Sunday, 19 August 2018

தூதுவளை ரொட்டி / Thoothuvalai Roti / Healthy Snacks

 கற்பக மூலிகைகளில் தூதுவளையும் ஒன்று. 

கொடியாக படரும். சிறுசிறு முட்கள் தண்டு, இலைகளில் காணப்படும். இதன் இலை, பூ,காய், வேரென அனைத்தும் மருத்துவ பயன் உடையது.

 கால்சியம் நிறைந்து இருக்கிறது.

இதை சாப்பிடுவதால் சளி, இருமல், இரைப்பு, மண்டையில் நீர்கோர்த்தல், வாதம், பித்தம், காது மந்தம், இன்னும் பிறவற்றையும் சரி செய்யும். 


தூதுவளை  இலைகளில் உள்ள முட்கள், நரம்புகளை நீக்கி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் இட்டு நன்கு அரைத்து விட்டு சிறிது நீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்  கொள்ளவும். 


தேவையானவை

பச்சரிசி மாவு - 1 கப்
தூதுவளை இலைகள் - 1 கையளவு
மிளகு,சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - ருசிக்கு
சின்ன வெங்காயம் - 10 ( பொடியாக நறுக்கிக் கொள்ளவும்) 
 

செய்முறை

வெங்காயம்,உப்பு, மிளகுசீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

மாவை சேர்த்து நன்கு கலந்து விட்டு தூதுவளை அரைத்த விழுதை  கொஞ்சம், கொஞ்சமாக  சேர்த்து பிசையவும். 

15 நிமிடங்கள் ஊற விடவும். பின் உருண்டைகளாக உருட்டி வாழை இலையிலோ அல்லது பிளாஸ்டிக் சீட்டிலோ   சிறிது எண்ணெய் தடவி விட்டு உருண்டையை வைத்து தட்டவும்.

தோசைக்கல்லை காய வைத்து விட்டு இதை இட்டு எண்ணெய் வார்த்து வேக விடவும். திருப்பி போட்டும் வேகவிடவும்.

கண்களால் செய்முறையை காண கீழ் உள்ள படத்தை சொடுக்கவும்.......





             மருத்துவ குணம் கொண்ட தூதுவளை ரொட்டி சாப்பிட தயார்......!!!


பொருமையாக படித்தும், பார்த்தும், கருத்திட்டும்,  சென்ற அன்புள்ளங்களுக்கு நன்றி.

please subscribe,like,share,comment my  youtube channel .

Thanks Friends.



6 comments:

  1. பார்க்கவே அருமையாய் இருக்கிறது. சாப்பிடும் ஆவல் வருகிறது. என் வேண்டுகோளை ஏற்று செய்முறை இங்கு தளத்திலும் பகிர்ந்திருப்பதற்கு நன்றி. தூதுவளை நான் சாக்லெட்டாக வாங்கி மருத்துவ உபயோகத்திற்கு சாப்பிட்டிருப்பதோடு சரி!

    ReplyDelete
  2. தூதுவளை ரொட்டி - பார்க்க நன்றாக இருக்கிறது. இங்கே கிடைப்பதில்லை. ஊருக்கு வந்தால் செய்து பார்க்க வேண்டும்.

    மிட்டாய்களாக கிடைக்கிறது - நம் ஊரில் தான்! ஊரிலிருந்து வரும்போது சில சமயம் வாங்கி வருவேன்.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    தூதுவளை ரொட்டி செய்முறை மிகவும் நன்றாக உள்ளது . தூதுவளையின் பயன்களை கூறி. அதை எப்படி உபயோகப்படுத்துவது என்பது பற்றியும் தெளிவாக கூறியிருப்பது மிகச் சிறப்பாக இருந்தது. நானும் தூதுவளை மாத்திரை களை ஜலதோஷம் சமயத்துக்கு மட்டும் பயன்படுத்தி உள்ளேன். இந்த மாதிரி சமையல் செய்ததில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    ReplyDelete
  4. கண்டிப்பாக இதை செய்ய சொல்ல வேண்டும்... நன்றிங்க...

    ReplyDelete
  5. இந்த ரெசிப்பி செய் முறையை யூ ட்யூபில் பார்த்தேன்

    ReplyDelete
  6. My mom used to give me during my childhood days...THANKS FOR THE POST. The oil to be used is gingely oil.

    ReplyDelete