அதிகாலை வேளை
கண்களுக்கு குளுமை
மனதிற்கு களிப்பு...
பிரபஞ்சத்துடன் பிடிப்பான இணைப்பு
பிரியாது தினமும் பிரிந்து
மறுநாள் கூடி அளவளாவ
ஆனந்தமாய் இருக்கு...
மனம் விட்டு பேசி மகிழ
மறுமொழி கூறாமல் கூறுமது
குழைந்த மேகமும்
இளஞ்சூடு கதிரும்
வருடும் வாடைக் காற்றும்
நடை போடும் காலும்
தனிமை உலகமாய் தவம் செய்யும் மனமும்
அள்ளக் குறையாத ஆனந்தமாய்
அள்ளிக் கொண்ட சக்தியுமாய்
அவிழ்ந்த உடல் இறுக்கமுமாய்
மேம்பட்ட மன உறுதியுமாய்
தனிமை உலகமாய் தவம் செய்கிறது மனது....
எனது தளம் வந்து வாசித்து சென்ற அனைவருக்கும் நன்றிகள்
புகைப்படம் நன்றி கூகுள்
புகைப்படம் நன்றி கூகுள்