உங்கள் எல்லோரையும் பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன...நண்பர்களே....
மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு....
அரைத்துக் கொள்ள வேண்டியது
தேங்காய் - 15 சில் (தேவைக்கு ஏற்ப)
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 5
இஞ்சி - 1/2 துண்டு
சோம்பு - 1 தே.க
பொட்டுக்கடலை - 2 மே.க
புளி - சிறிது
தேவையான பொருட்கள்
கேரட் - 1 சிறியது
பீட்ரூட் - 1 சிறியது
உ.கிழங்கு - 1 சிறியது
காலி ப்ஃளவர் - சிறிது
பட்டாணி - 1 கை
வெங்காயம் - 1
தக்காளி - 1
தனி மிளகாய் தூள் - 1/2 தே.க
தாளிக்க வேண்டியது
எண்ணெய் - 2 மே.க
பிருஞ்சி இலை - 1/2
கிராம்பு - 1
ஏலம் - 1
தாளிக்கவும்.
வெங்காயம் சேர்த்து வதக்கவும்
தக்காளி சேர்த்து வதக்கவும்
.
பட்டாணி & காளிஃப்ளவர் சேர்த்து வதக்கவும்.
கேரட், உ.கிழங்கு,பீட்ரூட்டை தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து பதமாக வேக வைத்துக் கொள்ளவும்.
அரைத்ததை ஊற்றி மிளகாய்ப் பொடி சேர்க்கவும்.
மசாலா பச்சை வாசம் போக கிளறவும்.
வேகவைத்த காய்களை சேர்க்கவும்.
மிக்ஸி கழுவிய நீரை சேர்க்கவும். உப்பு போடவும்.
சேர்ந்து காய் சரவும்...இறக்கவும்.
சப்பாத்தி, அடைக்கு சூப்பருங்க....!!!
மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு....
அரைத்துக் கொள்ள வேண்டியது
தேங்காய் - 15 சில் (தேவைக்கு ஏற்ப)
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 5
இஞ்சி - 1/2 துண்டு
சோம்பு - 1 தே.க
பொட்டுக்கடலை - 2 மே.க
புளி - சிறிது
தேவையான பொருட்கள்
கேரட் - 1 சிறியது
பீட்ரூட் - 1 சிறியது
உ.கிழங்கு - 1 சிறியது
காலி ப்ஃளவர் - சிறிது
பட்டாணி - 1 கை
வெங்காயம் - 1
தக்காளி - 1
தனி மிளகாய் தூள் - 1/2 தே.க
தாளிக்க வேண்டியது
எண்ணெய் - 2 மே.க
பிருஞ்சி இலை - 1/2
கிராம்பு - 1
ஏலம் - 1
தாளிக்கவும்.
வெங்காயம் சேர்த்து வதக்கவும்
தக்காளி சேர்த்து வதக்கவும்
.
பட்டாணி & காளிஃப்ளவர் சேர்த்து வதக்கவும்.
கேரட், உ.கிழங்கு,பீட்ரூட்டை தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து பதமாக வேக வைத்துக் கொள்ளவும்.
அரைத்ததை ஊற்றி மிளகாய்ப் பொடி சேர்க்கவும்.
மசாலா பச்சை வாசம் போக கிளறவும்.
வேகவைத்த காய்களை சேர்க்கவும்.
மிக்ஸி கழுவிய நீரை சேர்க்கவும். உப்பு போடவும்.
சேர்ந்து காய் சரவும்...இறக்கவும்.
சப்பாத்தி, அடைக்கு சூப்பருங்க....!!!
கலர்புல்லா இருக்குப்பா ..இதுவரை பீட்ரூட் குருமாவில் சேர்த்ததில்லை ..இம்முறையில் செய்றேன் .நன்றி ரெசிப்பிக்கு
ReplyDeleteநன்றிப்பா. பீட்ரூட் சேர்த்துபாருங்கள் நன்றாக இருக்கும் உடம்புக்கும் நல்லது.
Deleteதெளிவான புகைப்படங்க்கள்
ReplyDeleteதெளிவான விளக்கங்கள்
அருமையான அவசியமான பதார்த்தங்கள்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்
நன்றி ஐயா.
Deleteபொங்கல் தின வாழ்த்துக்கள்
அப்பா..டா. வந்தாச்சா.
ReplyDeleteபார்க்கவே நன்றாக இருக்கு. அருமையான குறிப்பு. நன்றி உமையாள்.
ஆமாம்...வந்தாச்சு... நன்றி சகோ
Deleteஆமாம்.. உங்களுடைய பதிவுகளைக் கண்டதும் தான் எனக்கும் மகிழ்ச்சி..
ReplyDeleteகாலையில் எனது பதிவுக்குத் தாங்கள் வந்ததுமே உற்சாகம் ஆனது மனது..
வாழ்க நலம்!...
ஆமாம் எனக்கும் மகிழ்ச்சி.நன்றி ஐயா
DeleteSuper ah irukkunga...naan try pannen...thank you for the useful post
ReplyDeleteஅப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா... சாப்பிடனும்போல இருக்கு.
ReplyDeleteஅப்படியா...வாங்க எங்க நாட்டுக்கு.....நன்றி சகோ
Deleteநம் இனிய தி கிரேட் தேவகோட்டை நலமா ? வீட்டில் அனைவரும் நலமா ?
ReplyDeleteஆஹா வரும்போதே.... தேவகோட்டையிலிருந்து //வெஜிடபிள் குருமா// கொண்டு வந்து தந்ததமைக்கு நன்றி
சுவையாக இருந்ததால் தமிழ் மணவாக்கு 1
நம் இனிய தி கிரேட் தேவகோட்டை நலமா ? வீட்டில் அனைவரும் நலமா ?//
Deleteதேவகோட்டை நலம். நல்ல மழை...நல்ல குளிர்....
காலைல....என்னமா இருக்கு பனி. நிறைய மாற்றம் தான்.
கார் கண்ணாடியில அதிகாலைல பனி சும்மா அடிக்குது. ரோடே தெரியவில்லை.
நன்றி சகோ
o! yuuuuuuuuummmmmmmy............
ReplyDeleteநன்றி சகோ
Deleteகாலிஃபளவர் குருமா செய்முறை அருமை. செஞ்சு பாத்திட வேண்டியதுதான். த.ம.3
ReplyDeleteவாருங்கள் சகோ தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteஆகா... ஆகா... சுவைத்தது போல ஒரு உணர்வு... செய்து வையுங்கள் பொங்கல் அன்று விருகிறோம்...விருந்தினராக..பகிர்வுக்கு நன்றி
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள். த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாருங்கள் சகோ
Deleteஇனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் நன்ரி
ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteவரும்போதே கலர் புலள்ளான சாப்பாடு ம்.ம்..ம் லுக் சொ யம்மி. நன்றி !
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்...!
நன்றி சகோ. ஆம் எனக்கும் மிக்க மகிழ்ச்சி. இனிய பொங்கல் நல்வாத்துக்கள்
Deleteகுருமா மணக்குது! இங்கள் இந்த இடுகையையும் பார்த்துவிட்டோம். எங்கள் தளத்தில் காட்வில்லை....
ReplyDeleteஇனி தொடர்கின்றோம்..
இதையும் பார்த்து கருத்திட்டமைக்கு நன்றி சகோஸ்
Deleteயப்பா...!
ReplyDeleteசெய்து பார்க்கிறோம்...
பீட்ரூட்டை குருமாவில் சேர்த்தால்,குருமா கொஞ்சம் இனிக்காதா?
ReplyDeleteடேஸ்ட் நன்றாக இருக்கும். கேரட் சாம்பார் எல்லாம் செய்கிறோம் இல்லையா...அதே போல் தான் இதுவும். நன்றி சகோ
Deleteபீட்ரூட்டினால் சிவப்பு கலர் அதிகமாகத் தெரிகிறது. அதனாலேயே அதைக் குருமா என்று ஏற்றுக் கொள்ள மறுக்கிறது பாழும் மனம்! ஆனால் சாப்பிட்டுப் பார்த்தால் தெரியும் சேதி என்று சொல்கிறது மனசாட்சி!
ReplyDeleteபீட்ரூட்டினால் சிவப்பு கலர் அதிகமாகத் தெரிகிறது //
Deleteஆம் அதன் கலர் கலந்து விடும் தானே.
அதனாலேயே அதைக் குருமா என்று ஏற்றுக் கொள்ள மறுக்கிறது பாழும் மனம்! ஆனால் சாப்பிட்டுப் பார்த்தால் தெரியும் சேதி என்று சொல்கிறது மனசாட்சி!
வெள்ளையாகவே பார்த்த குருமாவின் நிறத்தால் தங்கள் மனம் ஓப்புக்கொள்ள மறுக்கிறது. எங்கள் இல்லத்தில் இப்படி செய்வதால் எங்களுக்கு அப்படி தோன்றவில்லை என நினைக்கிறேன்.
சாப்பிட்டுப்பார்த்தால் தெரியும் தான் செய்தி.
நீங்கள் நன்றாக சமைப்பீர்கள் என நினைக்கிறேன். முயன்று பாருங்கள்.சகோ
//நீங்கள் நன்றாக சமைப்பீர்கள் என நினைக்கிறேன்.//
Deleteஎதை வைத்துச் சொல்கிறீர்கள்? :)))
எனக்கு ஏனோ..... அவ்வாறு தோன்றியது.... சரியா...தவறா...?
Deleteஓரளவு சரிதான்.
Deleteசமைப்பேன். நன்றாகவா இல்லையா என்பதை, அதைச் சாப்பிடுபவர்கள் அல்லவா சொல்ல வேண்டும்?
:))))))))
பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஉமையாள்,
ReplyDeleteபீட்ரூட் ரொம்பவே பிடிக்கும். புது கிழங்குகள் அன்று பிடுங்கிய செடியுடனே கிடைக்கும். அதன் நிறத்தினால் எதனுடனும் சேர்த்து சமைக்கமாட்டேன். ஆனால் உங்கள் குருமாவின் நிறத்தைப் பார்க்க, சேர்த்து விடலாமோ எனத் தோன்றுகிறது.
செய்து விடுங்கள் சித்ரா...ஒரு கை பார்த்து விட வேண்டியது தான் என்ன நான் சொல்வது ஹஹஹஹா....
Delete