வீட்டிலேயே பனீர் தயாரிக்கலாம் வாங்க....
தேவையான பொருட்கள்
பால் - 2 லிட்டர்
எலுமிச்சை - 2
அல்லது
வினீகர் - 3 மே.க
பால் முதல் கொதி வருகிற மாதிரி எழும் சமயம் அடுப்பை அணைத்துவிடவும்.
எலுமிச்சை சாற்றை ஊற்றவும்.
கரண்டியால் கலக்கி விட்டுக் கொண்டு இருக்கவும். அப்போது இப்படி பிரிந்து வரும்.
வெதுவெதுப்பான சூடு இருக்கும் போது மஸ்லின்துணி அல்லது காட்டன் துணியில் வடிகட்டவும். துணியை சுருட்டி நீரை பிழியவும்.
துணிமூட்டையை ஒரு பலகை அல்லது தட்டில் வைத்து கனமாக ஏதாவதுஒரு பொருளை அதன் மேல் வைத்து , 3மணி நேரம் விட்டு விடுங்கள்
பின்பு எடுத்துப் பார்த்தால் இப்படி வந்து இருக்கும்.
வேண்டிய அளவில் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
பனீர் துண்டுகளை ஜிப்லாக் பைகளில் போட்டு ப்ரீஸரில் வைத்துக் கொள்ளுங்கள்.அல்லது இறுக்கமான மூடியுடன் கூடிய டப்பாக்களிலும் வைத்துக் கொள்ளலாம்.
வேண்டும் போது பயன் படுத்திக் கொள்ளலாம்.
பனீரில் இருந்து வடிகட்டிய நீரை பொதுவாக கொட்டி விடுவார்கள். நீங்கள் ப்ரிஜ்ஜில் வைத்துக் கொள்ளுங்கள் அதை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன். ப்ரிஜ்ஜில் வைத்தாலும் 4 , 5 நாட்கள் வரை தான் நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
பால் - 2 லிட்டர்
எலுமிச்சை - 2
அல்லது
வினீகர் - 3 மே.க
பால் முதல் கொதி வருகிற மாதிரி எழும் சமயம் அடுப்பை அணைத்துவிடவும்.
எலுமிச்சை சாற்றை ஊற்றவும்.
கரண்டியால் கலக்கி விட்டுக் கொண்டு இருக்கவும். அப்போது இப்படி பிரிந்து வரும்.
வெதுவெதுப்பான சூடு இருக்கும் போது மஸ்லின்துணி அல்லது காட்டன் துணியில் வடிகட்டவும். துணியை சுருட்டி நீரை பிழியவும்.
துணிமூட்டையை ஒரு பலகை அல்லது தட்டில் வைத்து கனமாக ஏதாவதுஒரு பொருளை அதன் மேல் வைத்து , 3மணி நேரம் விட்டு விடுங்கள்
பின்பு எடுத்துப் பார்த்தால் இப்படி வந்து இருக்கும்.
வேண்டிய அளவில் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
பனீர் துண்டுகளை ஜிப்லாக் பைகளில் போட்டு ப்ரீஸரில் வைத்துக் கொள்ளுங்கள்.அல்லது இறுக்கமான மூடியுடன் கூடிய டப்பாக்களிலும் வைத்துக் கொள்ளலாம்.
வேண்டும் போது பயன் படுத்திக் கொள்ளலாம்.
பனீரில் இருந்து வடிகட்டிய நீரை பொதுவாக கொட்டி விடுவார்கள். நீங்கள் ப்ரிஜ்ஜில் வைத்துக் கொள்ளுங்கள் அதை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன். ப்ரிஜ்ஜில் வைத்தாலும் 4 , 5 நாட்கள் வரை தான் நன்றாக இருக்கும்.
வாவ் படத்தில் பன்னீர் பார்க்க சூப்ப்ரா இருக்கு. கடையில் வாங்கும் பன்னீர் போல் உள்ளது. உங்க குறிப்பின் படி செய்து பார்க்கிறேன் உமையாள். நன்றி.
ReplyDeleteசுகாதாரமான சலீசான நல்ல பனீர். பனீர் தானே கரெக்ட். (Paneer)
ReplyDeleteபனீர் தான் சரி ஐயா. தவறுக்கு வருந்துகிறேன்.
Deleteஆம் ஐயா சரி செய்து விட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
Deleteஎல்லோருக்கும் இந்திய குடியரசு நாள் வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றி சகோ
Deleteசெய்து பார்க்கிறோம்... நன்றி...
ReplyDeleteநன்றி சகோ
Deleteவாழ்க நலம்!..
ReplyDeleteஅன்பின் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!..
நன்றி ஐயா. தங்களுக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!.
Deleteஅட கடவுளே இவ்வளவு தானா நானும் எதோ பெரிய கஷ்டமான விடயம் என்றல்லவா நினைத்தேன். நல்ல விடயம் அம்மா ரொம்ப thanks இனி பாருங்க நம்ம வீட்டில அடிக்கடி பன்னீர் கறி தான் ஹா ஹா ...வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteசுலபமான செய்முறை. பனீர் வடிகட்டிய நீரை வைத்துக் கொள்ளவா? கெட்டுப்போய் விடாது? எப்போ அடுத்த பதிவு போடுவீங்க?
ReplyDeleteநாளை போடுகிறேன் சகோ.
Deleteப்ரிஜ்ஜில் வைத்து விட வேண்டும். ப்ரிஜ்ஜில் வைத்தாலும் நீண்ட நாட்கள் ( 4 , 5 நாட்கள்) இருக்காது.
நீங்கள் கேட்டவுடன் பதிவிலும் ப்ரிஜ்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு விட்டேன். நன்றி.
கடைசி ஸ்டேப் முடிஞ்சா பின்னாடி பிரீசர்ல ஒரு மணிநேரம் வைத்துவிட்டால் நல்ல கன்சிஸ்டன்சி கிடக்கும். நானும் இந்த முறையில் செய்திருக்கிறேன் தோழி! படங்கள் அருமை:)(
ReplyDeleteஅட உங்களுக்கு கிச்சன் வேலை எல்லாம் தெரியுமா டீச்சர்?
Delete
Deleteஒரு சந்தேகம் பனீர் தயாரித்த அன்றே பயன்படுதலாமா அல்லது பீரிஸரில் வைத்துவிட்டு அடுத்த நாள் சமைத்தால் நன்றாக வருமா? அடுத்து துணியில்லாவிட்டால் வேறு எந்த முறையில் தண்ணிரை வடிகட்டலாம்.
வடிகட்டும் துணிக்கு மனைவியின் சேலையை எடுத்தால் அதுக்கு அப்புறம் பனீர் செய்ய கைகள் இருக்காது என்னிடம் வேஷ்டியும் இல்லை அப்ப நான் என்ன செய்வது?
நன்றி மைதிலி
Deleteஒரு சந்தேகம் பனீர் தயாரித்த அன்றே பயன்படுதலாமா அல்லது பீரிஸரில் வைத்துவிட்டு அடுத்த நாள் சமைத்தால் நன்றாக வருமா? //
Deleteஎப்படி செய்தாலும் நன்றாக வரும். ப்ரீஸரில் வைத்தால் தேவையான போது எடுத்து பயன் படுத்தலாம்.
அடுத்து துணியில்லாவிட்டால் வேறு எந்த முறையில் தண்ணிரை வடிகட்டலாம்.//
வடிகட்டும் துணிக்கு மனைவியின் சேலையை எடுத்தால் அதுக்கு அப்புறம் பனீர் செய்ய கைகள் இருக்காது என்னிடம் வேஷ்டியும் இல்லை அப்ப நான் என்ன செய்வது? //
கைகளை பார்த்துக் கொள்ளுங்கள் சகோ...கை தான் மிக முக்கியம். ஆகையால் தங்களின் கைக்குட்டையை...உபயோகித்து பனிர் செய்து தங்களின் மனைவியை மகிழ்விக்கவும்.
நான் இதையல்லாம் பார்த்து ஜொள்ளு மட்டும்தான் விடமுடியும்
ReplyDeleteதமிழ் மணம் 3
சரவணபவனில்...கிடைக்கும் சகோ. நன்றி
Deleteவணக்கம்
ReplyDeleteஇலகுவான செய்முறை விளக்கம் நிச்சயம் செய்து பார்க்கிறேன்.... சகோதரி....த.ம5
இனிய குடியரசு தினவாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி சகோ.
Deleteகுடியரசுதின வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி ஐயா
Deleteகுடியரசுதின வாழ்த்துகள்
ஆஹா... சூப்பரு...
ReplyDeleteசெய்து பார்க்க வேண்டும் சகோதரி.
செய்து பார்க்க வேண்டும்//
Deleteசெய்து பாருங்கள் சகோ
வடக்கில் நல்ல பனீர் கடைகளில் அதிகமாகவே கிடைக்கிறது. அதனால் வீட்டில் செய்ய வேண்டிய அவசியம் இருந்ததில்லை.
ReplyDeleteசெய்முறை தெரிந்திருந்தாலும் செய்ததில்லை.
நன்றி சகோ
Deleteஇங்க விலை கொஞ்சம் அதிகம், அதனால எங்களுக்கு ஒரு கிலோ பார்சல் அனுப்பிடுங்க.
ReplyDeleteஅனுப்பி விட்டேனே ...சகோ வந்து சேர்ந்ததா...?
Deleteநன்றி சகோ
இதெல்லாம் நம்மால ஆகாத காரியம்!
ReplyDeleteஓட்டல்ல போய் ப்சப்ஜியா வாங்கிர வேண்டியதுதான்!
தம 7
ஓட்டல்ல போய் ப்சப்ஜியா வாங்கிர வேண்டியதுதான்!
Deleteசூப்பர் ஐயா
ஆஹா அருமை .இதை பிட்ஸா செய்யும்போதும் சேர்க்கலாமா ?
ReplyDeleteஆஹா அருமை .இதை பிட்ஸா செய்யும்போதும் சேர்க்கலாமா //
Deleteசீஸ் அல்லவா சேர்ப்பார்கள். இதை நீங்கள் சேர்க்க வேண்டும் என்றால் இதை கொஞ்சம் ரோஸ்ட் செய்து விட்டு பீட்ஸாவில் சேருங்கள்.
ஹை படம் அருமையாக உள்ளது சகோதரி! செய்துள்ளோம்...
ReplyDeleteநன்றி சகோ
Deleteகாலையில் காய்ச்சி வைத்த பாலை இரவு பனீர் செய்யலாமா
ReplyDeleteபனீர் வடிகட்டிய நீரை(Whey Water ) வீணாக்காமல் பிரிட்ஜில் 4 நாட்கள் வரை வைத்திருந்து அடுத்த முறை பனீர் செய்யவும், சப்பாத்தி பிசையும் போது அந்த நீரை ஊற்றி பிசையவும் பயன்படுத்தலாம.
ReplyDeleteபனீர் வடிகட்டிய நீரை(Whey Water ) வீணாக்காமல் பிரிட்ஜில் 4 நாட்கள் வரை வைத்திருந்து அடுத்த முறை பனீர் செய்யவும், சப்பாத்தி பிசையும் போது அந்த நீரை ஊற்றி பிசையவும் பயன்படுத்தலாம்.
ReplyDeleteஇங்கு பனீர் சற்று விலை அதிகம். ஒரு தடவை வாங்கி வருவதை நான் ஒரே ஆளாகத் தொடர்ந்து சாப்பிட்டு முடிக்க இயலவில்லை. குறிப்புத் தேடிக்கொண்டிருந்தேன். மிக்க நன்றி.
ReplyDelete