Sunday, 13 April 2014

Snacks - Sweet Somas சோமாஸ்


தேவையான பொருட்கள்

மாவு பிசைய :
மைதா - 1/2 கோப்பை
ரவை - 1 தே.க
உப்பு - 1 சிட்டிகை

பூரணம் செய்ய :
பொட்டுக்கடலை - 3 மே.க
தேங்காய்பூ - 5 மே.க
சர்க்கரை - 10.மே.க
ஏலம் - 3
முந்திரி - 10




எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
நெய் - 1 தே.க

பொட்டுக்கடலை,சர்க்கரை,ஏலம் சேர்த்து மிக்ஸியில் கொர கொரப்பாக பவுடர் பண்ணிக் கொள்ளவும்
முந்திரியை சிறிய துண்டுகளாக கட் பண்ணிக் கொண்டு 1/2 தே.க நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும்.
தே.பூவையும் 1/2 தே.க  நெய்யில் பொன்னிறமாக வறுத்து எல்லாவற்றையும் கலந்தால் பூரணம் தயார்.



மைதா,ரவை,உப்பு சேர்த்துகலந்து கொண்டு தண்ணீர் சேர்த்து பிசையவும்.
மெல்லிய வட்டமாக இட்டு பூரணம் வைத்து,மடக்கி அழகுபடுத்தவும்.







எண்ணெய்யில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்

1/2 கோப்பை மைதா மாவில் 10 சோமாஸ் வரும். பூரணம் மீதியை காற்று புகாத டப்பாவில் வைத்துக் கொண்டு வேறு ஒரு நாளில் செய்து கொள்ளலாம்.



R.Umayal Gayathri.


4 comments:

  1. இது காரமா செய்வதுண்டு.ஸ்வீட் செய்ததில்லை. செய்திடவேண்டியதுதான். அழகா செய்திருக்கிறீங்க.

    ReplyDelete
  2. இது ஒரு பிரபலமான செட்டிநாட்டு இனிப்பு வகை. சுவையாக இருக்கும். செய்து பாருங்கள். நன்றி.

    ReplyDelete