Thursday, 10 April 2014

ஆவி….. பிடித்தல்….!!!




என்னங்க தலைப்பே வித்தியாசமாயில்ல… என்ன செய்கிறது அது அதுக்கு வேளை வந்துடுச்சுன்னா ஒன்னும் செய்ய முடியாது. பயந்திடாதீங்க….! சும்மா ஒரு ரவுண்டு போகலாம்.


என்னடா பீடிகை எல்லாம் பலமா இருக்கேன்னு நினைக்கிறீங்க….. எனக்கு கேட்டுடுச்சு… நாம பார்க்காத ஆவிகளான்னு உங்களுக்கு தோணும்….. ஆமா…இல்லையா பின்ன சினிமா, தொலைக்காட்சி, சிலர் நேர்ல கூட பார்த்து இருப்பீங்க, சமையல் பண்ணும் போது பார்க்காத ஆவிங்களா… ? ஆஹா... தமிழ்ழதான் என்னமா இருக்கு, ஒரு வார்த்தை எப்படி எல்லாம் விளையாடுது. அழகுத் தமிழ் தான்.  சரி சரி…. நீராவிக்குத் தான் இவ்வளவு வீடுகட்டினீங்களாக்கும்….. மனசு நினைக்குது இல்ல… ok ok.

“ சளி பிடித்ததோ சனியன் பிடித்ததோ ” அப்படின்னு பழமொழி சொல்லுவாங்க. அது என்னமா படுத்துது…. இழுத்து இழுத்து மூக்கு போச்சு. இருமி இருமி தொண்டை போச்சு. மூஞ்சி எல்லாம் பூசணிக்காய் மாதிரி சும்மா உப்பலா…. நடுவுல மிளகாய்பழம் மாதிரி மூக்கு, காய்கறி Art மாதிரி ஆகிப்போச்சு.வெள்ளை நிறமா இருக்கிறவர்களுக்கு பொருந்தும். ஆனா நாம சும்மான்னாலும் சொல்லிக்க வேண்டியது தான். கலர்ல என்ன இருக்கு இல்ல...! ஹ...ஹா....! 

மனுசனுக்கு மண்டைக் கணம் வரக் கூடாதுன்னு சொல்லுவாங்க. அது ரெம்ப சரிதானுங்க. கவனிங்க…. இங்கேயும் தமிழ் தாங்க விளையாடுது. நான் இல்லங்க. எனக்கு வந்த நீர் கோர்த்த மண்டையைத் தான் சொல்கிறேன். மற்ற படி எல்லாம் இல்லை அப்பா…! 

மருந்து, மாத்திரை, டானிக், என எல்லாம் எடுத்துக் கொண்டாலும் ஆவி பிடிக்கிறது செய்தேன். 

மருந்துக் கடையில் ஆவி பிடிக்கிற மருந்து தான் மருத்துவர் எழுதிக் கொடுத்தார். கண்களுக்கு போடுகிற டியூப் மருந்து போல பச்சைக் கலரில் இருந்தது. சரி வாங்கியாச்சு. பாத்திரத்தில் தண்ணீர் வைத்து மூடி போட்டு நல்லா சூடாக விட்டேன். நல்லா ஆவி வரும் போது பாத்திரத்தை எடுத்து வந்து கூடத்தில் வைத்தாயிற்று, இரண்டு போர்வை ரெடி. அமர்ந்து போர்வை எல்லாம் போர்த்தி மூடியை எடுத்துவிட்டு மருந்தை கத்தரித்து பிதுக்கி விட்டேன். அம்மாடியோவ்… மருந்தின் நெடி தாளவில்லை. மூக்கு ஏற்கனவே அடைத்து இருக்கு இதுல இப்படின்னா என்ன ஆகுறது.. மூச்சே விடமுடியலையே…. அப்பா சாமி உயிர் பிழைத்தால் போதுமடா… ஆவியாவது கீவியாவது. போர்வையை விலக்க போன உசிர் திரும்ப வந்தது போல் இருந்தது. சரி ஆவியோட வீராப்பு சற்று குறைந்துவிட்டதுன்னு மறுபடி ஆவிபிடித்தேன். ஆனா  effect  ஒன்னும் அவ்வளவா இல்லை.

சரி அப்படின்னு அடுத்த தடவை விக்ஸ் போட்டு பார்த்தேன். நெடி + சற்று நேரத்தில் விக்ஸ் ஆடை போல படர்ந்து ஆவியைக் கண்ட்ரோல் பண்ணிடுச்சு. சரி விட்டேனா பார் அப்படின்னு பாத்திரத்தை அசைத்து அசைத்து ஆவியை வெளியே கொணர்வதுக்குள் போதும்டா சாமின்னு ஆச்சு.

எங்கேயோ படித்த ஞாபகம் வந்தது காப்பிப் பொடி போட்டு ஆவி பிடித்தால்… ok அடுத்த முயற்சி தொடங்கினேன். நீங்கபாடு Nescafe,sunrise அப்படின்னு பாட்டிலை தூக்கிடாதீங்க… டிகாசம் போடுகிற காப்பித்தூள். காப்பியின் லேசான வாசத்துடன் சரி பரவாயில்லை. 

மீண்டும் எங்கேயோ படித்த ஞாபகம் வந்தது. மஞ்சள்தூள் அப்புறம் உப்பு. ஆமா இது இரண்டும் கிருமி நாசினி எனவே இரண்டையும் சேர்த்து போட்டாலாவது நமக்கு உடனே பலன் கிடைக்காதான்னு நினைத்து தண்ணீருடன் போட்டு அடுப்பில் வைத்தேன். இது சரியாக இருந்தது. இதையே தொடர்ந்தேன்.

ஆனாங்க இன்று காலையில வேலை நிறைய இருந்ததால் மஞ்சள் தூள் போடாமல் தண்ணீரைக் கொதிக்க வைத்து விட்டுவிட்டேன். சரி பரவாயில்லை இப்போது போட்டு பிடிக்கலாம் என இறக்கும் முன் போட்டு விட்டு, பின் ஆவி பிடித்தேன். ஆஹா மஞ்சள் வாசனை மூக்கின்னுள் சுகமாய் நூழைந்தது. அதன் வேலையை நன்றாக காட்டியது. சளியார் வெளிநடப்பு செய்ய ஆரம்பித்து இருக்கிறார். முந்திய முறைகளுக்கும் தான். ஆனா…

சரியான பக்குவம் கண்டது போல் இருந்தது. இது என் அனுபவம். ஆவி பிடிக்கும் போது இது பற்றி எழுத வேண்டும் என தோன்ற…. இதோ ஆவி பிடித்த கையோடு….. பகிர்ந்து விட்டேன். உங்களுக்கும் இது உபயோகமாக இருக்குமென்பதால் தான்.( வெள்ளைப் பூண்டையும் தட்டி போட்டுக் கொள்ளலாம் இதுவும் நன்மை செய்யும் அன்று பூண்டு கைவசம் இல்லாததால் நான் சேர்த்துக் கொள்ளவில்லை)


ஆர்.உமையாள் காயத்ரி.



5 comments:

  1. பயன் தரும் குறிப்பு... நன்றி...

    ReplyDelete
  2. பயனுள்ள பதிவு நண்பர்கள் அதிகம் பகிரவும். நன்றி

    ReplyDelete
  3. தயவுசெய்து எவ்வளவு உப்பு ,மஞ்சள்தூள் என்பதை கூறவு

    ReplyDelete
  4. தயவுசெய்து எவ்வளவு உப்பு ,மஞ்சள்தூள் என்பதை கூறவு

    ReplyDelete
    Replies
    1. உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
      மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
      பூண்டு - 2 பல்

      Delete