தேவையான பொருட்கள்.
பால்கட்டி - 1 லி பாலில் தயாரித்தது (பனீர்)
வெங்காயம் - 1
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தே.அ
கருவேப்பிலை
வே வாட்டர் - 1 கோப்பை ( வே ( whey) வாட்டர் இருந்தால் சேர்த்துக் கொள்ளுங்கள் இல்லை என்றால் தண்ணீர் சேர்த்து விடுங்கள்)
அரைக்க வேண்டியது
தக்காளி - 2 நடு அளவில்
வர மிளகாய் - 8
சீரகம் - 1/2 தே.க
க.பருப்பு - 1 தே.க
மல்லி - 1 1/2தே.க
தேங்காய் - 1/4 மூடி
முந்திரி - 5 ( கூடுதலாக வைத்துக் கொண்டால் இன்னும் சூப்பராக இருக்கும்)
மிளகாய், மல்லி,க.பருப்பு,சீரகம் இவற்றை வெறும் கடாயில் வறுத்துக் கொண்டு மற்றவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
தாளிக்க வேண்டியது
எண்ணெய் - 2 மே.க
கடுகு - 1/2 தே.க
பெருங்காயம் - சிறிது
தாளிக்கவும்
வெங்காயம் , கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அரைத்ததை ஊற்றவும். பச்சை வாசம் போகும் அளவு வதக்கவும்.
புளிக்கரைசலை விடவும்
புளிவாசம் போனபின் வே வாட்டரை ஊற்றவும்.
நன்கு கொதி வரவும் துண்டுகளான பால்கட்டியை (பனீரை) போடவும். பால்கட்டி 10 நிமிடங்களில் வெந்து விடும்.
சுவையான செட்டி நாட்டு பால்கட்டி குழம்பு சுவைக்க தயாரான நிலையில் உங்கள் முன்...!!!
ஹை நல்லாருக்கே! சூப்பர். செஞ்சுட்டா போச்சு! நிச்சயமா ஏன்னா கட்டி ரொம்ப பிடிக்கும்....
ReplyDeleteஏன்னா கட்டி ரொம்ப பிடிக்கும்...//
Deleteஅப்படின்னா...விரைவில் செய்து விடுவீர்கள் என நினைக்கிறேன்
வணக்கம்
ReplyDeleteஇலகுவான செய்முறை விளக்கம் பகிர்வுக்கு நன்றி த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி சகோ
DeleteCHITTI KALAKEETINGA !!! WAY TO GO..
ReplyDeleteநன்றி
Deleteஇதெல்லாம் புதுசு... இருந்தாலும் செய்து பார்க்கிறோம்...
ReplyDeleteஇதெல்லாம் புதுசு...//
Deleteபுதுசு.... செய்து பாருங்கள் சகோ
பனீர் குழம்பு.... இது வரை கேள்விப்பட்டதில்லை. செய்து பார்க்க வேண்டும்.
ReplyDeleteபனீர் குழம்பு.... இது வரை கேள்விப்பட்டதில்லை. செய்து பார்க்க வேண்டும்.//
Deleteமுயற்சியுங்கள் சகோ
மிகவும் பிடித்தது - இந்த பனீர் குழம்பு!..
ReplyDeleteபனீர் குழம்பு செய்வதற்கு மிகவும் எளிது. இங்கே - உறைநிலையில் பனீர் (Amul - India) கிடைப்பதால் அடிக்கடி செய்வேன். பதிவினுக்கு மகிழ்ச்சி. வாழ்க நலம்..
மிகவும் பிடித்தது - இந்த பனீர் குழம்பு!//
Deleteஆஹா. இந்நேரம்...அக்குழம்பு தயாராகி இருக்கும் என நினைக்கிறேன்.
வித்தியாசமான அரைத்துவைச்ச பால்கட்டி குழம்பு.!! செய்துபார்க்கிறேன் உமையாள்.நன்றி
ReplyDeleteவித்தியாசமான அரைத்துவைச்ச பால்கட்டி குழம்பு.!! செய்துபார்க்கிறேன்//
Deleteருசித்து விட்டு சொல்லுங்கள் சகோ
பன்னீர் கிரேவி கேள்விப்பட்டதுண்டு. ஆனால் இது புதுசு.
ReplyDeleteவீட்டில் செய்யச் சொல்லிவிட வேண்டியது தான்.
கல்யாணங்களில் அடிக்கடி இடம் பெறும் சகோ
Deleteஎளிய செயல்முறை விளக்கம். ஆனால் அது கூட நம்மால் முடியாதுப்பா. அத செய்து கொடுத்தா சாப்பிடும் கூட்டம் நான். வாழ்த்துகள்.
ReplyDeleteஎளிய செயல்முறை விளக்கம். ஆனால் அது கூட நம்மால் முடியாதுப்பா. அத செய்து கொடுத்தா சாப்பிடும் கூட்டம் நான். வாழ்த்துகள்.
ReplyDeleteசெய்து கொடுத்தா சாப்பிடும் கூட்டம் நான். வாழ்த்துகள்.//
Deleteஹஹஹஹா.....!!!
வாருங்கள்...தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மகேஷ்வரி.
ஆஹா,,, ஆஹா,,, ஃபோட்டோவைப் பார்க்கும்போது.... வயித்தெரிச்சலாக இருக்கே....
ReplyDeleteதமிழ் மணம் 3
ஆஹா,,, ஆஹா,,, ஃபோட்டோவைப் பார்க்கும்போது.... வயித்தெரிச்சலாக இருக்கே..//
Deleteகூலாக ஒரு ஆரஞ்சு ஜீஸ் குடிங்க சகோ...
செய்து பார்க்க ஆவல் பெருகுகிறது. குறித்துக் கொண்டுள்ளேன்.
ReplyDeleteஅப்படி சொல்லுங்க.....செய்து மகிழ்ந்ததை சொல்லுங்கள் சகோ
Delete