayal

  ஜுலை மாத " மல்லிகை மகளில் " என்னுடைய ரெசிப்பீஸ் வெளிவந்திருக்கிறது.

நன்றி
உமையாள் காயத்ரி

Sunday, 1 July 2018

uppuma kozhukkattai /உப்புமா கொழுக்கட்டை

drumstick kozhambu / முருங்கை காய் குழம்பு

Mint Yoghurt Kozhukkattai / புதினா தயிர் கொழுக்கட்டை

Salted peanuts in 90 seconds

Beetroot vadai / பீட்ரூட் வடை

Sauted Broccolli / ப்ராக்கலி

Thallippu Kozhukattai / தாளிப்பு கொழுக்கட்டை

Wednesday, 20 June 2018

You Tube Channel/தேங்காய் பால் வெந்தயக் கஞ்சி/Coconut Milk Fenugreek Kanji

வணக்கம் நண்பர்களே....

சில நண்பர்கள் உங்கள் சமையலை வீடியோவாக போடுங்களேன் எங்களுக்கு உதவியாக இருக்கும் என கேட்டு இருந்தார்கள். ஆகையால் 

Wednesday, 13 June 2018

சுக்கினி கூட்டு / Zucchini Kootu

சுக்கினி வெளிநாடுகளில் நிறைய கிடைக்கின்றன.
நீர் சத்து மிகுந்த காய். எளிதில் வெந்து விடும். பார்க்க வெள்ளரி போல் இருக்கும். மெக்னீஸியம்  அதிக அளவு இருக்கிறது.

Monday, 11 June 2018

கொண்டக்கடலை சாலட் / Black Chana Salad

சாலட் செய்து சாப்பிடலாம் வாங்க.....

கடலைப்பருப்பு, கடலைமாவு, பொட்டுக்கடலை மூன்றுமே ஒரே தானியத்தில் (சிகப்பு மூக்கடலை )இருந்து தயாரிக்கப் படுபவை.

நாட்டுக் கொண்டக்கடலையை நாம் முழுதாக பயன் படுத்தும் போது அதனை நாம் தோலுடன் உண்கிறோம். நார்சத்து இதனால் கிடைத்து விடுகிறது. 

இந்த கொண்டக்கடலையில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

மேலும் இந்த கொண்டக்கடலை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலம் கிடைக்கும் சத்துக்களைப் பெறலாம். இங்கு ப்ரௌன் நிற கொண்டக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ப்ரௌன் நிற கொண்டக்கடலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவை உடல் எடை குறைய உதவி புரியும். அதிலும் இதனை தினமும் 1/2 கப் வேக வைத்து சாப்பிட்டு வந்தால், வயிறு நிறைவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல், அதனால் கண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளாமல், உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்கலாம்.
\


Thursday, 7 June 2018

தக்காளி தித்திப்பு /Tomato Sweet Pachadi

தக்காளி தித்திப்பு இதன் சுவை அலாதியானது. ஆனா இதை அடிக்கடி செய்வதில்லை. எப்போதாவது தான் செய்வேன். செய்வது சுலபம் அதனால் இருக்குமோ? ஹிஹிஹி....!
Saturday, 2 June 2018

கத்திரி வெயிலே...!கத்திரி வெயிலே...!
கண் சுடும் நிலவே...!
அக்னி பிரவாகமே...
அனல் காற்றின் அரவணைப்பே...