சாலட் செய்து சாப்பிடலாம் வாங்க.....
கடலைப்பருப்பு, கடலைமாவு, பொட்டுக்கடலை மூன்றுமே ஒரே தானியத்தில் (சிகப்பு மூக்கடலை )இருந்து தயாரிக்கப் படுபவை.
நாட்டுக் கொண்டக்கடலையை நாம் முழுதாக பயன் படுத்தும் போது அதனை நாம் தோலுடன் உண்கிறோம். நார்சத்து இதனால் கிடைத்து விடுகிறது.
இந்த கொண்டக்கடலையில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.
ப்ரௌன் நிற கொண்டக்கடலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவை உடல் எடை குறைய உதவி புரியும். அதிலும் இதனை தினமும் 1/2 கப் வேக வைத்து சாப்பிட்டு வந்தால், வயிறு நிறைவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல், அதனால் கண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளாமல், உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்கலாம்.
\
தேவையானவை
கொண்டக்கடலை - 3/4 கப்
கேரட் - 1
கொத்தமல்லி இலை - 1 கை
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சை - 1/2 மூடி
தேங்கய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - ருசிக்கு
தாளிக்க
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
கொண்டக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். குக்கரில் கொண்டக்கடலையை போட்டு உப்பு போட்டு வேகவைத்துவும் வடிகட்டி வைக்கவும்..
வாணலியில் எண்ணெய் காயவும் கடுகு போட்டு வெடித்த பின் பச்சைமிளகாய், பெருங்காயம்
சேர்த்து விடவும்.
கொண்டக்கடலையை போட்டு
இரண்டு கிண்டு கிண்டி விடவும்.
கேரட்,மாங்காய்,தேங்காய், கொத்தமல்லி உப்பு,எலுமிச்சை
சேர்த்து கலந்து விடவும்.
கொண்டக்கடலையையும் சேர்த்து கிளறி எடுக்கவும்.
கொண்டக்கடலை சாலட் ரெடி....!!!
குறிப்பு
இந்த சாலட்டுடன் வெள்ளரி, வெங்காயம் , தக்காளி வேண்டும் என்போர் சேர்த்துக் கொள்ளலாம்.
போர் அடிக்கும் போது வேறு மாதிரி செய்து சாப்பிட்டுக்கலாம் இல்லையா...
ஆஹா படங்களே ஸூப்பராக இருக்கிறது.
ReplyDeleteநல்ல ஆலோசனை.
ReplyDeleteநன்றி ஶ்ரீராம் ))..
Deleteஅழகான படங்கள். கொண்டக்கடலை சாலட் அருமை.
ReplyDeleteநன்றி அம்மா
Deleteநல்லதொரு ஈசியான சாலட் உமையாள். ரெடிமேட் ஆகவே கடலை கிடைக்கிறது. செய்துபார்க்கிறேன்.நன்றி.
ReplyDelete//ரெடிமேட் ஆகவே கடலை கிடைக்கிறது. // வேகவைத்ததா? சபாஷ்...ருசித்து விட்டு கூறுங்கள்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஅருமையான கொண்டைக்கடலை சால்ட். அழகான படங்களுடன் செய்முறை விளக்கங்களும்,மிக நன்றாக இருக்கிறது. படங்கள் பார்க்கவே நாவூற வைக்கிறது. நார் சத்து மிகுந்த இதை சால்டாக அறிமுகபடுத்தியமைக்கு மகிழ்சச்சி. கொண்டைக்கடலையின் சிறப்புகளை விளக்கி கூறியதற்கும் மிக்க நன்றிகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா
Deleteபளிச் பளிச் படங்கள்..
ReplyDeleteஎங்கள் வீட்டில் வாரம் ஒருமுறை இந்த சுண்டல் உண்டு...
கொண்டக்கடலையை வேகவைத்ததை அப்படியே போட்டு விட்டு தனியாக தாளித்து விட்டு கலக்க இருந்தேன். ( பச்சை மிளகாயின் வாசத்திற்கா வதக்கினேன்) அப்படியே கொண்டக்கடலையையும் போட்டு கிண்டி இறக்கி விட்டேன்.
Deleteஅருமையாக இருந்தது.
//எங்கள் வீட்டில் வாரம் ஒருமுறை இந்த சுண்டல் உண்டு.// ஓ சூப்பர் அனு.
அருமை... விளக்கமான செய்முறை... நன்றி...
ReplyDeleteநன்றி சகோ
Deleteபுட்டும் கொண்டைக்கடலை கறியும் கேரளத்தில் பிரதானம் ந்ம்மூரில்நவராத்திரி சமயத்தில் கொண்டைக் கடலை கொடுக்கப்படும் சுண்டலாகவோ சலாடாகவோ கொண்டைக்கடலை உணவில் இருந்தால் நார்ச்சத்து என்பார்கள்
ReplyDelete//புட்டும் கொண்டைக்கடலை கறியும் கேரளத்தில் பிரதானம் // ஆம் ஐயா கேரளா போன போது சுவைத்து மகிழ்ந்து இருக்கிறேன். நன்றி ஐயா
Delete