Thursday, 15 January 2015

மறவேன் நானடா உன்னை

அனைவருக்கும் தை திருநாள் வாழ்த்துக்கள்....!!!
இன்று போல் என்றும் பால் போல் வளங்கள் பொங்கி....உலகம் உய்க்க இறைவனை பிரார்த்திப்போம்.  


பால் பொங்கிடுச்சா...?

எங்கள் இல்லத்திலும் பொங்கிடுச்சு..




மண்ணைத்  தின்றமாதவா  ஏன்?மனதை  திங்கின்றாயோ
மண்ணுலகில்  நீவுலாவந்தது  ஏனோ?யான்  அறிகிலேனே?
மறைந்திருந்  தென்னைநோக்  கவோபரந்  தாமனே
மறைதலில்  மறந்துணர்ந்தும  யங்கினேன்  மாதவாயான்
மறைபொருள்  யாதெனவுறைப்  பாயாநீ  சொல்லடா
மறைந்தா  டும்கண்ணாமூச்  சியாட்டத்தை  நிறுத்தாயோ?
மறக்கச்செய்  தென்னைவின  வவிடாதுசெய்  தல்முறையா
மறவேன்  நானடா உன்னை






படம் கூகுள் நன்றி



22 comments:

  1. மாதவனை மறக்க முடியுமோ!
    அருமையான கவிதை.

    ReplyDelete
  2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ஐயா. நன்றி

      Delete
  4. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோ நன்றி

      Delete
  5. மாதவனின் கவிதை அருமை
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  6. பால் போல பல்வளங்களும் பொங்கிட பொங்கலோ பொங்கல்!..

    கன்னல் தமிழ் கொஞ்சும் அழகிய கவிதை..
    அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா. நன்றி

      Delete
  7. அன்பான பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
    மறவேன் நானடா உன்னை.. அருமை.

    ReplyDelete
  8. அருமையான கவிதையுடன் பொங்கல் வாழ்த்து.
    உங்களுக்கும்,உங்க குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வணக்கம்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.....பகிர்வுக்கு நன்றி த.ம5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. அற்புதமான கவிதை
    மிகவும் இரசித்துப் படித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. திரு வெங்கட் நாகராஜ் அவர்கள் வலைப்பதிவில் நீங்கள் இட்ட பின்னூட்டத்தைக் கவனித்தேன்.

    கோலங்கள் காண, திருவரங்கப் பெருமாளே தாயாருடன் வருவதை இங்கே பார்க்கலாம்.
    https://www.youtube.com/watch?v=zyBhHISsmKM
    கானொளியில் நீங்கள் கேட்கும் இசை லால்குடி ஜெயராமன் அவர்கள் வயலின் . தில்லானா.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

    சுப்பு தாத்தா.
    மீனாட்சி பாட்டி.

    www.subbuthatha.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  12. வணக்கம் சகோதரி!

    மண்ணைத் தின்று ஜாலம் செய்த மாதவனை பற்றிய பாடல் என் மனதையும் கொள்ளை கொண்டது. மயக்கும் வார்த்தைகளுடன் தொகுத்தளித்த உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    தங்களுக்கும், இனிய பொங்கல், மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

    என் தளம் வந்து வாழ்த்தியமைக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்..

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  13. நல்ல கவிதை.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. பொங்கல் திருநாளில் மாதவனுக்கு வாழ்த்துப்பாவா,அருமை.

    உங்கள் வீட்டில் பால் பொங்கியது கண்டு மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  15. கவிதையுடன் பொங்கல் கொண்டாட்டம். வாழ்க!

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. கவிதை ஆஹா போட வைத்து பொங்கலும் ஆஹா கொண்டாட்டமா!!!!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete