மாவத்தல் -
10 or 12
வெங்காயம்
– 1
தக்காளி
– 1
புளி – சிறு
நெல்லிக்காய் அளவு
மஞ்சள்தூள்
– 1/4 தே.க
கருவேப்பிலை
– சிறிது
கொத்தமல்லி
– சிறிது
அரிசி கழுவிய
நீர் – 3/4 கோப்பை
உப்பு – ருசிக்கு
அரைக்க வேண்டியவை
வர மிளகாய்
– 2 or 3
சீரகம் – 1/2
தே.க
கடுகு – 1/4 தே.க
பெருங்காயம்
- சிறிது
மாவத்தலை அலசிவிட்டு
சற்று நேரம் ஊறப் போட்டால் சீக்கிரமாக வேகும். ( நமக்கு நேரம் மிச்சம் அதாங்க )
வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
புளி கரைத்து விட்டு, மாவத்தல் போடவும். சற்று வெந்த பின்
கொதிக்க விடவும். கரண்டியால் கிண்டிவிட்டுக் கொண்டே இருக்கவும்.இல்லை என்றால் கட்டி தட்டும்.
உப்பு பார்த்து போடவும் ஏனெனில் மாவத்தலில் உப்பு உண்டு, அதேமதிரி புளிப்பும் உண்டு அதனால் தான் புளி நாம் குறைவாக சேர்த்து இருக்கிறோம்.
கூழ் பதம் வந்தவுடன் இறக்கவும். ஆற ஆற கெட்டியாகும்.
மாவத்தல் இல்லை என்றாலும் இதே போல் செய்யலாம்.
பருப்புக் கொதி தயார்....!!!
மாட்டுப் பொங்கல் அன்று இதை கட்டாயமாக செட்டிநாட்டுப் பக்கங்களில் செய்வார்கள். பொங்கல் சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
அம்மா இதை அருமையாக செய்வார்கள். சின்ன வயதில் மாட்டுப் பொங்கலை ஆவலுடன் எதிர் பார்ப்பேன்.அம்மாவின் அருமையான பருப்புக் கொதி நீங்கள் சுவைக்க இங்கே.
சாதத்திற்கு சாம்பார் போல உபயோகிக்கலாம். தயிர்சாதத்திற்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.
மாவத்தல் செட்டிநாட்டு பக்கங்களில் கிடைக்கும்.
6 நபர்களுக்கு போதுமானது.
R.Umayal Gayathri.
New one.... /
ReplyDelete