Wednesday, 29 August 2018

நீராகாரம் பருகலாமா../Neeraharam - The World Best Break Fast

நீராகாரம் பருகலாமா....நண்பர்களே...வாங்க
காலை காப்பி,டீ என நாம் பருகும் பழக்கம்...ஆங்கிலேய காலத்தில் இருந்து துவங்கியது தான். ஆனால் முன்பு இந்த நீராகாரத்தை தான் பருகினார்கள். இதை நமக்கு பிடித்த மாதிரி கலந்து அருந்தலாம்.


முதல் நாள் பழைய சாதத்துடன்:
1.சின்னவெங்காயம் ,பச்சைமிளகாய் சேர்த்தும்,
2. நார்த்தங்காய் ஊறுகாய்,அல்லது எலுமிச்சங்காய் ஊறுகாய், சின்னவெங்காயம் சேர்த்தும்
3. சீரகம், பெருங்காயம், சின்ன வெங்காய சேர்த்தும்
4. ஊறுகாய்களில் - மாவடு மண்டி, நெல்லிக்காய் மண்டி சேர்த்தும் பருகலாம்.
வெங்காயம் பிடிக்காதவர்கள் அதை தவிர்த்து அருந்தலாம்.
நன்றி






நன்றி நண்பர்களே...



11 comments:

  1. அருமையான பதிவு,நீராகாரத்தை அறிந்தேன் சகோ,
    யூடியூப் சேனலையும் சப்ஸ்க்ரைப் பண்ணியாச்சு.😄😄😄

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும், சப்ஸ்க்ரைபுக்கும் நன்றி அஜய்

      Delete
  2. நான் சிறிய வயதில் தினம் நீராகாரம் பருகினேன்.

    ReplyDelete
    Replies
    1. இப்போது புரிகிறது சகோ உங்களின் பன்முகத்திறமையின் ரகசியம்...
      மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சகோ.

      Delete
  3. வணக்கம் சகோதரி

    அருமையான பானம்.. வெயில் காலத்துக்கு மிகவும் ஏற்றது. உடல் சூட்டைத் தணித்து குளுமையடையச் செய்யும். எனக்கு மிகவும் பிடித்தது. செயல்முறைகள் நன்றாக இருந்தது. மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வான வருகைக்கும், கருத்திற்கும், பார்த்து அதன் செயல் முறையை பாராடியமைக்கும் நன்றி கமலா.

      Delete
  4. நண்பர்கள் அனைவருக்கும்...

    சில காலங்களாக நண்பர்களின் தளத்தில் என்னால் கருத்திட இயலவில்லை. கருத்திட்டு வெளியிடும் சமயம் வெளியாக வில்லை. முயன்று பார்த்து விட்டு, அடுத்தவர் தளத்தில் அவர்களுக்கு சொல்லலாம் என்றால் என்ன ஆச்சர்யம் மற்றவர் தளத்தில் அவர்களுக்கு பதிவிட்டு விட்டு, அடுத்தவர்க்கு சொல்ல நினைக்கும் போது மக்கர் ஆகிடுது.

    ஆகையால் படித்து விட்டு வந்து விடுகிறேன். இன்று காலையில் கணிணியார் நல்ல மூடில் இருக்கிறார் போல சென்ற தளங்களுக்கு ஒத்துழைப்பு நல்கினார். இனியும் நல்குவார் என நினைக்கிறேன். பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    உங்கள் அனைவருக்கும் தெரிவிக்க நினைத்தேன்.நன்றி

    ReplyDelete
  5. நன்றாக இருக்கிறது.

    நீராகாரம் என்றால் தண்ணீர் என்று மட்டும் நினைத்தேன், சாதமும் இருக்கே!
    நான் அடுத்த தடவை இப்படி செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  6. எளிமை + சுவை.

    அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் சகஜமான காலை ஆகாரம். ஜஸ்ட் ஒரு பச்சை மிளகாய் வித் சின்ன வெங்காயம்!

    ReplyDelete
  7. நீராகாரத்தின் சுவையே தனி தான்! இந்த காலத்தில் நிறைய பேருக்கு அதன் மகிமை பற்றி தெரியாது. உங்கள் பதிவு அதைப்பற்றி தெரிந்து கொள்ள உதவும். சிறப்பான பதிவு!!

    ReplyDelete
  8. சுவையான உணவு. முன்பெல்லாம் இப்படி நிறைய அருந்தியதுண்டு. இப்போது இல்லை.

    ReplyDelete