Friday, 30 January 2015

ஜெய் சாய் பாபா




சாய் நாமம் போதும் சாய் வேதம் போதும் 
சாய்ந்திட நாளும் அவர் பாதம் போதும்
சங்கடங்கள் இல்லை சாயம் இல்லை
சாய் நினைவின் மகிழ்வு சாகாது நாளும்

நீ பார்த்த அன்றே புண்ணிய திருநாள்
நின் அரண்மனையில் அடைபட்டு போனேன்
நீங்கவில்லை நீயென்னோடு  வாசம்
நின் கருணை பெறநா னென்ன செய்தேன்?

ஸ்திரமான நம்பிக்கை கடலாழம் தாண்டி
ஸ்தலம் நீவாச மனக்கோட்டை யானேன் 
ஸ்ருதியும் லயமும் பாடலுக்கழகாய்
ஸ்லோகம் ஸ்தோத்ரம் சாயி சாயி 






படம் கூகுள் நன்றி



24 comments:

  1. சாய் பாபா கவிதை அருமை
    தமிழ் மணம் இணைப்புடன் 1

    ReplyDelete
  2. அருமை. அருள் கிடைக்கட்டும்.

    ReplyDelete
  3. சாய் சரணம்!..
    சரணம்.. சரணம்!..

    குறைவிலா நலன் தந்து
    குருவருள் காக்க!..

    ReplyDelete
  4. http://gopu1949.blogspot.in/2015/01/blog-post_30.html?showComment=1422595191478#c1978262193866432650

    அன்புடையீர், வணக்கம். மேற்படி பதிவினில் தாங்கள் அளித்துள்ள பின்னூட்டத்திற்கு நன்றி. அதற்கு நான் இன்று பதில் அளித்துள்ளேன். அன்பின் திரு. சீனா ஐயா அவர்களின் பின்னூட்டத்திற்கும் நான் எழுதியுள்ள பதிலினை தயவுசெய்து படித்துப்பாருங்கோ.

    அன்புடன் VGK

    ReplyDelete
  5. தங்களின் இந்தப்பதிவு அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  6. சாய்பாபா கவிதை அருமை.

    ReplyDelete
  7. கவிதை அருமை, வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வாருங்கள்
      நன்றி சகோ

      Delete
  8. எனக்குப் பல அற்புதங்களை நிகழ்த்தியவர் ஷீரடி சாய் பாபா. இதுவரை மூன்று முறை ஷீரடி சென்று வந்திருக்கிறேன். இனியும் செல்ல ஆவலாய் இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தங்கள் முதல் வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி சகோ.

      Delete
  9. மரபின் இனிக்கும் சந்தத்தில் மகானுக்கான பாமாலை அருமை சகோதரி.
    தங்களைத் தொடர்கிறேன்.
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்களுக்கு பின் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

      Delete
  10. அருமையான வரிகள்! ஸத்குரு சாய் நமோ நமஹ!

    ReplyDelete
  11. வணக்கம் சகோதரி.!

    சாய் பாபா மேல் பாடல் கவி அருமை.! வரிகளின் சிறப்பு மனதை நிறையச் செய்கிறது. அவர் அருள் அனைவரும் பெற மனமாற பிராத்திக்கிறேன்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete