Wednesday 30 April 2014

Soya Chunks Mint Curry

தேவையான பொருட்கள்



சோயா – 1 கோப்பை
சாம்பார் பொடி – ½ தே.க
மிளகாய் தூள் – ¼ தே.க
சீரகப் பொடி – ½ தே.க
வெங்காயம் – 2
வெண்ணெய் – ½ தே.க
எலுமிச்சை சாறு – புளிப்புக்கு தக்க
தேங்காய் துருவல் – 4 மே.க
(Dry coconut powder)


தாளிக்கவேண்டியது

எண்ணெய் 1 ½ தே.க
கடுகு
உ.பருப்பு


அரைக்க வேண்டியது
புதினா – 1 கை
இஞ்சி – ½ துண்டு
பூண்டு – 2







தேங்காய் துருவலை வாணலியில் பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.






சோயாவை வெந்நீரில் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
 பின் நன்கு பிழிந்து கொண்டு 2,3 முறை தண்ணீரில் அலசி பிழிந்து வைத்துக் கொள்ளவும்.





இப்போது சோயாவில் அரைத்த புதினா, மற்றும் சாம்பார்ப் பொடி, உப்பு, சீரப் பொடி போட்டு கலந்து








10 நிமிடங்கள் ஊறவிடவும்.




தாளிக்கவும்.



வெங்காயம் போட்டு வதக்கவும். 




சோயா போட்டு மிளகாய்ப் பொடி, உப்பு போட்டு கிளறி மூடி வேகவிடவும். பின் தேங்காய் துருவல்,வெண்ணெய்,எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும். 






இப்போது சுவையான சோயா உருண்டை புதினா மணத்துடன் ரெடி.....!!!



R.Umayal Gayathri.


No comments:

Post a Comment