Wednesday 23 April 2014

Pine Apple Rice


பைனாப்பிள் சாதம்





தேவையான பொருட்கள் 
பாஸ்மதி அரிசி - 1 1/4 உளக்கு
பைனாப்பிள் – 2 சிறியகோப்பை
பட்டாணி – 1 சிறியகோப்பை
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
உப்புருசிக்கு

தாளிக்க வேண்டியவை
நெய் – 2 மேசைக்கரண்டி
ரீபைண்ட்எண்ணெய் – 2 தே.க
முந்திரி - 5
திராட்சை - சிறிது
பட்டை - 1
கிராம்பு – 2
பிருஞ்சி இலை – 1/2 
ஏலம் - 1




முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
.









 தாளிக்கவும்.










 வெங்காயம், பின் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்









பைன் ஆப்பிள் சேர்த்து வதக்கவும்.



பட்டாணி சேர்த்து வதக்கவும்.


பாஸ்மதி அரிசியை முன்பே 10 நிமிடங்கள் கழுவி, ஊறவைத்து கொள்ளவும். அரிசியை சேர்த்து சற்று வறுத்து







1: 2 என்கிற விகிதத்தில் தண்ணீர் சேர்க்கவும். உப்பு போடவும். குக்கரில் வேகவிடவும்.  பின் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து பரிமாறவும்.





பைன் ஆப்பிள் சாதம் கம, கம மணத்துடன் நாசிக்கும், இளங்கலராக கண்களுக்கும், சுவையாக நாவிற்கும், அழகாக சமைத்த திருப்தி மனத்திற்கும், மாறுபட்ட சமையல் இன்று என.... குடுப்பத்தார் மகிழ நீங்களும் ஆனந்தத்துடன்.....முயன்று பார்த்து comment பன்ணுங்கள்.





இதற்கு நான் ஆரஞ்சு பழ  ரைத்தா செய்தேன். அதன் குறிப்பும் Blog ல் முன் பதிவாக இட்டுள்ளேன். பார்க்காதவர்கள் பார்த்துக் கொள்ளவும்.



R.Umayal Gayathri.

1 comment:

  1. இதுவரை இதுபோல் செய்ததில்லை... குறிப்பிற்கு நன்றி...

    ReplyDelete