Thursday, 7 June 2018

தக்காளி தித்திப்பு /Tomato Sweet Pachadi

தக்காளி தித்திப்பு இதன் சுவை அலாதியானது. ஆனா இதை அடிக்கடி செய்வதில்லை. எப்போதாவது தான் செய்வேன். செய்வது சுலபம் அதனால் இருக்குமோ? ஹிஹிஹி....!





தேவையானவை


தக்காளி - 3
சுகர் - 5 டேபிள் ஸ்பூன்
முந்திரி -  7
எலக்காய் தூள் - சிறிது
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்





செய்முறை 

வாணலியில் நெய் விட்டு உடைத்து வைத்து இருக்கும் முந்திரியை போட்டு பொன் நிறமாக வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.







கழுவி நறுக்கி வைத்து இருக்கும் தக்காளியை வாணலி நெய்யில் சேர்த்து வதக்கவும்.










தக்காளி வெந்ததும் சுகரை சேர்த்து கிண்டிக் கொண்டு இருக்கவும்.






சுருண்டு வரவும் ஏலக்காய் தூள்,வறுத்து வைத்து இருக்கும் முந்திரிகளை சேர்த்து கிளறி இறக்கவும். தேன் விட்டு கலந்து விடவும்.






                                           தக்காளி தித்திப்பு தித்திப்புதான்


சுகர் தான் சேர்க்க வேண்டும் என்பதில்லை வெல்லம், கருப்பட்டி இதில் விருப்பப்படும் ஒன்றை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

தக்காளியை தண்ணீரில் கொதிக்க விட்டு தோல் நீக்கி மிக்ஸியில் இட்டு அரைத்து அவ்விழுதைக் கொண்டும் செய்யலாம். அது ஜாம் மாதிரி வரும்.

கிஸ்மிஸ் பழத்தையும் விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.




17 comments:

  1. ஆஹா அல்வா போலவே இருக்கிறதே...

    ReplyDelete
    Replies
    1. உடனடி வருகைக்கு நன்றி சகோ. கொஞ்சம் அப்படித்தான் இருக்கும்.

      Delete
  2. பதிவுகள் தொடரட்டும்...
    அன்பின் நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஐயா

      Delete
  3. பார்க்கவே அழகாய் இருக்கிறது. ரோஜா குல்கந்து போல!

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி

    தக்காளி தித்திப்பு அருமையாக இருக்கிறதே... தலைப்பும் வித்தியாசமாய் இனிமையாகத்தான் உள்ளது.

    படங்கள், செய்முறை விளக்கங்கள் அனைத்தும் மிக அழகு. இனிப்புகள் சாப்பிட வேண்டுமென்று தோன்றும் போது இதைச்செய்து சாப்பிடலாம். இனிப்புக்கு இனிப்புமாச்சு... தக்காளியும் சேர்ந்த மாதிரி இருக்கும். மிகவும் அருமை சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. //இனிப்புகள் சாப்பிட வேண்டுமென்று தோன்றும் போது இதைச்செய்து சாப்பிடலாம். இனிப்புக்கு இனிப்புமாச்சு... தக்காளியும் சேர்ந்த மாதிரி இருக்கும்//

      ஆம் சகோ வருகைக்கு நன்றி

      Delete
  5. இதுவரை அறியாதது
    இன்று முயற்சி செய்ய இருக்கிறோம்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி.

      Delete
  6. செய்து பார்க்கிறோம்.... நன்றி...

    ReplyDelete
  7. புதுசா இருக்கு...

    வெல்லம் போட்டு செஞ்சு பார்க்குறேன்...

    ReplyDelete
    Replies
    1. //வெல்லம் போட்டு செஞ்சு பார்க்குறேன்...// ருசித்து விட்டு சொல்லுங்கள் அனு நன்றி

      Delete
  8. இந்த குறிப்பு புதிதாக,அறியாததாக இருக்கு. செய்துபார்க்கனும். நன்றி உமையாள்

    ReplyDelete
    Replies
    1. செய்து விட்டு கூறுங்கள் சகி நன்றி

      Delete
  9. செய்து பார்க்க ஆவலை ஏற்படுத்தும் படம்.
    எளிதான செய்முறை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி அம்மா

      Delete
  10. Very colourful. I am sure taste will be equally awesome.

    ReplyDelete