தேவையான பொருட்கள்
பாசிப்பயறு - 1/2 கோப்பை
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 5 பல்
கருவேப்பிலை - சிறிது
சாம்பார் பொடி - 1/2 தே.க
உப்பு - சிறிது
புளி - சிறிய எலுமிச்சை
தாளிக்க வேண்டியது
எண்ணெய் - 1 மே.க
கடுகு - 1/4 தே.க
சீரகம் - 1/ 2 தே.க
பெருங்காயம்- சிறிது
பாசிப்பயறை வறுக்கவும். பின் தண்ணீர் விட்டு குழையாமல்வேகவைத்துக்
கொள்ளவும்
தாளிக்கவும்
வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
கருவேப்பிலை சேர்க்கவும்
தக்காளி சேர்க்கவும்.
வேக வைத்த பாசிப்பயறை சேர்க்கவும்
புளியை ஊற்றி சாம்பார் பொடியை சேர்க்கவும். உப்பு போடவும்.நன்கு கொதித்து பச்சை வாசம் போன பின்
பூண்டை தட்டிப்போட்டு 2 கொதி விட்டு இறக்கவும்.
சாதத்திற்கு ஊற்றி சாப்பிடவும்
ஆஹா அதற்குள் இதுவும் ரெடியா ம்..ம்.. நான் இதை நேற்று செய்தேன் ஆனால் புளி விடவில்லை. சரி புளியை சேர்த்து பார்க்கிறேன். நன்றிம்மா .....
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள் ...!
புளி சேர்த்து செய்து பாருங்கள் சகோ
Deleteஇரண்டு நாள் சுய சமையல்
ReplyDeleteதங்கள் பதிவுகள் அதிகம் பயன்படுகிறது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இரண்டு நாள் சுய சமையல்
Deleteதங்கள் பதிவுகள் அதிகம் பயன்படுகிறது //
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா. நன்றி
tha.ma 1
ReplyDeleteநன்றி ஐயா
Deleteகுழம்பு குழம்பாம நல்லாயிருக்கு. ஆமா..!எந்த காமிரா பயன்படுத்துவீங்க.. போட்டோ தெளிவா அழகா இருக்கு.
ReplyDeleteகுழம்பு குழம்பாம நல்லா இருக்கா....ஹஹஹா...நன்றி
DeleteCANON REBEL T3 இந்த காமிரா தான் பயன் படுத்துகிறேன் சகோ.
சகோதரி! வணக்கம் பல நாட்கள் ஆகிவிட்டன தங்கள் வலைப்பூ கண்டு. இல்லை எங்கள் வலைத்தளத்தில் தங்கள் இடுகைகள் காட்டவில்லையா தெரியவில்லை...பார்க்கின்றோம்.
ReplyDeleteஇந்தக் குழம்பை பாசிப்பருப்பு சாம்பார் என்போம். இந்தக் குறிப்பும் செய்வதுண்டு. இதில் இன்னும் பல காய்கள் சேர்த்தும் செய்வதுண்டு... நல்ல ரிசிப்பி. பகிர்வுக்கு மிக்க நன்றி!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!
சகோதரி! வணக்கம் பல நாட்கள் ஆகிவிட்டன தங்கள் வலைப்பூ கண்டு. இல்லை எங்கள் வலைத்தளத்தில் தங்கள் இடுகைகள் காட்டவில்லையா தெரியவில்லை...பார்க்கின்றோம். //
Deleteஆம் நிறைய நாட்கள் ஆகிவிட்டன உங்கள் அனைவரையும் கண்டு. சில சமயங்களில் சிலருடைய வலைத்தளங்கள் அப்படித்தான் காட்ட மறுக்கின்றன . கொஞ்ச நாட்கள் ஆன பின் தானே காட்டுகிறது.
நாங்கள் பாசிப்பயறை மட்டும் பயன் படுத்தி வைப்போம்.
தங்களுக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் சகோஸ். நன்றி
வீட்டில் எல்லோரும் சுகமா? நலமா? பயணம் நன்றாக அமைந்ததா?!
ReplyDeleteஅனைவரும் நலம் மற்றும் சுகம் தான்.
Deleteபயணம் நன்றாக இருந்தது . நாட்கள் ஓடியதே தெரியாமல் நிமிடத்தில் ஓடி விட்டது.
அழகான படங்களுடன் விளக்கம்... நன்றி...
ReplyDeleteநன்றி சகோ
Deleteபாசிப்பயற்றில் குழம்பு கேள்விப்படாதது. வாசனை இங்கு வரை வருகிறது.நன்றிகள்.
ReplyDeleteஇனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்.
பாசிப்பயற்றில் குழம்பு கேள்விப்படாதது. வாசனை இங்கு வரை வருகிறது.நன்றிகள்.//
Deleteஅப்படியா சகோ....பயற்றை வறுத்து செய்வதால் வாசம் பிரமாதமாக வரும். ஆஹா...விசா எல்லாம் எடுக்காம வாசம் உங்களை நோக்கி வந்து விட்டதா...ஹஹஹா...!!! நன்றி பொங்கல் வாழ்த்துக்கள் சகோ
நிறம் கவர்கிறது. செய்து பார்த்துடுவோம்.
ReplyDeleteநீங்கள் அருமையாக செய்வீர்கள் என நினைக்கிறேன். செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள். சகோ
Deleteசுவையான குழம்புதான்! இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களுக்கும் இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்! சகோ நன்றி
Deleteகேள்விப்படாதது போல் இருக்கிறது பொங்கல் நல்வாழ்த்துகள்
ReplyDeleteதமிழ் மணம் 4
அப்படியா சகோ ஆச்சரியமாக இருக்கிறது...தங்களுக்கு தெரியவில்லை என்பது. அப்படின்னா ஒரு தடவை ஊருக்கு போகும் போது செய்யச் சொல்லி சாப்பிட்டு விடுங்கள். நன்றி தங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
Deleteஎனக்கு ரொம்பப் பிடிக்கும்.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
தங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோ நன்றி
Deleteவணக்கம் சகோதரி!
ReplyDeleteநலமா? சமையல் குறிப்பு பயனுள்ளதாக, இருந்தது. மிகுந்த சுவை தரும் என நினைக்கிறேன்.பகிர்ந்தமைக்கு நன்றி.!
தங்களுக்கும், தங்கள் உற்றார், உறவினருக்கும், என் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்….
நட்புடன்,
கமலா ஹரிஹரன்.
நலமா? சமையல் குறிப்பு பயனுள்ளதாக, இருந்தது. மிகுந்த சுவை தரும் என நினைக்கிறேன் //
Deleteநலம் சகோதரி. சுவையாக இருக்குமென நீங்கள் நினைப்பது சரியே.
தங்களுக்கும் இனிய பொங்கல் நல் வாத்துக்கள். நன்றி
தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
ReplyDeleteகைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
பாடலாக தை வாழ்த்து நன்றி சகோ
Deleteதங்களுக்கும் இனிய பொங்கல் நல் வாத்துக்கள்.
உமையாள்,
ReplyDeleteகுழம்பின் பெயர் வித்தியாசமா இருக்கு. ஒரு நாளைக்கு செய்திட வேண்டியதுதான்.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
தங்களுக்கும் இனிய பொங்கல் நல் வாத்துக்கள். நன்றி
Deleteஇந்த குழம்பு நார்மலாக நாம் வைப்பதை விட இளசாகவும் சற்று நீர்த்தும் இருக்கும். வயிற்றுக்கு ஒன்றும் செய்யாது. பாசிப்பயறு இரத்தவிருத்தி. ஒரு நாள் காய்க்கு பதிலாக இதை செய்து உண்ணலாம். ஆரோக்கியம் மற்றும் சுலபமானதும் கூட. முயன்று பாருங்கள் சகோ
மனைவி இதனை பிரிண்ட் அவுட் எடுத்துத் தர சொல்லியிருக்கிறார். அதனால் சீக்கிரம் இந்த குழம்பு எங்கள் வீட்டில் மணக்கும் என்று நம்புகிறேன்.
ReplyDeleteதங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
மனைவி இதனை பிரிண்ட் அவுட் எடுத்துத் தர சொல்லியிருக்கிறார். அதனால் சீக்கிரம் இந்த குழம்பு எங்கள் வீட்டில் மணக்கும் என்று நம்புகிறேன். //
Deleteஆஹா..பேஷ் பேஷ்...மணக்கட்டும்.
தங்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். சகோ