கோதுமை பரோட்டா...!!!
புல்கா ரொட்டி / சுக்கா சப்பாத்தி
Aalu Paratha...!!!
இவை அனைத்துக்கும் கூட இதை தொட்டுக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
1லிட்டர் பாலில் தயாரித்த பன்னீர்
பட்டாணி - 2 கோப்பை
வெங்காயம் - 1
தக்காளி பெரியது - 2
எண்ணெய் - 2 மே.க
சோம்பு - 3/4 தே.க
மிளகாய் தூள் - 2 தே.க
மல்லித்தூள் - 11/2 தே.க
கரம் மசாலா - 1/2 தே.க
சீரகத்தூள் - 1/2 தே.க
உப்பு - தே.அ
தேங்காய் பால் - 1 கோப்பை
வெல்லம் - சிறிது
தக்காளியை தண்ணீரில் கொதிக்க வைத்து விட்டு தோலை எடுத்துவிடவும்.
பின் மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்
தாளிக்கவும்
.
வெங்காயத்தை வதக்கவும்.
பட்டாணியை வதக்கவும்.
பொடிகளை சேர்க்கவும்
நன்கு கிளறவும்
தக்காளி சாற்றை ஊற்றவும்.
மிதமான தீயில்
பன்னீரை தோசைக் கல்லில்
சிறிது நெய் சேர்த்து திருப்பி விட்டு வேகவிட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அதிகம் வேக விட்டால் கடினத்தன்மை ஆகிவிடும்.
பார்த்துக் கொள்ளுங்கள்
தக்காளிச் சாறு நன்கு கொதித்த பின் பன்னீரை சேர்த்து கொதிக்க விடவும்
கடசியாக தேங்காய் பால் சேர்த்து 2 கொதி வரவும் வெல்லம் சேர்த்து இறக்கவும்
மைல்டான.... வாசமுடன் பன்னீர் & பட்டாணி கிரேவி தயார்...!!!
பன்னீர் கடைகளில் கிடைக்கிறது. அதன் தயாரிப்பு முறையை பின் வரும் பதிவுகளில் இடுகிறேன்.
Enjoy...Enjoy...Enjoy...!!!
படங்களுடன் சிறந்த வழிகாட்டல்
ReplyDeleteசுவையான பகிர்வு
தொடருங்கள்
வாருங்கள் ஐயா...நிறைய நாட்கள் ஆகிவிட்டன கண்டு. நன்றி
Deleteவீட்டில் தயாரித்த பன்னீரா ! அப்போ சுவையைக் கேட்கவே வேண்டாம்.
ReplyDelete"அச்சச்சோ அப்படியெல்லாம் இல்லீங்கோ, நல்லா இருக்கும்னு சொல்ல வந்தேன்" :)
முன்பெல்லாம் பன்னீர் வாங்குவேன், பிறகு 'டோஃபு'வுக்கு மாறினேன். இப்போ அதுவுமில்லை. படத்தைப் பார்க்கும்போது ஆஹா ...... கடைக்குப் போனால் பன்னீருடன் வருகிறேன்.
வீட்டில் தயாரித்த பன்னீரா ! அப்போ சுவையைக் கேட்கவே வேண்டாம்.
Delete"அச்சச்சோ அப்படியெல்லாம் இல்லீங்கோ, நல்லா இருக்கும்னு சொல்ல வந்தேன்" :) //
அதான் நீங்க சொல்ல வந்தீங்கன்னு தெரியும் சித்ரா...வாங்கி வாருங்கள்
வணக்கம்
ReplyDeleteசெய்முறை விளக்கம் நன்று செய்து பார்க்கிறோம்... பகிர்வுக்கு நன்றி த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
Deleteபன்னீரை வெட்டி வைத்திருக்கும் அழகே தனிதான். கிரேவி சூப்பர்.
ReplyDeleteபன்னீரை வெட்டும் போது மீன் மாதிரி இருந்ததா...சரி என பாதியோடு புகைப்படம் எடுத்தாச்சு...நன்றி விச்சு
Deleteபன்னீர் தயாரிப்பு முறையையும் அறிய ஆவலுடன்...
ReplyDeleteவெகு விரைவில் ....
Deleteமிகவும் பிடித்தவற்றுள் இதுவும் ஒன்று!..
ReplyDeleteஅப்படின்னா...உடனே செய்து உண்டு மகிழுங்கள்....
Deleteசெய்வதுண்டு....தேங்காய்பால் சேர்த்து செய்வது எப்போதாவது. உங்கள் ரிசிப்பி நாக்கில் நீர் வரவழைக்கின்றது. இப்போது பட்டாணி கிடைப்பதால் வாங்கி வைத்துள்ளேன்...இதைப் பார்த்ததும் செய்துவிடலாம் என்றிருக்கின்றேன்....முன்பு அடிக்கடி நீங்கள் பதிவு இடும் ரிசிப்பிகள் போன்றுதான் செய்து கொண்டிருப்பேன். இப்போது மகன் இங்கு இல்லை, வீட்டில் எல்லோரும் வயதானவர்கள், என்னையும் சேர்த்துத்தான் (மனதிற்கல்ல..என் வயது) ஹஹஹ்ஹஹ அதனால் இது போன்றவை செய்வது வெகுவாகக் குறைந்துவிட்டது. விருந்தினர் யாராவது வந்தால்தான். உங்கள் பதிவுகள் மீண்டும் என்னைச் செய்யச் தூண்டுகின்றன. ஸோ நீங்கள் இப்படி வெளியிட்டு என்னைத் தூண்டி உற்சாகப்படுத்துகின்றீர்கள் என்று சொன்னால் மிகையாகாது. உண்மையே!
ReplyDeleteஇன்று இரவு சப்பாத்தி அண்ட் இந்தக் க்ரேவிதான்...சகோதரி!!! இப்படி அப்பப்போ போட்டுக்கிட்டே இருங்க....என் பழைய ஆர்வம் மீண்டும் துளிர்க்கும்...
மிக்க மிக்க நன்றி சகோதரி!
-----கீதா
முன்பு அடிக்கடி நீங்கள் பதிவு இடும் ரிசிப்பிகள் போன்றுதான் செய்து கொண்டிருப்பேன்//
Deleteநன்றி கீதா
(மனதிற்கல்ல..என் வயது) //
உங்கள் உற்சாகம் பார்த்தாலே தெரிகிறதே சகோ...
உங்கள் பதிவுகள் மீண்டும் என்னைச் செய்யச் தூண்டுகின்றன. ஸோ நீங்கள் இப்படி வெளியிட்டு என்னைத் தூண்டி உற்சாகப்படுத்துகின்றீர்கள் என்று சொன்னால் மிகையாகாது. உண்மையே!
பிறரை உற்சாகப்படுத்துகிறது என்றால் ....சந்தோஷமாக இருக்கிறது கேட்க சகோ
இன்று இரவு சப்பாத்தி அண்ட் இந்தக் க்ரேவிதான்...சகோதரி!!! இப்படி அப்பப்போ போட்டுக்கிட்டே இருங்க....என் பழைய ஆர்வம் மீண்டும் துளிர்க்கும்...
பணி தொடர்ந்து கொண்டே இருக்கும்....இறைவன் விருப்புகிற வரை. உங்கள் ஆர்வம் தொடரட்டும்...அது என்னையும் மிகவும்உற்சாகம் கொள்ள வைக்கிறது. செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள் சகோ மிக்க மிக்க நன்றி
நானும் பார்த்துக்கொண்டே தான் வருகிறேன். நீங்கள் எனக்கு இருக்கிற கொலெஸ்ட்ராலை இன்னும் அதிகப்படுத்தாமல் விட மாட்டீர்கள் போல,..
ReplyDeleteசகோ நன்றாக சாப்பிட வேண்டும்.....பின் நன்றாக நடக்க வேண்டும் அவ்வளவுது தான்.
Deleteபொதுவாக என்னுடைய சமையலில் அதிகம் எண்ணெய்....கொழுப்பு என இருக்காது. ஆரோக்கியமாகத் தான் இருக்கும். நண்பர்கள்( என் + கணவர்) அனைவரும் சொல்வார்கள்....அதிக எண்ணெய் இல்லாமல் ருசியாக இருக்கிறது என்று.
எப்போதாவது தான் நாம் தேங்காய் பால் சேர்க்கிறோம். முந்திரி கூட நான் சேர்க்கவில்லை. முந்திரி சேர்த்தால் ரிச்சாக இருக்கும். அதுவும் கெவியாகி விடும். இது இளசாக இருக்கும். பயப்படாமல் சாப்பிடவும்.
நீங்கள் எனக்கு இருக்கிற கொலெஸ்ட்ராலை இன்னும் அதிகப்படுத்தாமல் விட மாட்டீர்கள் போல,..//
.
நல்ல (Good) கொலஸ்ட்ரால் தான் பொருகும் சகோ
சீக்கிரம் பன்னீர் குறிப்பு கொடுங்க உமையாள். பார்க்க உடனே செய்யனும்போல இருக்கு. படங்கள் சூப்பர்.
ReplyDeleteசீக்கிரம் பன்னீர் குறிப்பு கொடுங்க உமையாள். பார்க்க உடனே செய்யனும்போல இருக்கு//
Deleteஉங்கள் ஆர்வத்திற்கு..வெகு விரைவில்...ம்
அட்டகாசமான சமையல் குறிப்பு. நானும் முயற்சித்துப் பார்க்கிறேன். பனீர் இங்கே (ஒடிஸா) தாராளமாக கிடைக்கிறது. நம்மூர்ல கிடைக்குதா தெரியலை. த.ம.+
ReplyDeleteமுயற்சியுங்கள். நம்மூரிலும் நன்றாக கிடைக்கிறது....சகோ
Deleteஸூப்பர் கிரேவி அட்டகாசமாக இருகிறது புகைப்படங்கள்
ReplyDeleteதமிழ் மணம் 4
நன்றி சகோ
Deleteஅருமையா இருக்கு.
ReplyDeleteநன்றி ஶ்ரீராம்.
Deleteபடங்களுடன் விளக்கமும் அருமை ! வாழ்த்துக்கள் தோழி மேலும்
ReplyDeleteஇது போன்ற ஆக்கங்கள் தொடரட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .த .ம .7
நன்றி சகோ
Deleteசெய்முறை விளக்கம் அருமை!
ReplyDeleteநன்றி ஐயா
Delete