கத்திரி வெயிலே...!
கண் சுடும் நிலவே...!
அக்னி பிரவாகமே...
அனல் காற்றின் அரவணைப்பே...
வேர்வையாற்றின்
வெள்ளப் பெருக்கே...
ஆடையில் சங்கமித்து
வாடை வீசவைக்கிறாயே ...
தொண்டைக் குழியிலோ...
தாகத்தீயின் பசியோ பசி
ஆற்ற நீர்வார்கையிலே
அணைபோல் நிறம்பிய வயிறு
ஆனாலும்-
தொண்டை போட்டது கூப்பாடு...!\
மின் விசிறி வேண்டும் மேனிக்கு
அடுப்படியோ வேண்டாம் மேனிக்கு
உணவு வேண்டுமே மேனிக்கு
உவகையில்லை சமைக்க மேனிக்கு...
கருமம் செலுத்த வேண்டின்
காரியம் நடை பெற வேண்டும்
கத்திரி வெயிலே -
நீபோய் கூட்டிவா...
தூறல் மழைச்சாரலை.....!
உமையாள் காயத்ரி
ஆஹா வெயிலுக்கு ஏற்ற குயிலு பாடுவது போலிருக்கிறது.
ReplyDeleteநேற்று நீங்கள் //தொடர்ந்து எழுதுங்கள் கவிதைகளையும்...// என்றீர்களா...கவிதை எழுதி நிறைய நாட்கள் ஆனதால் விட்டுப் போச்சு எழுதுவது என்றிருந்தேன். மறுமடியும் கவிதை உந்துதல் வர எழுதினேன் இக்கவிதையை. தங்களுக்கு நன்றி சகோ.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteகத்திரி வெய்யில் கவிதை மிக அருமையாக உள்ளது. அதற்கேற்ற படங்களும் பிரமாதம்.
/கத்திரி வெயிலே...!
கண் சுடும் நிலவே...!
அக்னி பிரவாகமே...
அனல் காற்றின் அரவணைப்பே../
ஆரம்பமே வார்த்தைகள் அசத்தலாக உள்ளது சகோதரி. நிறைய கவிதைகளை உருவாக்குங்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//நிறைய கவிதைகளை உருவாக்குங்கள். // முயல்கிறேன் சகோ நன்றி
Deleteதுளசி: எங்க ஊர்ல மழை...கேரளா...
ReplyDeleteகீதா: ஹையோ காயத்ரி ஒரே வெயில் தாங்கலை...சூரியனார்க்கு கேரளத்துப் பக்கம் அனுமதி இல்லைனு இங்க டேரா போட்டுவிட்டார். மட்டுமில்ல நாமதான் இங்க எல்லா மரத்தையும் வெட்டி வீழ்த்துகிறோமே...ஸோ அவரு ஜாலிய சுட்டெரிக்கிறார்.
கவிதைப் ப்ரவாகம் தொடங்கிருச்சு....கொட்டட்டும்!!! நிறைய எழுதுங்க காயத்ரி...
துளசி, கீதா இருவருக்கும் நன்றி.
Deleteஇனி தென்றல் தான்...
ReplyDeleteஆம் தொடங்கியாச்சி...அனலுடன் நன்றி சகோ
DeleteSuper.
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி
Deleteஅருமையான கவிதை உமையாள். சூப்பர் வரிகள்.
ReplyDeleteஇங்கு கொஞ்சம் அனுப்புங்கள் வெயிலை.. மழை அனுப்புகிறேன்.
ஓ அப்படியா அனுப்பி விட்டேன் வந்ததா....சகி
Deleteஉணவு வேண்டுமே மேனிக்கு
ReplyDeleteஉவகையில்லை சமைக்க மேனிக்கு...
கருமம் செலுத்த வேண்டின்
காரியம் நடை பெற வேண்டும்
கத்திரி வெயிலே -
நீபோய் கூட்டிவா...
தூறல் மழைச்சாரலை..//
அருமையான கவிதை.
நன்றி அம்மா
Deleteவணக்கம் !
ReplyDeleteமனம்விட்டுப் பேசும் மார்கழிப் பூவாய்
மழைவேண்டிக் கவிதை தந்தாய் - அகக்
கனம்விட்டுப் போகும் கருணையாய் வார்த்தை
களிப்போடு கொண்டு வந்தாய் !
அருமை சகோ வாழ்க நலம் !
வருகைக்கும், கவிதைக்கும் நன்றி சகோ
Delete